Thursday, September 15, 2011

இந்த மனுசங்களே இப்படிதான் ,


இந்த  மனுசங்களே  இப்படிதான் , என்னமோ  காக்கா  கூட்டங்கனு  சொல்றாங்களே ?காக்காங்க  நாம  இல்லேன்னா  ஒரு  நாள்  ஊரே  நாறிடும் !

இந்த  மனுசங்களே  இப்படிதான் ,நாய்பிழைப்புங்கறாங்க   நாயிங்கன்னா என்னஇளக்காரமா போச்சா? நாம காவல் காக்கலைன்னா இவங்க சொத்தெல்லாம் சொத்தையா போயிடும்!

இந்த  மனுசங்களே  இப்படிதான் ,பிணந்தின்ன கழுகுன்னு சொல்றாங்க, நாம பிணத்தை தின்னலேன்னா ,மனுஷங்க அடிச்சிட்டு மடிவாங்க!

இந்த  மனுசங்களே  இப்படிதான் , பசுத்  தோல் போர்த்திய புலிங்கறாங்க, இவங்க போடாத வேசமா நாம போடுறோம்?
இந்த  மனுசங்களே  இப்படிதான் , கொரங்கு மாதிரி தாவரான்னு சொல்றாங்க,இந்த அரசியல் வாதிங்க தாவரத  விடவா நாம தாவிடறோம்?
 இந்த  மனுசங்களே  இப்படிதான் , நரி மூஞ்சிலே முழிசேங்கறாங்க,ஆனா ஆனா ஊன்னா,நரி மாதிரி புத்தின்னு  நக்கலடிக்கறாங்க!

இந்த  மனுசங்களே  இப்படிதான் , பாம்புக்கு பாலை வாத்தா மாதிரிங்கறாங்க ,நமக்காவது வெறும் பாலு தான், ஆனால் இவங்க மனுசங்களுக்கு, பாலு, மோரு, ஜூசு,சாராயம்,'வைன்'நு ஊத்திக்கொடுத்திட்டு நம்மளை உதாரணம் காட்டுறாங்க?
 
இந்த  மனுசங்களே  இப்படிதான் ,வெண்கலக் கடையிலே யானை புகுந்த மாதிரிங்கறாங்க,இவங்க கிட்டி பார்டியிலேயும் கூட்டத்திலேயும் போடாத கூச்சலா ?

இந்த  மனுசங்களே  இப்படிதான் , பூனை குறுக்க வந்தா மாதிரிங்கறாங்க , நாம போகும்போது இவங்க குறுக்கால வந்தாநாம ஏதாவது சொல்றோமா?
இந்த  மனுசங்களே  இப்படிதான் , கிளியை வளர்த்து பூனை கையிலே கொடுத்தா மாதிரிங்கறாங்க, இவங்க கிழிய வளர்த்து கிளி கிட்டேயே கொடுத்தா கூட என்ன வாழ்ந்ததாம்?

1 comment:

  1. Sriniketan
    On: 8th February 2012 03:03 AM

    Indha manushangale ippadi than, animals ai example kaatuvaan, enna avanai yeppadi example a yeduthukka mudiyum? Avane yella animals in kalavaiyaa irukkaane :-(

    ReplyDelete