******************************
ஒரு இங்கிலீஷ் தெரிஞ்ச மாடு (cow) தியேட்டர் பக்கம்
போறது . அங்க தியேட்டர் கதவை கடிக்க ஆரம்பிச்சுடுது ! ஏன்?
என்ன , கதவுல "புல் "-ன்னு எழுதிருக்கு .
******************************
ஸ்பின்னருக்கு குழந்தை பிறந்தால் என்ன பெயரு வைப்பார் ?
பாலா திருப்புர சுந்தரி
******************************
ஒரு மாமி இட்லி -யை தலைல வச்சிண்டா . ஏன்?
ஏன்னா இட்லி பூ போல இருந்துது .
*******************************************************
நாம் இல்லாம செருப்பு நடக்க முடியாது.
ஆனால் செருப்பு..இல்லாம நாம நடக்க முடியும் .
*****************************************
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்
ஆனால் கடலை மாவை வைத்து கடலை போட முடியுமா?
****************************************************************
என்னதான் மனுஷனுக்கு வீடு , வாசல், காடு , கரைன்னு
எல்லாம் இருந்தாலும் ரயில் ஏறனும்னா பிளாட்பாரத்துக்கு வந்து
தான் ஆகணும் . இதுதான் வாழ்க்கை
***********************************************************
பஸ் ஸ்டாப் கிட்டே வெயிட் பண்ணா பஸ் வரும் ஆனா
புல் ஸ்டாப் கிட்டே வெயிட் பண்ணா புல்லு வருமா .?
************************************************************
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்
ஹீரோ ஹோண்டா ஹீரோயன் ஹோண்டா ஆகிடாது .
அதே மாதிரி பசங்க என்னதான் வெண்டைக்கா சாப்டாலும்
லேடீஸ் பிங்கர் ஜென்ட்ஸ் பிங்கர் ஆகிடாது .
*****************************************************************.
டிசம்பர் 31 க்கும் ஜனவரி 1 ஒரு நாள்தான் வித்யாசம் ஆனா ஜனவரி 1 க்கும் டிசம்பர் 31 க்கும் ஒரு வருஷம் வித்யாசம்.
******************************************************************************
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் ,
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்,
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் ஆனா
கொசு வத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?
*************************************************************************…
பில் கேட்ஸ் ஓட பையனா இருந்தாலும் கழித்தல் கணக்கு போடும்போது
கடன் வாங்கி தான் ஆகணும்..
***********************************************************
கொலுசு போட்டா சத்தம் வரும் ஆனா
சத்தம போட்டா கொலுசு வருமா ?
***********************************************..
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்
ப்ரண்ட் வீலை முந்த முடியாது .இதுதான் ஒலகம் .
***********************************************
டி.நகர் போனால் டீ வாங்கலாம் , ஆனா
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா..?
*****************************************************
என்ன தான் பெரிய வீரனா இருந்தாலும்,
.வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது..
******************************************************
அந்த வாத்து சபரி மலைக்கு போறதுக்கு மாலை போட்டு இருந்ததாலே.
************************************************************************|
No comments:
Post a Comment