ரகுவிற்கு பொண்டாட்டி சுமி பெருமை தாங்காது ,எப்பப்பாரு அவளைப் பத்தியே பேசிண்டு இருப்பான். இவன் ஒரு சோம்பேறி ,தப்பி தவறிக் கூட மூளையை உபயோகிக்க மாட்டான் ,அப்பேற்பட்டவனுக்கு சுமி மாதிரி நிந்து, நிதானித்துயோசிச்சு முடி வெடுக்கிறா மாதிரி பொண்டாட்டி வந்தா ஏன் புகழ மாட்டான்?
ரகுவிற்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆகிறது.அவனுக்கு தனி குடித்தனம் போனம்னு ரொம்ப நாளா ஆசை,ஆனால் சுமிஅதுக்கு ஒத்துக்கலை.ரகு பொறுக்காமல் அம்மாவிடம் சொல்லிவிட்டான்.
............................................................................................................
நாராயணசாமி வீட்டிற்குள்ளே வந்ததும் வராததுமாக ,"அடியே லட்சுமி, உனக்கு விஷயம் தெரியுமோ? " "நம்ம ரகு 'குடை' நாயுடுகிட்ட சின்மயா நகர்ல இரண்டு பெட் ரூம் வீடு பாக்கச் சொல்லியிருக்கான் போல,அவர் வந்து போஸ்ட் ஆபிசில என்னைப் பார்த்து கேட்கிறாரு.நான் என்ன சொல்ல?" "ஏதோ பேசி மழுப்பிட்டேன்"
லட்சுமி," அதுக்கு என்ன இப்போ ?"
"நம்ம கிட்ட கூட சொல்லாம"
"அவனுக்குதான்னு யாரு சொன்னா? " "அது அவன் பிரண்டுக்கு கூடஇருக்கலாம் இல்லையா?"
"வாஸ்தவம் தான், நீ சொல்றது"
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ராத்திரி சமையல் ரூம் வேலையை முடிச்சிட்டு பெட்ரூமிற்குள் போன சுமியை எப்ப வருவான்னு காத்திருந்த ரகு இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகனும்னு , சுமி கதவை சாத்தக்கூட விடாம , அவளிடம் பொரிந்து தள்ளி விட்டான்.
"என்ன சுமி, நீ ?எத்தனை நாள் தான் சொல்லிண்டே இருக்கறது? என்ன பண்ணுவையோ எனக்கு தெரியாது, அடுத்த மாசம் நாம, தனிக் குடித்தனம் போறோம்"
"உங்களுக்கும் நான் அதே பதிலைத்தான் சொல்லப் போறேன் , என்னால தனிக் குடித்தனத்துக்கு ஒத்துக்க முடியாது"
"அது தான் ஏன்?"
அப்போ பார்த்து அந்தப் பக்கம் வந்த லட்சுமி, சுமி ஏன் தனிக்குடித்தனம் வேண்டாம்கறான்னு தெரிஞ்சிக்க ஆசைப் பட்டதினால் ஒளிந்து நின்று கேட்டாள்.
" இதப் பாருங்க ரகு, நான்வேண்டாம்னு சொன்னால் அதன் பின்னாடி ஒரு அர்த்தம் இருக்கும்." "இப்ப உங்க அக்கா பூஜாவையே எடுத்துக்கோங்க , இரண்டு குழந்தையை வச்சிண்டு அம்மா, அப்பா ,மாமியார், மாமனார் உள்ளுருலேயே இருக்கும்போது வீம்புக்குன்னுதனிக் குடித்தனம் போனாங்க."
"இப்பஅதுக்குஎன்ன? " "அதுதான் தெரிஞ்ச விசயமாச்சே?"
"அப்படி வாங்க வழிக்கு , அவங்க இப்ப ரொம்பவே தனியே திண்டாடுறாங்க." "தானா வீம்புக்காக தனியா போனதினால அவங்களால திரும்பிஒண்ணா சேர்ந்து இருக்க வாயைத் திறந்து கேட்க முடியலை." வறட்டு கெளரவம் இடம் கொடுக்க மாட்டேங்கறது." இருந்தாலும் கஷ்டப்படறாங்க.. நமக்கு அந்த கஷ்டம் வரக் கூடாதேன்னு தான் நான் தனிக்குடித்தனம்வரமாட்டேங்கறேன் "
"ஆனால் நமக்கு இப்போ குழந்தை குட்டி இல்லையே? " அதுங்க வரும்போது பார்த்துக்கலாம் " நான் குடை நாயுடுகிட்ட வீடு பாக்கசொல்லிட்டேன்"
"என்ன தான் அவசரமோ உங்களுக்கு , நீங்கள் நினச்சாலும் இப்போ என்னால எங்கேயும் வர முடியாது."
"ஏங்கறேன்?"
"ஏன்னா நமக்கு குட்டி ரகு வரப் போறான் ,இன்னும் எட்டே மாசத்தில ..."
"அடி கள்ளி , இதை சொல்றதுக்கா இவ்ளோ பீடிக?" "வா, வா, குட்டி சுமிக்கிட்ட கொஞ்சம் கொஞ்சனும் மொதல்ல,"
"பெரிய ஆளு தான் நீ, என்னடா இன்னும் விளக்கத்தை காணமேன்னு நினச்சேன் , பரவாயில்லை , நல்லாவே யோசிக்கறே!
இது அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த லட்சுமிக்கு இரட்டிப்பு சந்தோசம். இருக்காதா பின்னே ,தனிக்குடித்தனம் போச்சு ஆனால் கையில குழந்தை வரப் போறது , யார்கிட்டயும் , சொல்லக் கூடாது ,சுமியா சொல்லட்டும்.வந்த சுவடோ, ஒட்டுக் கேட்ட சுவடோ தெரியாம பூனை மாதிரி வந்த வழியேதிரும்பிப் போனாள்
No comments:
Post a Comment