உண்மை கசக்கும்,ஆனால் அதுவே எப்பொழுதும் நம்முடன் இருக்கும். நம்மால் உண்மையை ஒத்துக் கொள்ள முடியாது,அதுவும் அது நம்மைச் சார்ந்ததாக இருந்தால் .சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்கள் உண்மை சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாததால் அவர்களை தண்டித்தான் .அதனால் அவனை சுற்றி இருந்தவர்கள் உண்மை பேச பயந்தனர். அதனாலேயே அவன் இரண்டாம் உலகப் போரில் தோல்வி அடைந்தான்.
அதே சூழ் நிலை நம்மில் பலருக்கும் ஏற்படும்.எந்த ஒரு மனிதனுக்குமே தன்னை சுற்றிஉள்ளவர்கள் தன்னைப் பற்றி எப்பொழுதும்"இந்திரன் , சந்திரன் " என்று புகழாரம் சூட நினைக்கத் தோணும். , உண்மை என்ன வென்றால், நமக்கும் ஹிட்லர் மாதிரியான தோல்வி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
அதிலும் நம்மால் நம்முடைய குறைகளை ஒப்புக் கொள்ளவே முடியாது. மற்றவர்கள் நம்முடையதவறுகளையோ, நிறைகுறைகளையோ சுட்டிக் காட்டுவதும் நாம் விரும்புவதில்லை .
அப்படி இருக்கும்போது நமக்கு வெற்றி எங்கிருந்து கிடைக்கும்?
இதற்கு ஒரே வழி, மனமிருந்தால் மார்கமுண்டு,அது என்ன?
அது தான் நம்முடைய குறைகளை தினமும் நாமேஒருமுறை நினைத்துப் பார்த்து திருத்திக் கொளவது தான். இதில் வேற்று மனிதர்கள் யாரும் இல்லை ,குற்ற உணர்வும் இருக்காது.
உண்மையாக வாழ வேண்டுமானால் நம்முடைய குறைகளை மற்றவர்கள் நமக்கு சொல்லும் முன்பாக நாமே புரிந்து கொண்டும் அதை ஒப்புக் கொண்டும்செயல் படுவது தான்.
"யார்" சொல்லுகிறார்கள் என்பதைவிட "எதைப் பற்றி"சொல்லுகிறார்கள் என்றும் "யார் சரி" என்பதைவிட "எது சரி ''என்றும் பார்க்க வேண்டும்.
தன்னுடைய குற்றங்களையும் , குறைகளையும் ஒத்துக் கொள்கிறவன் நிஜத்தில் ரொம்ப தைரியசாலி .
"யார்" சொல்லுகிறார்கள் என்பதைவிட "எதைப் பற்றி"சொல்லுகிறார்கள் என்றும் "யார் சரி" என்பதைவிட "எது சரி ''என்றும் பார்க்க வேண்டும்.
தன்னுடைய குற்றங்களையும் , குறைகளையும் ஒத்துக் கொள்கிறவன் நிஜத்தில் ரொம்ப தைரியசாலி .
Posted by: Sriniketan
ReplyDeleteOn: 8th February 2012 03:10 AM
Aamaanga, unmai dhaan. Naam nammudaiya kutrathai paarthu thiruthi kondaal, nam kannottamum maarum, nimmadhiyum iirukkum.