சங்கர ராமன் அவன் பையன் சதீசுக்கு காலேஜிலே அட்மிசன் வாங்க அவனுடைய காலேஜ் பிரெண்ட் அசோகனை பார்க்க அவன் ரூமுக்குள் போனான் .உள்ளே வரச்சொல்லி உட்காரும்படி சைகை காட்டிய அசோகன் போனில் பிசியாக பேசிக் கொண்டிருந்தான் .
அங்கும் இங்கும் நோட்டம் விட்ட சங்கரராமனின் கவனம் திடீரென்று அசோகன் பேசுவதில் விழுந்தது .
"என்ன சார் நீங்க,யார் யாரெல்லாமோ ,திடீர்னு உங்களை எனக்கு தெரியும் சார் , நான் உங்க கூட படிச்சேன், வேலை பார்த்தேன் ,உங்க அப்பாவை எனக்கு தெரியும்னு அட்மிசன் டைமாப் பார்த்து வந்து கழுத்தறுக்கிறீங்க! சாரி சார், நான் யாருக்கும் சிபாரிசு செய்வதாய் இல்லை . "
கோபமாக போனை வைத்த அசோகன் சேரை திருப்பி ," சொல்லுங்க சார், உங்களுக்கு என்ன வேணும்"
கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதுஎன்ற யோசனையிலிருந்து விடுபட்டு அசோகன் போனில் பேசியதை கேட்டதிலிருந்து அப்படியே இடிந்து போய் உட்கார்ந்த சங்கரராமன் சுதாரித்துக்க் கொண்டு, ஒரு வழியாக வந்த விஷயத்தை மறைத்து சொன்னான்.
"என் பையன் ப்ளஸ் டூ முடிச்சிட்டு இப்போ காலேஜ் அட்மிஷனுக்கு ட்ரை பண்ணிண்டு இருக்கான். அவன் நல்ல மார்க்கும் வாங்கி இருக்கான் , என்ன கோர்சிலே சேரதுன்னு உங்களை மாதிரி விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட அட்வைஸ் கேக்கலாமேன்னு தான் உங்க கிட்ட வந்தேன்."
தைரியமாக பொய் சொன்னாலும் பொருந்தின பொய்யாக சொல்லவே அது மனசுக்குப் பிடித்தது .உள் மனசுக்குள் ஒரு போன் காலும் ஒருத்தரும் அசோகனை டிஸ்டர்ப் செய்யக் கூடாதுன்னு மனசுலே வேண்டிக் கொண்டிருந்தான் சங்கர ராமன்.
ஆனால் விதி யாரை விட்டு வச்சது? அப்பதானா பேப்பர் சங்கர ராமன் பக்கம் பறக்கணும்? உடனே அதை குனிந்து எடுத்து டேபிள் மேல் வைக்கப் போன அவன் கையை பார்த்த அசோகன் ஒரு நிமிஷம் அதிர்ச்சி கலந்த ஆவலுடன் எழுந்து நின்று , 'நீ.... நீங்க..... சங்கர்..... இல்லை.....?என்னைத் தெரியலையா?'
என்ன பதில் சொல்வது, தெரியும் என்றால் சீட் கேட்கத்தான் வந்தோம்னு ஆகிவிடும் , பேசாம,தெரியாதுண்ணே சொல்லிடலாம் என்று மனசில் போராடிக் கொண்டிருந்த சங்கரராமன் , 'தெரியலையே சார், நீங்க யாருன்னு?'
'நான்தான் உன் கிளாஸ் மேட் அசோகன்' புட்பால் அசோகன்னு' பட்டப் பேரு, நாம்ப ரெண்டு பேர் தான் ஸ்கூலிலேயே 'பெஸ்ட் ப்ளேயர்ஸ்' .என்ன மறந்துட்டியா? நல்ல காலம் பேப்பர் பறக்கவே உன்னை எனக்கு அடையாளம் தெரிஞ்சது , இல்லன்னா நான் ஒரு பெஸ்ட் ப்ளேமேட்டை மிஸ் பண்ணியிருப்பேன் '.
'ஒகோ, இப்ப ஞாபகம் வந்திடிச்சு ,நம்ம ரெண்டு பேர் வீட்டிலேயும் விளயாடக்கூடாதுன்னு ஒரு போர்கொடியே எடுத்தாங்க .'
'கரக்ட் , உன் பையன் நல்ல புட்பால் விளயாடுவானோ உன்னாட்டம்?'
'ஆமாம் சார்'
'இது என்ன சாரு, போருன்னு , இனிமே நம்ம ரெண்டுபேரும் பழைய படி பிரெண்ட்ஸ் , சரியா?'
'சரி உட்காரு , என்ன சொன்னே , உன் பையனுக்கு என்ன கோர்சிலே சேரணும் அவ்வளவுதானே? நீ ஒன்னு செய் ,பேசாம அவனை அப்ளிகேசனோட என்னை வந்து சனிக் கிழமை பார்க்கச் சொல்லு..அவன் வரதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு ரிமைன்டர் கால் பண்ணு .
டோன்ட் வொரி , எல்லாம் நான் பார்த்துக்கறேன்.' 'என்ன நீ ஒன்னும் பேச மாட்டேன்கறியே? நானே வளவளன்னு பேசிண்டு இருக்கேன்?'
சங்கர ராமனுக்கோ நடக்கறது கனவா, இல்லை நிஜமான்னு 'விஜய்'டிவி மாதிரி கேள்வி கேட்கத் தோனித்து.என்ன பதில் சொல்வான்?கும்பிடப் போன தெய்வம் எதிரே வந்து என்ன வேணும்னு மட்டும் கேட்காம, கூடவே வரேன்னு சொன்னால்!
'அது ஒன்னும் இல்லை சா... சாரி அசோக், நீங் ...நீ ..சொன்னா மாதிரியே அனுப்பறேன். தப்பா எடுத்துக்கலைன்னா ஒன்னு கேட்கலாமா?, உ.....ங்களுக்கு எப்படி தெரிஞ்சுது, நான் தான் சங்கர்னு?'
அது ஒன்னும் பெரிய விசயமே இல்லை, நீ குனிஞ்சு பேப்பரை எடுத்து டேபிள் மேல வைக்கரப்போ உன் கையில் ஆறு விரல் இருப்பதை பார்த்தேன். நீ கை குலுக்கும்போதேல்லாம்உன் இரண்டு கட்டை விரல் வெளியே தெரிவது ஞாபகம் வந்தது .அதான் சட்டுன்னு உன்னைக் கண்டுண்டேன்.'
அப்பா, இப்பவாவது இந்த கட்டை விரல் உதவிக்கு வந்ததே ன்னு நினச்சிண்டே அசோகனுடன் கை குலுக்கி விடை பெற்று வெளியே வந்த பின் பெருமூச்சு விட்டான் சங்கர ராமன்.
No comments:
Post a Comment