Thursday, September 15, 2011

இந்த மனுசங்களே இப்படிதான் ,


இந்த  மனுசங்களே  இப்படிதான் , என்னமோ  காக்கா  கூட்டங்கனு  சொல்றாங்களே ?காக்காங்க  நாம  இல்லேன்னா  ஒரு  நாள்  ஊரே  நாறிடும் !

இந்த  மனுசங்களே  இப்படிதான் ,நாய்பிழைப்புங்கறாங்க   நாயிங்கன்னா என்னஇளக்காரமா போச்சா? நாம காவல் காக்கலைன்னா இவங்க சொத்தெல்லாம் சொத்தையா போயிடும்!

இந்த  மனுசங்களே  இப்படிதான் ,பிணந்தின்ன கழுகுன்னு சொல்றாங்க, நாம பிணத்தை தின்னலேன்னா ,மனுஷங்க அடிச்சிட்டு மடிவாங்க!

இந்த  மனுசங்களே  இப்படிதான் , பசுத்  தோல் போர்த்திய புலிங்கறாங்க, இவங்க போடாத வேசமா நாம போடுறோம்?
இந்த  மனுசங்களே  இப்படிதான் , கொரங்கு மாதிரி தாவரான்னு சொல்றாங்க,இந்த அரசியல் வாதிங்க தாவரத  விடவா நாம தாவிடறோம்?
 இந்த  மனுசங்களே  இப்படிதான் , நரி மூஞ்சிலே முழிசேங்கறாங்க,ஆனா ஆனா ஊன்னா,நரி மாதிரி புத்தின்னு  நக்கலடிக்கறாங்க!

இந்த  மனுசங்களே  இப்படிதான் , பாம்புக்கு பாலை வாத்தா மாதிரிங்கறாங்க ,நமக்காவது வெறும் பாலு தான், ஆனால் இவங்க மனுசங்களுக்கு, பாலு, மோரு, ஜூசு,சாராயம்,'வைன்'நு ஊத்திக்கொடுத்திட்டு நம்மளை உதாரணம் காட்டுறாங்க?
 
இந்த  மனுசங்களே  இப்படிதான் ,வெண்கலக் கடையிலே யானை புகுந்த மாதிரிங்கறாங்க,இவங்க கிட்டி பார்டியிலேயும் கூட்டத்திலேயும் போடாத கூச்சலா ?

இந்த  மனுசங்களே  இப்படிதான் , பூனை குறுக்க வந்தா மாதிரிங்கறாங்க , நாம போகும்போது இவங்க குறுக்கால வந்தாநாம ஏதாவது சொல்றோமா?
இந்த  மனுசங்களே  இப்படிதான் , கிளியை வளர்த்து பூனை கையிலே கொடுத்தா மாதிரிங்கறாங்க, இவங்க கிழிய வளர்த்து கிளி கிட்டேயே கொடுத்தா கூட என்ன வாழ்ந்ததாம்?

Wednesday, September 14, 2011

பொருந்தின பொய்!.

சங்கர ராமன்  அவன் பையன் சதீசுக்கு காலேஜிலே அட்மிசன் வாங்க அவனுடைய காலேஜ் பிரெண்ட் அசோகனை பார்க்க அவன் ரூமுக்குள் போனான் .உள்ளே வரச்சொல்லி உட்காரும்படி சைகை காட்டிய அசோகன் போனில் பிசியாக பேசிக் கொண்டிருந்தான் .
அங்கும் இங்கும் நோட்டம் விட்ட சங்கரராமனின்  கவனம்  திடீரென்று அசோகன் பேசுவதில் விழுந்தது .

"என்ன சார் நீங்க,யார் யாரெல்லாமோ ,திடீர்னு உங்களை எனக்கு தெரியும் சார் , நான் உங்க கூட படிச்சேன், வேலை பார்த்தேன் ,உங்க அப்பாவை எனக்கு தெரியும்னு அட்மிசன் டைமாப் பார்த்து வந்து கழுத்தறுக்கிறீங்க! சாரி சார், நான் யாருக்கும் சிபாரிசு செய்வதாய் இல்லை  . "

கோபமாக போனை வைத்த அசோகன் சேரை  திருப்பி ," சொல்லுங்க சார், உங்களுக்கு என்ன வேணும்"

கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதுஎன்ற யோசனையிலிருந்து  விடுபட்டு அசோகன் போனில் பேசியதை  கேட்டதிலிருந்து அப்படியே இடிந்து போய் உட்கார்ந்த சங்கரராமன்  சுதாரித்துக்க் கொண்டு, ஒரு வழியாக வந்த விஷயத்தை மறைத்து சொன்னான்.

"என் பையன் ப்ளஸ் டூ முடிச்சிட்டு இப்போ காலேஜ் அட்மிஷனுக்கு ட்ரை பண்ணிண்டு இருக்கான். அவன் நல்ல மார்க்கும் வாங்கி இருக்கான் , என்ன கோர்சிலே சேரதுன்னு  உங்களை மாதிரி விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட அட்வைஸ் கேக்கலாமேன்னு தான் உங்க கிட்ட வந்தேன்."

தைரியமாக பொய் சொன்னாலும் பொருந்தின பொய்யாக சொல்லவே அது மனசுக்குப் பிடித்தது .உள் மனசுக்குள் ஒரு போன் காலும் ஒருத்தரும் அசோகனை டிஸ்டர்ப் செய்யக்  கூடாதுன்னு மனசுலே வேண்டிக் கொண்டிருந்தான் சங்கர ராமன்.

ஆனால் விதி யாரை விட்டு வச்சது? அப்பதானா பேப்பர்  சங்கர ராமன் பக்கம் பறக்கணும்?  உடனே அதை குனிந்து எடுத்து டேபிள் மேல் வைக்கப் போன அவன் கையை பார்த்த அசோகன் ஒரு நிமிஷம் அதிர்ச்சி கலந்த ஆவலுடன் எழுந்து நின்று , 'நீ.... நீங்க..... சங்கர்..... இல்லை.....?என்னைத் தெரியலையா?'

என்ன பதில் சொல்வது, தெரியும்  என்றால் சீட் கேட்கத்தான் வந்தோம்னு ஆகிவிடும் , பேசாம,தெரியாதுண்ணே சொல்லிடலாம் என்று மனசில் போராடிக் கொண்டிருந்த சங்கரராமன் , 'தெரியலையே சார், நீங்க யாருன்னு?'

'நான்தான் உன் கிளாஸ் மேட் அசோகன்' புட்பால் அசோகன்னு' பட்டப் பேரு, நாம்ப ரெண்டு பேர் தான் ஸ்கூலிலேயே 'பெஸ்ட் ப்ளேயர்ஸ்' .என்ன மறந்துட்டியா?  நல்ல காலம் பேப்பர் பறக்கவே உன்னை எனக்கு அடையாளம் தெரிஞ்சது , இல்லன்னா நான் ஒரு பெஸ்ட் ப்ளேமேட்டை மிஸ் பண்ணியிருப்பேன் '.

'ஒகோ, இப்ப ஞாபகம் வந்திடிச்சு ,நம்ம ரெண்டு பேர் வீட்டிலேயும் விளயாடக்கூடாதுன்னு ஒரு போர்கொடியே எடுத்தாங்க .'

'கரக்ட் , உன் பையன் நல்ல புட்பால் விளயாடுவானோ உன்னாட்டம்?'

'ஆமாம் சார்'

'இது என்ன சாரு, போருன்னு , இனிமே நம்ம ரெண்டுபேரும் பழைய படி பிரெண்ட்ஸ் , சரியா?'

'சரி உட்காரு , என்ன சொன்னே , உன் பையனுக்கு என்ன கோர்சிலே சேரணும் அவ்வளவுதானே? நீ ஒன்னு செய் ,பேசாம அவனை அப்ளிகேசனோட என்னை வந்து சனிக் கிழமை பார்க்கச் சொல்லு..அவன் வரதுக்கு முன்னாடி  நீ எனக்கு ஒரு ரிமைன்டர்  கால் பண்ணு .
 டோன்ட் வொரி , எல்லாம் நான் பார்த்துக்கறேன்.' 'என்ன நீ ஒன்னும் பேச மாட்டேன்கறியே? நானே வளவளன்னு பேசிண்டு இருக்கேன்?'

சங்கர ராமனுக்கோ நடக்கறது கனவா, இல்லை நிஜமான்னு 'விஜய்'டிவி மாதிரி கேள்வி கேட்கத் தோனித்து.என்ன பதில் சொல்வான்?கும்பிடப் போன தெய்வம் எதிரே வந்து என்ன வேணும்னு மட்டும் கேட்காம, கூடவே வரேன்னு சொன்னால்!

'அது ஒன்னும் இல்லை சா... சாரி அசோக், நீங் ...நீ ..சொன்னா மாதிரியே அனுப்பறேன். தப்பா எடுத்துக்கலைன்னா ஒன்னு கேட்கலாமா?, உ.....ங்களுக்கு எப்படி தெரிஞ்சுது, நான் தான் சங்கர்னு?'

அது ஒன்னும் பெரிய விசயமே இல்லை, நீ குனிஞ்சு பேப்பரை எடுத்து டேபிள்  மேல வைக்கரப்போ உன் கையில் ஆறு விரல் இருப்பதை பார்த்தேன். நீ கை குலுக்கும்போதேல்லாம்உன்  இரண்டு கட்டை விரல் வெளியே தெரிவது ஞாபகம் வந்தது .அதான் சட்டுன்னு உன்னைக் கண்டுண்டேன்.'

அப்பா, இப்பவாவது இந்த கட்டை விரல் உதவிக்கு வந்ததே ன்னு நினச்சிண்டே அசோகனுடன் கை குலுக்கி விடை பெற்று வெளியே வந்த பின் பெருமூச்சு விட்டான் சங்கர ராமன்.

Monday, September 12, 2011

சுந்தர காண்டம் 36 வது ஸ்லோகம்/அத்யாயம்



 உங்கள் எல்லோருக்கும் சுந்தர காண்டம்  36 வது ஸ்லோகம் படிக்க ரொம்ப நேரம் ஆகும் அதனால், இந்த சுருக்கிய  36 வது காண்ட அத்யாயத்தை படித்தால் காரிய சித்தி ஆகும் அதனால் நீங்களும் படிக்கவும் , மத்தவர்களுக்கும் கொடுக்கவும் .

                                                     ஜெய் ஹனுமான்ஜி!


Sunday, September 11, 2011

அடி கள்ளி சுமி!

  
ரகுவிற்கு  பொண்டாட்டி சுமி   பெருமை  தாங்காது  ,எப்பப்பாரு அவளைப் பத்தியே பேசிண்டு இருப்பான். இவன் ஒரு சோம்பேறி ,தப்பி தவறிக் கூட மூளையை உபயோகிக்க  மாட்டான் ,அப்பேற்பட்டவனுக்கு சுமி மாதிரி நிந்து, நிதானித்துயோசிச்சு முடி வெடுக்கிறா மாதிரி பொண்டாட்டி வந்தா ஏன் புகழ மாட்டான்?

 ரகுவிற்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆகிறது.அவனுக்கு தனி குடித்தனம் போனம்னு ரொம்ப நாளா ஆசை,ஆனால் சுமிஅதுக்கு ஒத்துக்கலை.ரகு பொறுக்காமல் அம்மாவிடம் சொல்லிவிட்டான்.
............................................................................................................

நாராயணசாமி வீட்டிற்குள்ளே வந்ததும் வராததுமாக ,"அடியே லட்சுமி, உனக்கு விஷயம் தெரியுமோ? " "நம்ம  ரகு 'குடை' நாயுடுகிட்ட   சின்மயா நகர்ல இரண்டு பெட் ரூம் வீடு பாக்கச் சொல்லியிருக்கான் போல,அவர் வந்து போஸ்ட் ஆபிசில என்னைப் பார்த்து கேட்கிறாரு.நான் என்ன சொல்ல?"  "ஏதோ பேசி மழுப்பிட்டேன்"

  லட்சுமி," அதுக்கு என்ன இப்போ ?"

 "நம்ம கிட்ட கூட சொல்லாம"

"அவனுக்குதான்னு யாரு சொன்னா? " "அது அவன் பிரண்டுக்கு கூடஇருக்கலாம் இல்லையா?"

"வாஸ்தவம் தான், நீ சொல்றது"
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ராத்திரி சமையல் ரூம் வேலையை முடிச்சிட்டு பெட்ரூமிற்குள்  போன சுமியை எப்ப வருவான்னு காத்திருந்த ரகு இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகனும்னு , சுமி கதவை சாத்தக்கூட விடாம , அவளிடம் பொரிந்து தள்ளி விட்டான்.

 "என்ன சுமி, நீ ?எத்தனை நாள் தான் சொல்லிண்டே இருக்கறது?  என்ன பண்ணுவையோ  எனக்கு தெரியாது, அடுத்த மாசம் நாம, தனிக்  குடித்தனம் போறோம்"  

"உங்களுக்கும் நான் அதே பதிலைத்தான் சொல்லப் போறேன் , என்னால தனிக் குடித்தனத்துக்கு ஒத்துக்க  முடியாது"

"அது தான் ஏன்?"

அப்போ பார்த்து அந்தப்  பக்கம் வந்த லட்சுமி, சுமி  ஏன் தனிக்குடித்தனம் வேண்டாம்கறான்னு தெரிஞ்சிக்க ஆசைப் பட்டதினால் ஒளிந்து நின்று கேட்டாள்.

" இதப் பாருங்க ரகு, நான்வேண்டாம்னு சொன்னால் அதன் பின்னாடி ஒரு அர்த்தம் இருக்கும்." "இப்ப உங்க அக்கா பூஜாவையே எடுத்துக்கோங்க , இரண்டு குழந்தையை  வச்சிண்டு  அம்மா, அப்பா ,மாமியார், மாமனார் உள்ளுருலேயே இருக்கும்போது வீம்புக்குன்னுதனிக்  குடித்தனம்  போனாங்க."

"இப்பஅதுக்குஎன்ன? " "அதுதான் தெரிஞ்ச விசயமாச்சே?"

 "அப்படி வாங்க வழிக்கு , அவங்க இப்ப  ரொம்பவே தனியே திண்டாடுறாங்க." "தானா வீம்புக்காக தனியா  போனதினால அவங்களால திரும்பிஒண்ணா சேர்ந்து இருக்க  வாயைத் திறந்து கேட்க முடியலை." வறட்டு கெளரவம் இடம் கொடுக்க மாட்டேங்கறது." இருந்தாலும் கஷ்டப்படறாங்க.. நமக்கு அந்த கஷ்டம் வரக் கூடாதேன்னு தான் நான் தனிக்குடித்தனம்வரமாட்டேங்கறேன் "

"ஆனால் நமக்கு இப்போ குழந்தை குட்டி இல்லையே? " அதுங்க வரும்போது பார்த்துக்கலாம் " நான் குடை  நாயுடுகிட்ட வீடு பாக்கசொல்லிட்டேன்"

 "என்ன தான் அவசரமோ உங்களுக்கு , நீங்கள் நினச்சாலும் இப்போ என்னால எங்கேயும் வர முடியாது." 

"ஏங்கறேன்?" 

"ஏன்னா  நமக்கு குட்டி ரகு வரப்  போறான் ,இன்னும் எட்டே மாசத்தில ..."

"அடி  கள்ளி , இதை சொல்றதுக்கா இவ்ளோ பீடிக?"  "வா, வா, குட்டி சுமிக்கிட்ட கொஞ்சம் கொஞ்சனும் மொதல்ல,"

"பெரிய ஆளு தான் நீ, என்னடா இன்னும் விளக்கத்தை காணமேன்னு நினச்சேன் , பரவாயில்லை , நல்லாவே யோசிக்கறே!

 இது அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த லட்சுமிக்கு இரட்டிப்பு சந்தோசம். இருக்காதா பின்னே ,தனிக்குடித்தனம் போச்சு ஆனால் கையில குழந்தை வரப் போறது , யார்கிட்டயும் , சொல்லக் கூடாது ,சுமியா சொல்லட்டும்.வந்த சுவடோ, ஒட்டுக் கேட்ட சுவடோ தெரியாம பூனை மாதிரி வந்த வழியேதிரும்பிப் போனாள்

[Gymnasium for brain ]கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு


கிழே இருக்கும் விளக்கங்கள் அனைத்தும்  வலை தளத்திலிருந்து அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த வலைத்தளம் சிறுவர் பெரியவர்களுக்கான நல்ல வலைத்தளம்.உள்ளே நுழைந்து பயனடையுங்கள் .

Gymnasium for brainஎன்றால் உடற்பயிற்சி போல் மூளைக்கு பயிற்சி.அப்படி என்ன அவசியம் வந்து விட்டது திடீரென்று?போட்டி, போட்டி, போட்டி,எங்கும் போட்டி, எதிலும் போட்டி!

வாயுவேகம், மனோவேகத்தில் சிந்திக்க வேண்டிய கட்டாயம். சாதிக்க வேண்டுமா?
உடற்பயிற்சிக்கு இணையாக புத்தியை கூர்படுத்த பயிற்சி மிக மிக அவசியம்.அதற்கான களமே www.gymnasiumforbrain.com

இன்றைய சூழலுக்கு மிகப்பொருத்தமாக "
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு"  என்று  அன்றே சொல்லிப் போனார்.

உலகளாவிய போட்டியினை சமாளிக்கும் முகமாக, வேலை கொடுப்பவர்களும் தங்களுக்கு ஏற்ற திறமையுள்ளவரைத்  தேடி அலைகின்றனர்.
திறனாய்வுத்தேர்வு  நடத்துகின்றனர்.
அதே நேரம் மாணவர்களும் நல்ல வேலை வாய்ப்பிற்காக தங்களது பாடத்திட்டத்திற்கும் வெளியே பட்டறிவையும், பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ள அதிகபட்ச முயற்சி மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
ஆகவே ஒருவனது வளர்ச்சி படிப்பறிவுடன் , அவனது அலசி ஆராயும்அறிவு ,சமயோசித அறிவு, இடத்துக்கும், தேவைக்கும்  தகுந்த மாதிரி கற்றதை உபயோகிக்கும் திறமை இவற்றை பொருத்தே அமைகிறது.

திருமதி. சீதாலக்ஷ்மி சேஷாத்திரிநாதனும், தன்னால் இயன்ற அளவு, இந்தஉலகளாவிய போட்டியை எதிர் கொள்ள நம் இளைய தலைமுறைக்கு உதவ வேண்டுமென்று கனவு கண்டார்.அக்கனவின் வெளிப்பாடே www.gymnasiumforbrain.com

இந்த இணையதளம் எந்தெந்த வகையில் நமக்கு உதவுகிறது ?

புதிர்கள்: அறிவுத்திறனை சோதிக்கும் தேர்விற்கான (aptitude test )
                    புதிர்களும்
அவற்றுக்கான உதவிக்குறிப்புடன் , விடையும்
                    வழிமுறைகளும்.


வேக கணிதம் : கணிதத்தின் விரைவான வழிமுறைகள்.

கோலங்கள் : உங்களுக்குத் தெரியுமா! கோலம் என்பது மனதையும்
                           உடலையும  ஒருமைபடுத்தும் பயிற்சி என்பது.
                          அதனை ஒவ்வொரு படியாக
பயிலலாம். 
                           
சிறுவர் பகுதி: சிறார்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் முகமாக
                             அவர்கள் கேட்கும் கேள்விகள், சிறிய பயிற்சிகள்,
                             கதைகள்.


வலைதளத்திற்குக் கிடைத்த விருதுகளும் அங்கீகாரமும் :

அமெரிக்கநூலக விருதினையும், ஆஸ்திரேலிய கல்வித்துறையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

http://www.gymnasiumforbrain.com/ala.htm
http://www.gymnasiumforbrain.com/edna.htm

 மேலும் Education world என்ற வலைத்தளம் இத்தளத்திற்கு "A+"
விருதினை வழங்கியுள்ளது.

http://www.gymnasiumforbrain.com/educationworld.htm

எந்த ஒரு நல் முயற்சியும் மீடியாக்களின் ஆதரவு இல்லாமல் மக்களைச்  சென்றடைய முடியாது. அவ்வகையில் www.gymnasiumforbrain.com என்ற இலவச இணைய தளமானது நமது சமுதாயத்திற்கு  பயன்படும் வகையில்  அமைவதற்கு ஊடகங்கள் செய்துள்ள உதவி பெரு மதிப்புடையதும்  பாராட்டுக்குரியதாகும். 

அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம்.

அன்பர்களே, நண்பர்களே, மாணவச்செல்வங்களே,

உங்களது புத்தியை மேலும் கூர்மை படுத்திக் கொள்ளத் தயாரா?  
 
வாருங்கள் இணைந்து செயல்படுவோம்.

Wednesday, September 7, 2011

அய்யோ பாட்டி வரா ! பாகம் 1


சுமதி பாட்டியைப் பற்றியும் கிச்சா பேமிலி பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சு  கொள்ள "சுதா இல்லம் உள்ளே நுழைவோம் ,வாங்க போகலாம்.  

 சுமதி பாட்டி தாமோதரன் தம்பதிக்கு பன்னண்டு  வருஷம் கழிச்சு பிறந்த ஒரே மகன் பாலாஜி , அந்த பாலாஜிக்கு ஆண்டவன் கிருபையால் ! எட்டு  குழந்தைகள் அதில் ஒரு  இரட்டை ஆண் குழந்தைகள் !!! அவர்கள் குழந்தைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தபிறகு பாலாஜி நாப்பது வயதை நெருங்கும் போது  எட்டாவதாக  பிறந்தவன் தான் , கிருஷ்ணா [கூப்பிடுவது கிச்சா ]. கிச்சாவிற்கும் அவன் முதல் அண்ணனுக்குமே பதினைந்து வருஷ வித்யாசம் .

இவனுக்கு மூணு அக்காமார்கள் நாலு அண்ணன் மார்கள் , இதில் ஒரு அண்ணன் ஒரு அக்கா மேலோகம் போயாச்சு.மெட்ராஸில் மத்த பேரன் பேத்திகள் இருந்தாலும் பாட்டி கிச்சா   வீட்டில் தான் வந்து இருக்கணும், இருப்பாள் .இதில் துளி   சந்தேகமும் இல்லை.பாலாஜி,வசந்தா தம்பதிகள் இரண்டாவது பெண்ணிடம் கொஞ்ச நாள் இருப்பதற்காக சிங்கப்பூர் போயிருக்கிறார்கள் .

இந்த கிச்சா தான் சுமதி பாட்டிக்கு கொள்ளி போடணும், அதனால அவன் என்ன கஷ்டமா இருந்தாலும் சுமதி பாட்டியை நல்லா பாத்துக்கணும் , சும்மா இல்லை பத்து ஏக்கரா அரிசி சாகுபடி நிலம், இரண்டு பெரிய வீடு , முப்பது சவரன் தங்க நகை ,பத்து கிலோ வெள்ளி பாத்திரம் எல்லாம் இவனுக்கு தான் வரப் போறது .

 சுமதி பாட்டி கிராமத்திலேயே பிறந்து வளர்ந்ததால் ,ரொம்பவே மடி ஆசாரம்.இதெல்லாம் 'ஜான்' க்கோ [ஜானகி  யாருன்னு சொல்லலையே!, ஜானகிங்கறது வேற யாரும் இல்லை, நம்ம நாயகன் கிச்சாவினுடைய தர்மபத்தினி ஜானகிஎன்கிற 'ஜான்'தான். கிச்சா செல்லமாக அவளை 'ஜான்' னு, கூப்பிடுவான், அவளும் அவனை 'கிச்'னு கூப்பிடுவாள். கிட்ட தட்ட வீட்டில்எல்லோருக்கும் செல்லப் பிள்ளை கிச்சா  தான்.அவனை யாரும் குறை கூற மாட்டார்கள் ,ஜானகியையும் கடைக்குட்டி குழந்தை போலே செல்லமாகதான் பார்ப்பார்கள். 

  சுமதி ,தாமோதரன் என்கிற  பெயரின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து   "சுதா  இல்லம் "னு வீட்டிற்கு பெயர் இட்டார்கள் .இந்த வீட்டிற்கு  கிச்சா பாதியும்  சுமதி  பாட்டி மீதி பாதியும் போட்டு கட்டினார்கள்..
*                                                                      *                                                                       *
"காலங்  கார்தாலையிலே யாரு அது போன் பண்ணி உசிரை வாங்குறது?" எரிச்சலோடு சொல்லிக் கொண்டே வந்த கிச்சாபோனை எடுத்து "ஹலோ"சொன்னான்.

 கார்தாலை போன் என்னவாக இருக்கும் , இப்போ யாருக்கு டைம் சரியில்லேன்னு யோசிச்சிண்டே கிச்சா பக்கத்தில் வந்த ஜான் பாரலல் லைனை எடுத்து கூடவே  ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

   எதிர் முனையில் சுமதி பாட்டின்னு  தெரிந்ததுமே , அவளுக்கு வயத்தைக் கலக்க ஆரம்பிச்சிடுத்து.  இது நிச்சயம் சாதாரண விஷயம் இல்லை, பாட்டி  ரொம்ப நாளாவே மெட்ராஸ் வரணும்னு சொன்னது ஞாபகம் வந்தது .ஜான் மனதில் நினைத்துக்  கொண்டே இருந்த   சமயத்துக்குள் கிச்சா போனில் பாட்டியுடன்  பேசி முடித்து விட்டான் .

விஷயம் இது தான்  , அடுத்த வாரம் பாட்டியின் நெருங்கிய சிநேகிதி சிந்தாமணியின் கொள்ளு பேரனுக்கு பூணல் அதனால் பாட்டி மெட்ராஸ் வந்து கிச்சா வீட்டில் தங்கி பூணலை  முடித்துக் கொண்டு சில நாள் இருந்துட்டு கணபதிபுரம் திரும்பிப்  போவதாக இருக்கிறாள்.

இனி மேல் தான் இருக்கு வேடிக்கை!!!!!!!!!!!!!!!
.

Sunday, September 4, 2011

கடி ஜோக்ஸ் 2



ரஷ்யா-ல  ஏன்  கொசு -வே  இல்லை ?
 ஏன்னா, அங்க  கொசுக்கு  வேற  பெயர் .

************************************************** *****
ஒரு  இங்கிலீஷ்  தெரிஞ்ச  மாடு (cow) தியேட்டர்  பக்கம்
 போறது . அங்க தியேட்டர்   கதவை  கடிக்க  ஆரம்பிச்சுடுது ! ஏன்?
என்ன , கதவுல  "புல் "-ன்னு  எழுதிருக்கு .

************************************************** *****

ஸ்பின்னருக்கு குழந்தை பிறந்தால் என்ன  பெயரு  வைப்பார் ?
 பாலா  திருப்புர  சுந்தரி


************************************************** *****
  ஒரு மாமி  இட்லி -யை  தலைல  வச்சிண்டா . ஏன்?
ஏன்னா  இட்லி பூ  போல  இருந்துது  .

*******************************************************
நாம்  இல்லாம  செருப்பு  நடக்க  முடியாது.

ஆனால் செருப்பு..இல்லாம நாம நடக்க முடியும் .

*****************************************

இட்லி  மாவை  வச்சு  இட்லி போடலாம் 
  சப்பாத்தி  மாவை  வச்சு சப்பாத்தி  போடலாம்
  ஆனால் கடலை  மாவை வைத்து  கடலை போட முடியுமா?

****************************************************************

என்னதான் மனுஷனுக்கு  வீடு , வாசல், காடு , கரைன்னு 
எல்லாம்  இருந்தாலும்  ரயில் ஏறனும்னா  பிளாட்பாரத்துக்கு  வந்து
தான் ஆகணும் . இதுதான்  வாழ்க்கை

***********************************************************

பஸ்  ஸ்டாப்  கிட்டே  வெயிட்  பண்ணா பஸ்  வரும்   ஆனா
     புல் ஸ்டாப் கிட்டே வெயிட் பண்ணா புல்லு  வருமா .?

************************************************************

 என்னதான் பொண்ணுங்க  பைக்  ஓட்டினாலும் 
 ஹீரோ  ஹோண்டா  ஹீரோயன் ஹோண்டா ஆகிடாது .
அதே மாதிரி  பசங்க  என்னதான் வெண்டைக்கா  சாப்டாலும் 
 லேடீஸ்  பிங்கர்  ஜென்ட்ஸ்  பிங்கர் ஆகிடாது .

*****************************************************************.

டிசம்பர் 31 க்கும்  ஜனவரி 1   ஒரு  நாள்தான் வித்யாசம்  ஆனா  ஜனவரி 1 க்கும்  டிசம்பர்  31 க்கும்  ஒரு வருஷம்  வித்யாசம்.

 ******************************************************************************

  பஸ் ஸ்டாண்ட்ல   பஸ் நிக்கும் ,
  ஆட்டோ  ஸ்டாண்ட்ல ஆட்டோ  நிக்கும்,
   சைக்கிள்  ஸ்டாண்ட்ல  சைக்கிள்  நிக்கும் ஆனா
  கொசு  வத்தி ஸ்டாண்ட்ல   கொசு நிக்குமா?

*************************************************************************…

 பில்  கேட்ஸ்  ஓட  பையனா இருந்தாலும் கழித்தல்  கணக்கு  போடும்போது 
 கடன்  வாங்கி  தான்  ஆகணும்..

***********************************************************

  கொலுசு  போட்டா சத்தம் வரும் ஆனா
 சத்தம போட்டா கொலுசு  வருமா ?

***********************************************..

 பேக் வீல் எவ்வளவு  ஸ்பீடா போனாலும் 
ப்ரண்ட் வீலை முந்த முடியாது .இதுதான்  ஒலகம் .

***********************************************
 டி.நகர்  போனால்  டீ வாங்கலாம் , ஆனா
விருது  நகர் போனா  விருது  வாங்க  முடியுமா..?

*****************************************************
 என்ன தான் பெரிய  வீரனா இருந்தாலும்,
 .வெயில்  அடிச்சா  திருப்பி  அடிக்க  முடியாது..

******************************************************
5 வாத்துக்கள்  நடந்து  போகும்  போது  வாத்துக்கள் மாத்திரம்  காலில்  செருப்பு போட்டு  இருந்தாங்க . 1 வாத்து  ஏன் செருப்பு போடலை ? 
 அந்த  வாத்து சபரி  மலைக்கு போறதுக்கு  மாலை  போட்டு இருந்ததாலே.

************************************************************************|