Tuesday, April 19, 2016

மாத்ரு பஞ்சகம் -2


ஆதி சங்கரர் அவர்களது அருமை அன்னைக்குப் பாடிய மாத்ரு பஞ்சகம் .
ஆஸ்தாம் தாவதியம்ப்ரஸூதி ஸமயே துர்வார சூலவ்யதா|
நைருச்யம் தனுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ|
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரண க்லேசஸ்ய யஸ்யாSக்ஷம:|
தாதும் நிஷ்க்ருதி முன்னதோபி தனய: தஸ்யை ஜனன்யை நம:||
மஹத் புண்யத்தால் சம்பாதிக்கப்பட்ட மனுஷ்ய ஜன்மா செய்ய வேண்டியதை வேதம் கூறும். ''மாத்ரு தேவோ பவ'' மாதா என்ற தெய்வத்தை உபாசிக்கிறவனாக இரு என்று கூறியதற்கிணங்க ஸ்ரீ பகவத் பாதாள் தனது தாய் முக்தியடையும் நிலையில் இருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்து ப்ரம்ம ஞானியான ஆதிசங்கரர் கூறிய மாத்ரு பஞ்சகம்.
தனது கீர்த்தி, தான் செய்த காரியம் எதுவானாலும் இருக்கட்டும்; எனது தாயார் என்னை கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கும் பொழுது அரும்பாடுபட்ட கஷ்டத்திற்கு நான் அதற்குப் பதில் பிரதியுபகாரம் ஏதாவது செய்திருக்கிறேனோ? அது இருக்கட்டும்; பிரசவ சமயத்தில் போக்க முடியாததும், பொறுத்துக்கொள்ள முடியாததுமான சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் பதில் உபகாரம் செய்திருக்கின்றேனா? அதுவுமிருக்கட்டும்; என்னைப் பெற்றதும், என்னை ரக்ஷக்க ருசியில்லாத பொருளைச் சாப்பிட்டு ஜீவித்த எனது தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா? தனது சரீரத்தை இளைக்கச் செய்வதும், தூக்கsமில்லாமலும், எனது மலத்திலேயே படுத்து ஒரு வருஷம் என்னைக் காத்த தாயாருக்கு ஏதாவது செய்திருக்கிறேனா? தன்னையே கஷ்டப்படுத்திக் கொண்டு பொறுமையுடன் காப்பாற்றிய குழந்தைகளில் எவனாவது தாயாருக்கு பிரதியுபகாரம் செய்ததுண்டா? யாராலும் தாயாருக்கு பிரதியுபகாரம் செய்ய முடியாது. எனவே அம்மா, உனக்கு நமஸ்காரம் செய்கின்றேன். ஏற்றுக்கொள்.
குருகுல முபஸ்ருத்ய ஸ்வப்ன காலேது த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராவ்ருதோமாம் த்வமுச்சை:|
குருகுல மத ஸர்வம் ப்ராரு தத்தே ஸமக்ஷம்
ஸபதி சரண யோஸ்தே மாதரஸ்து ப்ரணாம: ||
நான் வித்யாப்யாஸம் செய்யச் சென்றபொழுது அம்மா, நீங்கள் தன்னை மறந்து தூங்கிவிட்டீர்கள். தூக்கத்தில் நான் சன்யாசியானதுபோல் ஒரு கனவைக் கண்டு, அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறியது குருகுலவாசிகளும் கதறும் படிச் செய்த அம்மா, உனக்கு நமஸ்காரம்.
ந கஸ்தம் மாகஸ்தே மரண மையே தோயமபி வா
ஸ்வதாவா நோ தத்தா மரண திவஸே ச்ராத்த விதினா|
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரக மனு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் ||
அம்மா! நீ முக்தியடையும் சமயத்தில், உனக்குக் கொஞ்சம் ஜலமாவது வாயில் விட்டேனா? பிறகும் ஸ்வதா மந்திரத்தினால் ச்ராத்தம், தர்ப்பணமாவது செய்தேனா? உனது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உன் காதில் ஓதினேனா? அச்சமயம் எனக்குக் கிடைக்காததாலும், எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும், சன்யாசியானதாலும் எந்த வைதீகமும் அனுஷ்டிக்க முடியாது போனதால், மனம் தவிக்கின்ற உனது மகனான என்னிடம் தயவுசெய்ய வேண்டுமம்மா! உனது சரண கமலத்தைப் பிடித்து வேண்டுகின்றேன்.
முக்தாமணிஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வாம் |
இக்யுக்தவத்யாஸ்தவ வாசி மாதர்
ததாம்யஹம் தண்டுல மேவசுஷ்கம் ||
அம்மா! என்னைக் காணும்போதெல்லாம், என் முத்தே, என் கண்ணே, என் அப்பனே, ராஜா! நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டுமென்று எப்பொழுதும் சொல்லி என்னிடத்தில் கருணையையும், அன்பையும், தயையும் கலந்த அம்ருத மயமான சொல்லும் தாரையினால் என்னைச் சீராட்டி, பாலூட்டி, தாலாட்டி என்னை வளர்த்த எனது அன்னைக்கா வாயிலே, வேகாத அரிசியைச் சமர்ப்பிப்பேன். இதைப் பொறுக்க முடியவில்லையே! அம்மா உன்னைச் சரணடைகிறேன்.
அம்பேதி தாதேதி சிவேதி தஸ்மின்
ப்ரஸுதி காலே யதவோச உச்சை |
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தேத்
யஹோ ஜனன்யை ரசிதோய மஞ்ஜலி: ||
அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது பொறுக்க முடியாத வேதனை சமயத்தில் அம்மா! அப்பா! சிவபெருமானே என்றும்; கிருஷ்ணா, கோவிந்த, ஹரே முகுந்தா என்று அழைத்த அந்த வாக்கோடு கூடிய என் கருணைத் தெய்வமே! என் இரு கைகளையும் தூக்கி உனக்கு அஞ்சலி செய்து, உன்னைச் சரணடைகின்றேன் என்று பெற்ற தாய்க்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

Monday, April 18, 2016

கா ஞ்சி பெரியவர் சொன்ன கதை:- கடலும் கடவுளும்!


 
சமுத்ர ஜலத்தை உதாரணமாக காட்டி பரமாத்மாவை நமக்கு புரிய வைத்த விஷயம் தான் இந்த செய்தி.
சமுத்திரம் ஆடாமல் அசையாமல் இருக்கிற போது
ஒரு காற்று அடித்தால் உடனே அதில் ஜலத்துளிகள்
குமிழ்களாகத் தோன்றுகின்றன.
இன்னோரு காற்று அடிக்கிறபோது அந்தக் குமிழ்கள்உடைந்து போகின்றன.
பரமாத்மா ஆடாத அசங்காத சமுத்திரம் மாதிரி.
மாயை என்ற காற்றினால் அதிலே ஜீவாத்மாக்கள் என்கிற நாமெல்லாம் குமிழ் மாதிரி தோன்றியிருக்கிறோம்.
ஆசாரியாருடைய கடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம் மேல் பட்டால் குமிழ் உடைந்து
ஜலத்துளி சமுத்திரத்தோடு ஜக்கியமாகி விடுவதுபோல்,
நாமும் பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்து விடுவோம்.”
சமுத்திர ஜலம் என்றென்றும் அளவு குறையாமலேதான் இருக்கிறது.
அதிலிருந்து ஆவி பிரிந்து மேகமாக மேலே சென்று மழையாகி,
உலகத்தில் பல விதங்களில் நதி, ஒடை, வாய்க்கால், ஏரி, குளம், கிணறு என்று ஜலாசயங்களாக ஆகின்றன.
சமுத்திரம் வற்றுவதில்லை.
அதில் புதிதாக வெள்ளம் வருவதுமில்லை.
அதிலிருந்து வந்த ஆறு குளங்கள் வற்றலாம்.
அல்லது இவற்றில் வெள்ளம் வரலாம்.
வெயில் நாள்களில் வீட்டுக் குழாய்களில் ஜலம் இல்லை.
ரெட்ஹில்சில் ஜலம் இல்லை என்கிறோம்.
மழைக்காலத்தில் கோதாவரியில் வெள்ளம், காவேரியில் உடைப்பு என்று பேசுகிறோம்.
ஆனால் சிருஷ்டி காலத்தில் இந்த உலகத்தில் எத்தனை ஜலம் இருந்ததோ
அதில் ஒர் இம்மிகூடக்ரெயின் கூட -இன்றுவரை குறைய வில்லை.
கூடவும் இல்லை.”
பணக்காரர்கள் சிலர் நிலத்தை விற்று வீடு வாங்குவார்கள்.
வீடுகளை விற்று பாங்கில் போடுவார்கள்.
பங்குப் பணத்தை ஷேர்களாக மாற்றுவார்கள்.
மொத்தச் சொத்து மாறாது.
அவற்றின் ரூபம் தான் பலவிதங்களில் மாறும்.
எல்லாவற்றையும் கூட்டினால் கணக்கு சரியாக இருக்கும்.
அப்படியே தான் லோகத்தில் உள்ள மொத்த ஜலம் சமுத்திரத்தில் இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மேகத்தில் இருக்க வேண்டும்.
அல்லது நதியாக, ஏரி, குளங்களாக இருக்க வேண்டும்.”
பரமாத்மா பலவாகத் தோன்றி யிருக்கிறார்.
தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார்.
நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாகிற தாகத் தோன்றுகிறது.
ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால்,
எங்குமே கூடுதலும் இல்லை. குறைவும்இல்லை.”
ஜலத்தை திருஷ்டாந்தமாக வைத்துப்
பரமாத்ம- ஜீவாத்ம ஸம்பந்தத்தைச் சொல்லும்போது
நதிகளைப் பற்றி விசேஷமாகச் சொல்ல வேண்டும்.
சமுத்திர ஜலம் மழையாகி அதிலிருந்து ஏரியும்,
அதிலிருந்து குளமும், குட்டையும், கிணறும் உண்டாகின்றன.
இவை மறுபடியும் சமுத்திரத்தில் கலப்பதில்லை.
ஆனால், எல்லா நதிகளும்சமுத்திரத்தையே தேடி வந்து கலந்து விடுகின்றன
வடக்கே ஒரு நதிக்கு ஸோன் என்று பெயர்.
சோணம் என்றால் சிவப்பு.
இந்த நதி சிவப்பான மண் வழியேஒடுகிறது.
ஆந்திராவில் கிருஷ்ணா நதி இருக்கிறது.
கிருஷ்ணா என்றால் கருப்பு.
இந்த நதி கருப்பு மண்மீது ஒடுகிறது.
கங்கை என்றால் வெளுப்பு.
இதுவும் அது ஒடுகிற பிரதேசத்தைப் பொருத்து அமைந்த பெயர்தான்.
மூன்றும் ஒரே கடலில்தான் கலக்கின்றன.
சிகப்பு ரஜோ குணம், கருப்பு தமோ குணம். வெள்ளை ஸத்வகுணம்.
மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ,
அதை ஒட்டி ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது.
எப்படியானாலும், கடைசியில் பரமாத்ம சமுத்திரத்தில்தான் கலந்தாக வேண்டும்.
( water finds its level ).
தொடர்புடைய நீர்ப்போக்கு ஒரே மட்டத்தில் இருக்கமுயலும் என்பார்கள்.
மலை உச்சியில் மழை பொழிந்து நதி உண்டாகிறது.
அங்கிருந்து கீழே கன வேகமாக, ஒரே இரைச்சலோடு நதி விழுகிறது.
அப்போது அதற்கு நாம் வைக்கும் பெயர் நீர் வீழ்ச்சி.
பூமியில் ஒடும்போது அத்தனை சத்தம் இல்லை.
முடிவில் சமுத்திரத்தில் கலந்த பின் சத்தமே இல்லை.
அப்போதுதான் நதி தன் லெவலுக்கு வருகிறது.
அதாவதுலெவலுக்குவந்தவுடன் பரம சாந்தமாகிறது.
எதிலுமே சரி, ‘லெவல்’ – அதாவது அளவு அறிந்து,
அந்த மட்டத்தோடு நிற்கிற மனோபாவம் வந்தால் தான் சாந்தம் உண்டாகும்.
லெவலுக்குமீறிச் செய்கிற தாட்பூட் காரியங்கள் பிறருக்குப் பிரமிப்பூட்டலாம்.
ஆனால் இதனால் நாமே நம் சாந்தியைக் குலைத்துக் கொள்வது தான் பலன்.
உருட்டல், புருட்டல், மிரட்டல், இரைச்சல் எல்லாவற்றையும் குறைத்து
அடக்கமாக வருகிற நதியை சமுத்திரம் எதிர் கொண்டு சென்று
ஏற்று பின் வாங்கிச் செல்கிறது.
இதனால் தான் நதியின் சங்கம ஸ்தானங்களுக்குச்
சிறிது தூரம் முன்னாலிருந்தே உப்புக் கரிக்கிறது.
நாம் லெவலை மீறாமல்,
அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரமும்
நம்மை எதிர் கொண்டு அழைத்துப் போய்
தனக்குள்அடக்கம் செய்து கொண்டு விடும்
இதைக்காட்டிலும் தெளிவாக யாராவது சொல்ல முடியுமா.

மனசு சஞ்சலப்படுகிறதா?


ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார்.
ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.
நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார்.
சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும்.
நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது
நடக்கும்.

கடுக்காய் பொடி: சர்வ ரோக நிவராணி:


நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது.
மிடுக்காய் கடுக்காய்
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம். கடுக்காயின் கடினமான மேல் பகுதியே மருத்துவ குணமுடையது.
அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில் மேல் தோலும் கடுக்காயின் உள் கொட்டையும் எப்போதும் பயன் படுத்தக்கூடாதவை.
கடுக்காய் என்ற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளிலும், காதி கிராப்ட் கடைகளிலும் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கிறது.
கடுக்காயின் சதைப்பற்றான மேல் தோலை இடித்துத் தூள்செய்து வைத்துக் கொண்டு, மாலை அல்லது இரவு வேளைகளில் அரை
ஸ்பூன் எடுத்து குளிர்ந்த நீரிலோ, வெந்நீரிலோ, பாலிலோ கலந்து
அருந்தலாம்.
வாயிலும் ,தொண்டையிலும்,
இரைப்பையிலும் ,குடலிலும் உள்ள
ரணங்களை ஆற்றிவிடும் வல்லமை பெற்றது. அது மட்டுமின்றி பலசிக்கல்களை ஏற்படுத்தும் மலச்சிக்கலைப் போக்கி குடல்
சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி, ரத்தத்தை சுத்தப்படுத்தி,வாதம் பித்தம்,கபம் ஆகிவற்றால் வரும் ஏராளமான நோய்களைப்
போக்கும்.ஊட்டத்தை ஊட்டி இளமையை நீடிக்க வைத்து மிடுக்கோடு வாழவழி செய்யும்.
கடுக்காயும் தாயும் கருத்தில் ஒன்று என்றாலும் கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ-கடுக்காய் நோய் ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள் ஊட்டி உடல் தேற்றும் உவந்து.
என்ற மருத்துவப்பாடல் கடுக்காய் பெற்ற தாயைவிடப் பெரியது எனப் புகழ்கிறது.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப்பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயை லேகியம் செய்து உண்ண, நரை, திரை மாறி காய சித்தியாகும். இதற்கு ‘அகஸ்த்தியர் ரசாயனம்” என்று பெயர். முற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது.
உபயோகிக்கும் போது நிபுணரை , மருத்துவரை கலந்து உபயோகிக்கவும் .
மூலிகைகள் தீங்கிலாதவை என நினைக்கவேண்டாம் .அதிலும் மூலிகை பறிப்பது சுத்தி செய்வது ,பத்தியம் ,அதை தரம் பிரிப்பது ,நேரம் போன்ற பல காரணிகள் உண்டு .
சிறு குழந்தைகளுக்கு சந்தனக்கல்லில் சிறிது உரசி இழைத்து பாலில் கலந்து புகட்டலாம். காது நோய்களுக்கும் கண்கண்ட மருந்தாகத் திகழ்கிறது. கடுக்காய் கொடுத்து விட்டான் என்று ஏமாற்றி மோசம் செய்பவர்களைக் குறிப்பிடுவார்கள்....
கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது புராணங்களிலும் இம்மரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாயகம் இந்தியா தான். புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுக்காயைஉபயோகிக்கும் போது அதை உடைத்து அதில்   உள்ளே உட்கொட்டையில் இருக்கும் ஒரு நரம்பை நீக்கவேண்டும் .அது விஷத்தன்மை உடையது .இதுவே சுத்தி செய்தல் .இது தெரியாமல் கடையில் விற்கும் கடுக்காய் பொடியை வாங்கி உபயோகித்து பின் வருந்துவதில் பலனில்லை .
திருவாரூர் வட்டம் திருகாரயில் கோவிலுள் உள்ள விநாயகர் கடுக்காய் விநாயகர் எனப்படுவார். வணிகர் ஒருவர் சாதிக்காய் மூட்டைகளை ஏற்றி வரும் போது விநாயகர் சிறுவன் போல் வந்து என்ன மூட்டை எனக் கேட்க சிறுவனை ஏமாற்ற நினைத்த வணிகன் கடுக்காய் என்று கூறினான்.
மூட்டைகள் அனைத்தும் கடுக்காய்களாயினவாம்.வணிகன் மனம் திருந்தி வேண்டிய போது விநாயகர் முன்போல் சாதிக்காய்களாக மாற்றினார்.
சாதிக்காய்களை விட விலை மலிவாய் இருந்தாலும் குணத்தில் மிகவும் ஏற்றமுடையது கடுக்காய்.
காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுகாய்
ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் உண்டுவர
நரை திரை மூப்பு இன்றி இள்மையோடு வாழலாம் என்கிறது
சித்த மருத்துப் பாடல் ஒன்று. 
கடுக்காய் பொடியின் பயன்கள்:
---------------------------------------------
1. இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
2. பிராண வாயு அதிகரிக்கிறது.
3. வாய் மற்றும்குடல் புண்களை ஆற்றும்
4. இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 300 மடங்கு அதிகமாகிறது. ( 300% ஆக்சிஜன் = 2 மணி நேரம் பிராணயாமம்)
5. மலசிக்கலை நீங்குகிறது.
6. இது ஒட்டு மொத்த வயிற்றயுமே சுத்தம் செய்கிறது.
7. இளமையாக வைத்திருக்கும்.
8. வாழ்நாளை அதிகரிக்கிறது.
9. வாய் துர்நாற்றம் அகலும்.
10. எதிர்மறையான எண்ண பதிவுகளை அகற்றும்.
எடுத்துக் கொள்ளும் முறை:
--------------------------------------------
தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் 1 ஸ்பூன் கடுக்காய் பொடியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குடித்து வர வேண்டும்.
" காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாகும். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள்.
எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம்.

தொகுப்பு. குமார் ராமநாதன் 16042016.
#மருத்துவ_குறிப்புகள்.

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க.


ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும். வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக, வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும். பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும். தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும். எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம். பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும். இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.

சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும். ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.

தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது

செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும். அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.

ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.

தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்.
தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.


இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

பிரச்னைகள் தீர்க்கும் பிள்ளையார் சஷ்டி!


முருகப் பெருமானுக்கு உகந்த திதி, சஷ்டி திதி! அதிலும், ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி மிகவும் விசேஷம். அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்து, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் அருள்புரிந்தார். இந்தக் கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டித்து முருகப் பெருமானை வழிபடுவது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதேபோல், விநாயகர் சஷ்டி விரதமும், பைரவரின் செண்பகா சஷ்டி விரதமும் அன்பர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த மூன்று சஷ்டிகளின் நிறைவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது விசேஷம். கந்த சஷ்டியின் நிறைவில் முருகர்தெய்வ யானை திருக்கல்யாணம்; விநாயகர் சஷ்டியின் நிறைவில் விநாயகர்வல்லபை; பைரவர் சஷ்டி நிறைவில் பைரவர்ஆனந்தவல்லி ஆகிய திருக்கல்யாணங்கள் நடைபெறுகின்றன.
விரதத்தின் நிறைவில் தெய்விகத் திருமணங்களைத் தரிசிக்கும் பேறு நமக்குக் கிடைப்பதால், இந்த மூன்று சஷ்டிகளிலும் விரதம் இருப்பது மிகவும் சிறந்தது.
பிள்ளையார் சஷ்டி விரதம்
மாகதர் என்னும் முனிவருக்கும், விபுதை என்ற அசுரப் பெண்ணுக்கும் பிறந்தவன் கயமுகாசுரன். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றி, எந்த ஆயுதத்தாலும் தான் அழியக்கூடாது என்று வரம் பெற்றான். வரம் பெற்ற செருக்கில் தேவர், முனிவர் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப்படுத்தினான். அனைவரும் சிவபெருமானிடம் பிரார்த்தித்தனர்.
சிவபெருமான் விநாயகப் பெருமானை அழைத்து, பூத கணங்களுடன் சென்று கயமுகாசுரனை அழிக்கும்படி ஆணை இட்டார். அதேபோல், விநாயகரும் பூதகணங்களுடன் சென்று, கய முகாசுரனுடன் போர் புரிந்தார். விநாயகர் ஏவிய எந்த ஆயுதத்தாலும் கயமுகாசுரனை அழிக்க முடியவில்லை. அப்போதுதான் அவன் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வரவே, தன்னுடைய தந்தங்களில் ஒன்றை உடைத்து, கயமுகாசுரனின் மேல் ஏவினார் விநாயகர். அது கயமுகாசுரனைத் தாக்கியது. மார்பில் ரத்தம் பெருக்கெடுக்க, வலியால் துடித்த கயமுகாசுரன் மூஷிக வடிவம் கொண்டு ஓடினான். தந்தமும் அவனைத் துரத்தியது. ஓடி ஓடிச் சோர்ந்துபோன கயமுகாசுரன் இறுதியில் விநாயகரைச் சரண் அடைந்தான். விநாயகப் பெருமானும் அவனை மன்னித்து, தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார்.
கயமுகாசுரனை அடக்கி ஆட்கொண்டு திரும்பிய விநாயகப் பெருமானை பூதகணங்களின் அதிபதியாக நியமித்தார் சிவபெருமான். அன்று முதல், விநாயகருக்கு கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.
முருகப் பெருமான் சூரபத்மனை மயில் வாகனமாக ஆட்கொண்டு அருளியதுபோல், பிள்ளையாரும் கயமுகாசுரனை சம்ஹாரம் செய்யாமல், வாகனமாக ஏற்று அருள்புரிந்தார். இதனால், பிள்ளையார் சஷ்டி விரதம் இன்னும் விசேஷமாகும்.
பிள்ளையார் சஷ்டி விரதம்
அனுஷ்டிக்கும் முறை
பிள்ளையார் சஷ்டி விரதம் என்பது, கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச பிரதமை தொடங்கி (மார்கழி மாதம் சுக்லபட்ச சஷ்டி திதி வரை) 21 நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமாகும்.
கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச சஷ்டியன்று காலையில் ஸ்நானம் செய்த பிறகு, உடல் மனத் தூய்மை யுடன் விரதத்தைத் தொடங்க வேண்டும். விரத பங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக 21 இழைகளுடன் கூடிய நூலை மஞ்சளில் தோய்த்து, விநாயகரை தியானித்து, ஆண்கள் வலது கரத்திலும் பெண்கள் இடது கரத்திலும் காப்பாகக் கட்டிக் கொள்ளவேண்டும்.
முதல் 20  நாட்கள் ஒருவேளை மட்டும் உணவு உண்டு, உபவாசம் இருக்கவேண்டும். இறுதி நாளில் முழு விரதம் இருந்து, இரவு விநாயகரை தரிசித்து வழிபட்டு, விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.
21 நாட்களும் விநாயகரின் திருக்கதைகளைப் படிப்பதும், விநாயகரின் திருவிளையாடல்களைப் பேசக் கேட்பதும் மிகப் புண்ணியமாகும். விநாயகர் ஆலயங்களில் விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்ற பின், பவித்ரமான விநாயகப் பெருமானின் சரிதத்தைப் பாராயணம் செய்யலாம். உபன்யாசம் செய்யக் கேட்டும் பயன் பெறலாம்.
21 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வரும் விநாயகர் சஷ்டி அன்று மட்டுமாவது முறைப்படி விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறலாம்.

விரத நாட்களில் பாராயணம் செய்ய...
கணேச நாமம்!
யதோஷனந்தஸக்தேரனந்தாஸ்ச ஜீவா
யதோ நிர்குணாதப்ரமேயா குணாஸ்தே!
யதோ பாதி ஸர்வம் த்ரிதாபேதபின்னம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யதஸ்சாவிராஸீத் ஜகத்ஸர்வமேதத்
ததாப்ஜாஸனோ விஸ்வகோ விஸ்வகோப்தா
ததேந்த்ராதயோ தேவஸங்கா மனுஷ்யா:
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யதோ வஹ்னிபானூ பவோ பூர்ஜலம் ச
யத: ஸாகராஸ்சந்த்ரமா வ்யோம வாயு:
யுத: ஸ்தாவரா ஜங்கமா வ்ருக்ஷஸங்கா:
ஸதா தம் கணோஸம் நமாமோ பஜாம:
யதோ தானவா: கின்னரா யக்ஷஸங்கா
யதஸ்சாரணா வாரணா: ஸ்வாபதாஸ்ச
யத: பக்ஷிகீடா யதோ வீருதஸ்ச
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யதோ புத்திரஜ்ஞானநாஸோ முமுக்ஷோர்
யத: ஸம்பதோ பக்த ஸந்தோஷிகா: ஸ்யு:
யதோ விக்னநாஸோ யத: கார்யஸித்தி:
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யத: புத்ரஸம்பத் யதோ வாஞ்சிதார்த்தோ
யதோஸபக்தவிக்னா: ததாஸனேகரூபா:
யத: ஸோகமோஹௌ யத: காம ஏவம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யதோஸனந்தஸக்தி: ஸ ஸேஷோ பபூவ
தராதாரணே ஸனேகரூபே ச ஸக்த:
யதோஸனேகதா ஸ்வர்கலோகா ஹி நானா
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யதோ வேதவாசோ விகுண்டா மனோபி:
ஸதா நேதி நேதீதி யத்தா க்ருணந்தி
பரப்ரம்ஹரூபம் சிதானந்தபூதம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
ஶ்ரீகணேஸ உவாச
புனரூசே கணாதீஸ: ஸ்தோத்ரமேதத் படேந்நர:
த்ரிஸந்த்யம் த்ரிதினம் தஸ்ய ஸர்வம் கார்யம் பவிஷ்யதி
யோ ஜபேதஷ்டதிவஸம் து தஸவாரம் தினே தினே
ஸ மோசயேத் பந்தகதம் ராஜவத்யம ந ஸம்ஸய:
விதாயகாமோ லபேத் வித்யாம் புத்ரார்த்தீ புத்ரமாப்னுயாத்
யோ ஜயேத் பரயா பக்த்யா கஜானனபரோ நர:
ஏவமுக்தவா ததோ தேவஸ்சாந்தர்த்தானம் கத: ப்ரபு
ஶ்ரீ கணேசாஷ்டகம் சம்பூர்ணம்

எல்லோரும் சொன்னார்கள். அளவற்ற சக்தியுள்ள எவரிடமிருந்து அளவற்ற ஜீவாகள் உண்டானர்களோ, நிர்குணரான எவரிடமிருந்து அளவிற்கடங்காத குணங்கள் உண்டாயினவோ, எவரிடமிருந்து எல்லா உலகமும் முக்குணங்களால் பிரிவுள்ளதாகயிருக்கிறதோ, அப்படிப்பட்ட கணேசரை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து இந்த எல்லா உலகமும் உண்டானதோ, அப்படியே எங்கும் வியாபித்தவரும், உலகத்தைக் கார்க்கிற வருமான பிரம்மதேவனும் உண்டானாரோ, அப்படியே இந்திரன் முதலிய தேவர்களும் மனுஷ்யர்களும் உண்டானார்களோ, அப்படிப்பட்ட கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து அக்னி, சூர்யன், ருத்ரன், பூமி, ஜலம் உண்டாயினவோ, ஏவரிடமிருந்து சமுத்திரங்களும், சந்திரனும், ஆகாசமும், வாயுவும் உண்டாயினவோ, எவரிடமிருந்து அசையாத பொருள்களும், அசையும் பொருள்களும், மரங்களின் கூட்டங்களும் உண்டாயினவோ, அந்தக் கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம், சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து அஸுரர்களும், கின்னரர்களும், யக்ஷர்களின் கூட்டங்களும் உண்டானார்களோ; எவரிடமிருந்து சாரணர்களும், யானைகளும், கரடி, புலி முதலிய பிராணிகளும் உண்டாயினவோ; எவரிடமிருந்து பக்ஷிகள், புழுக்கள் உண்டாயினவோ; எவரிடமிருந்து செடி கொடிகளும் உண்டாயினவோ அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து மோக்ஷத்தை விரும்புகிறவருக்கு அஞ்ஞானம் விலகி ஞானம் உண்டாகிறதோ; எவரிடமிருந்து பக்தர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் சம்பத்துகள் உண்டாகின்றனவோ; எவரிடமிருந்து இடையூறுகள் விலகுமோ; எவரிடமிருந்து கார்யஸித்தி ஏற்படுமோ; அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து புத்திர சம்பத்தும், எவரிடமிருந்து கோரிய பொருளும், எவரிடமிருந்து பக்தியற்றவர்களுக்கு பலவிதமான இடையூறுகளும், எவரிமிருந்து சோகமும், மோகமும், எவரிடமிருந்து இவ்வுலகில் வேண்டிய போகமும் உண்டாகுமோ, அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து அளவற்ற சக்தியுள்ளவரும், பலவகைப்பட்ட பூமியை தரிக்கும் சக்தி வாய்ந்தவருமான அந்த ஆதிசேஷன் உண்டானாரோ, எவரிடமிருந்து பலவகைப்பட்ட சுவர்க்கம் முதலிய லோகங்களும் உண்டாயினவோ, அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம், சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து மனோவிருத்திகளால் அளவிடமுடியாத வேத வாக்குகள் உண்டாகி எப்பொழுதும் அஸத்தான வஸ்துக்களை 'ஸத்வஸ்து அல்ல' என்பதை சொல்லுவதன் மூலம் சிதாநந்த ரூபமான பரப்ரம்ம ஸ்வரூபத்தை உபதேசிக்கின்றனவோ அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.




சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு

சிரிக்கும் பழக்கமே மனிதனுக்கு மறந்துவிட்டதோ என்ற சூழலில் வாழ்கிறோம்…

01. அன்றாட வாழ்க்கையில் பல கவிதைக் கணங்கள் உண்டு.. ரசனைக்குரிய பொழுதுகள் உண்டு.. நகைச்சுவை பொங்கும் தருணங்கள் உண்டு.. இவற்றையெல்லாம் சரியாக அடையாளம் கண்டு கொள்வதில்தான் புன்னகையின் சாவி இருக்கிறது..
- மகிழ்ச்சியை அடைய முன் அதன் திறவுகோலை கண்டறிக..
02. சார்ளி சப்ளினின் படங்கள் ஒரு நூற்றாண்டு கொண்டவை.. ஆனாலும் இன்றைக்கும் அந்தப் படங்களில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது.. எல்லா வயதினரும் பார்க்கக்கூடிய நிரந்தரத் தன்மை இருக்கிறது.. காரணம் சிரிப்பு சோகம் இரண்டும் கலந்தவை அவர் படங்கள்..
- நிஜ வாழ்வை கூர்ந்து அவதானித்து திரைக்கதை ஆக்கினால் வெற்றி…
03. வெளிப்பார்வைக்கு ஒருவர் கோமாளியாகத் தெரிகிறார் என்பதால் அவரை மட்டமாக மதித்துவிடக்கூடாது.. சார்ளி சப்ளினுக்கு பின்னால் ஒரு மகத்தான சரித்திரமே ஒளிந்திருந்தபடியால்தான் அவர் படங்கள் மகத்தான சரித்திரம் படைத்தன..
- உருவத்தை வைத்து ஒருவனை எடை போடாதே..
04. கொடிய வறுமையுடன் பிறந்து, பரம ஏழையாக கிட்டத்தட்ட அநாதையாக வளர்ந்து, தன்னுடைய திறமை, தன்னம்பிக்கை, கடின உழைப்பு ஆகியவற்றை மட்டுமே முதலீடாக வைத்து வெற்றிபெற்ற சாப்ளினின் வாழ்வில் நமக்கு அறிவதற்கு பல அரிய செய்திகள் புதைந்து கிடக்கின்றன.
- உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் வறுமைதான்..
05. சார்ளி நீ தான் உலகத்திலேயே சிறந்த மேடைக் கலைஞனாக வரப்போகிறாய், உன்னைப் பார்க்க ஜனங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு குவியப் போகிறார்கள்.. இது சாப்ளினுக்கு தாய் சொன்ன உற்சாக வார்த்தை இதை நம்பித்தான் அவர் உயர்ந்தார்.. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து நடக்க வேண்டும்.
- நீங்கள் சொல்லும் உற்சாக வார்த்தைகள் உலகிற்கு ஒரு சாதனையாளனை தருகிறது..
06. இந்த வேலைதான் என்றில்லை எந்த வேலையானாலும் சட்டென்று ஒப்புக்கொண்டு காரியத்தில் இறங்கிவிடும் தன்மை கொண்டவர் சார்ளி சப்ளின் அவருடைய வாழ்வின் வெற்றியே அதுதான்.
- தூரத்தில் இருக்கும் பலாக்காய்க்கு ஆசைப்பட்டு கையில் இருக்கும் பலாக்காயை இழந்துவிடாதே…
07. எந்த வேலையாக இருந்தாலும் அதிகம் கேட்கமாட்டார் ஆனால் பேசிய தொகையை கறாராக கேட்பார் அது அவருடைய பழக்கம், உயர்வுக்கும் அது காரணமானது.
- சம்பளம் கொடுக்கத் தெரியாதோர் அதிகமாக வாழும் உலகிலேயே நாம் வாழ்கிறோம்..
08. சரியான சாப்பாடு இல்லை.. போதுமான துணிமணிகள் இல்லை.. கவுரவமாக நான்குபேர் நடுவில் சென்றுவர அந்தஸ்த்து இல்லை.. இப்படி பல இல்லைகளை வைத்து நின்மதி இல்லையென்று மனம் சோர்ந்துவிடாமல் வென்றவர் சார்ளி சப்ளின்.
- இல்லை என்று சோர்ந்துவிடாதே இல்லையின் அடுத்த பக்கம் உண்டு..
09. பட்டினியால் சார்ளி சப்ளின் சரியான உயரம் பெறவில்லை, உடம்பு, கை, கால்கள் என்று எவையுமே சரியான விகிதத்தில் இருக்கவில்லை.. இப்படியாக பிற்காலத்தில் அவருடைய சிலையைச் செய்த சிற்பி கவலையுடன் சொன்னார்.. மாறாக ; சரியான அளவில் உடல் அளவு பெற்றவர்களை எல்லாம் வென்று வாழ்ந்ததுதான் அவருடைய தன்னம்பிக்கை என்றார்.
- உடலைவிட அதை இயக்கும் ஆன்மா வலிமை மிக்கது…
10. கருணை இல்லங்களில் இருப்பதும் கருணையை எதிர்பார்த்து வாழ்வதும் மிகப்பெரும் கொடுமையாகும் என்கிறார் சார்ளி சப்ளின்.
- தன்னிறைவு பெற்ற சமுதாயத்தில் கொடை வள்ளல் இருக்கமாட்டான்..
11. இன்னொருவரிடம் சென்று உதவிக்காக கையேந்தும் வாழ்க்கை இனி என்றுமே வேண்டாம்.. என்பதே சார்ளி சப்ளின் சிறுவயது இலட்சியமாகும்.
- இன்னொருவர் பாடுபட்டு உழைத்த பணத்தை பாடுபடாமல் பிச்சையாக கேட்பது குற்றம்…
12. முதலில் நம்மை நம்ப வேண்டும், அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் ஜெயிக்க முடியாது என்பது சார்ளி சப்ளின் கொள்கை.
- நம்பிக்கையே வாழ்க்கை..
13. தனது நிகழ்ச்சிகளை பார்ப்பவர் எதை ரசிக்கிறார்கள், எதை விரும்பவில்லை என்று அன்றாடம் சிந்திப்பார், அவருடைய படைப்புக்களை செம்மைப்படுத்த இதுவே காரணம். மக்களுக்கு பிடித்ததை கொடுப்பதில் அவர் வெற்றி பெற்றார்.
. மக்களை நாடி பிடித்துப் பார்ப்பவனே மக்கள் திலகமாகலாம்..
14. சோகப்பாத்திரங்களில் நடித்த சார்ளி சப்ளின் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தபோது மக்கள் கைதட்டினார்கள்.. அந்தக் கைதட்டல்களே அவரை சிரிப்பு நடிகனாக்கியது.. கைதட்டல்கள் சரியான வழிகாட்டிகள்..
. பாராட்டு வெற்றிக்கு படிக்கட்டு போடும்..
15. ஆங்கிலத்தில் ஒரு படத்தைக் கொடுத்தால் ஆங்கிலம் தெரிந்தோருக்கு மட்டுமே புரியும், உலகத்தில் ஆங்கிலம் தெரியாதவர்களே அதிகம், ஆகவே உலகத்தை குறிவைத்து மொழியற்ற படங்களை எடுத்ததே அவருடைய பெரு வெற்றியின் இரகசியம்.
- ஒன்றே உலகம் ஒருவனே தேவன்..
16. பூமிப்பந்தை சுற்றி வந்தால் கண்ணில் படக்கூடிய ஒவ்வொரு சந்திலும் சார்ளி சப்ளின் படத்தை காணலாம்.. இந்த வெற்றி மவுனப்படங்களை தயாரித்ததால்தான் அவருக்குக் கிட்டியது.
- உயர்ந்த கலைக்கு மொழி இல்லை..
17. மேடை ஏறி நடிப்பது வெறும் விளையாட்டல்ல.. அதிலும் சில ஒழுக்கவிதிகள் உண்டு, கட்டுப்பாடுகள் உண்டு, கடுமையான பயிற்சிகள் உண்டு, அவற்றை முறைப்படி பின்பற்றினால் நடிப்பு மெருகேறும் என்பதைக் கண்டு கொண்டார்.
- முயற்சி இல்லாதவன் கலையில் வென்றதில்லை..
18. சினிமாவின் ஆனா ஆவன்னா கூட சார்ளி சப்ளினுக்கு தெரியாது ஆனால் மேடை நாடகத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சி திரைப்படங்களாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
- இன்று நாம் இருக்கும் நிலை நிரந்தரமல்ல அடுத்த கட்டத்திற்கு தயாராக வேண்டும்..
19. வந்த வாய்ப்பை பாழாக்கிக் கொள்ளக்கூடாது.. அதே சமயம் புது நடிகன்தானே என்பதற்காக அடிமாட்டு சம்பளத்திற்கு உடன்படவும் கூடாது.
- சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கும் தமிழ் ஊடக உலகம் திருந்த வேண்டும்..
20. தினந்தோறும் மற்றவர் வருவதற்கு முன்பதாகவே ஸ்ரூடியோ சென்றுவிடுவார் சார்ளி சப்ளின் அங்கிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆச்சரியத்தோடு பார்த்து, ரசித்து கற்றுக்கொண்டார், கேட்டுத் தெரிந்துகொண்டார்.
- தினசரி கற்பவனே வெற்றி பெறுகிறார்..
21. காலையில் முதல் ஆளாக ஸ்ரூடியோ போகும் சார்ளி சப்ளின் மாலையில் கடைசி ஆளாக வீடு வருவார் அவருடைய ஆர்வத்தையும், அனைத்தையும் அறியும் ஆற்றலையும் கண்டு மற்றவர்கள் இறுதியில் அசந்து போனார்கள்.
- சிறிய மனிதனும் எறும்புபோல உழைத்தால் ஜாம்பவான்களையும் வெல்லலாம்..
22. வலது கால் சப்பாத்தை இடது காலுக்கும் இடது கால் சப்பாத்தை வலது காலுக்கும் போட்டார்.. இப்படி மாற்றிப் போட்டே அனைவர் கவனத்தையும் தொட்டார்.
- புதுமையே வெற்றி பெறும்..
23. மற்றவர் இயக்கத்தில் நடித்தால் சுதந்திரம் இல்லை என்பதால் தானே இயக்க வேண்டும் என்றார்.. வாழ்வா சாவா என்ற முடிவுக்கு வந்தார். தன்னம்பிக்கையும் துணிச்சலுமே அவரை வழி நடத்தியது.
- உழைத்திட வேண்டும் கைகளை நம்பி..
24. படப்பிடிப்பு இல்லாத நேரம் கூட சார்ளி சப்ளின் யாருடனும் பேசுவதில்லை தன்பாட்டுக்கு படித்துக் கொண்டே இருப்பார்.
- வீண் பேச்சுக்கள் காலத்தின் விரயம்..
25. பணப்பெட்டிகளை குறி வைத்து படம் எடுத்தால் ஒரு காலமும் காலத்தை வென்ற அமர காவியங்களை படைக்க முடியாது என்றார்..
- காசால் காவியம் படைக்க முடியாது.. காசுதான் படைக்கலாம்..

உயர்வை அடைவது நம் கடமை!



நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில், நாம் மிகவும் சாமர்த்தியசாலிகள்! யாராவது நம்மை நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள் கூறினால், 'அடப்போங்கய்யா...' என அலட்சியப்படுத்துவோம். ஆனால், பிரச்னை வந்தால், 'அடடா... அன்னிக்கே பெரியவர் சொன்னாரே... கேக்காம தப்பு செய்துட்டோமே...' என, புலம்புவோம். மாடுகள் ஓடியபின், பட்டியை மூடுவதிலும், காலம் போன பின், கண்ணீர் விடுவதிலும் என்ன பலன்!
பெரும் செல்வந்தர் ஒருவர், கப்பல் நிறைய பொருட்களை ஏற்றி, வியாபாரத்திற்காக கடலில் பயணப்பட்டார். எதிர்பாராத விதமாக, பெரும் புயலில் சிக்கி, உடைந்து சின்னா பின்னமானது கப்பல். அதன் உடைந்த பாகத்தை பற்றியபடி, நீந்தி, ஒரு தீவின் கரையில் ஒதுங்கினார் செல்வந்தர். 
அவரைக் கண்டதும், கைகளில் மாலைகளுடன் ஓடி வந்த அத்தீவு மக்கள், 'எங்கள் மன்னரே, வருக... வருக...' என்று கூறி, மாலை அணிவித்து, பட்டத்து யானையின் மீது ஏற்றி, அரண்மனைக்கு அழைத்து சென்று, அவருக்கு முடி சூட்டினர்.
செல்வந்தருக்கோ ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்த முதியவர் ஒருவரிடம் அது குறித்து விவரம் கேட்டார். அதற்கு அவர், 'இது, இத்தீவின் வழக்கம். இங்கு யார் புதிதாக வந்தாலும், அவன் ஒரு ஆண்டு அரசனாக இருப்பான்; ஒரு ஆண்டு முடிந்ததும், அவனை பதவியிலிருந்து இறக்கி, தூரத்தில் மனித நடமாட்டமேயில்லாத ஒரு தீவில் விட்டு விடுவர். உயிர் வாழ அடிப்படை வசதி இல்லாத அத்தீவில் எப்படி உயிர் வாழ முடியும்... அரசன் இறந்து விடுவான். பின், இப்படிப் புதிதாக வருபவரை மன்னராக்குவர்...' என்றார்.
இதைக் கேட்ட செல்வந்தருக்கு, வேர்த்துக் கொட்டியது. 'பெரியவரே... ஒரு ஆண்டு ஆகிவிட்டால், என் கதையும் அதுதானா, தப்பிக்க வழியே இல்லையா?' என்றார்.
'வழி உண்டு; நீ அரசனாக இருக்கும்போதே, இங்கிருந்து ஆட்களை அனுப்பி அத்தீவைப் பண்படுத்தி, பாதைகள் போடச் செய்; விளை நிலங்களை உருவாக்கு; வீடுகளையும், உனக்கான மாளிகையையும் உருவாக்கு. இப்படிச் செய்தால், நீ அங்கு போகும் போது, துயரப்பட மாட்டாய்; நலம் பெறுவாய்...' என்றார்.
பெரியவர் கூறியதைக் கேட்ட செல்வந்தர், 'நீங்கள் இதுவரை இருந்த அரசர்களுக்கு, இதைக் கூறவில்லையா...' எனக் கேட்டார்.
'கூறினேன்; பதவி சுகத்தில் களியாட்டம் ஆடினரே தவிர, நான் கூறியதைச் செய்யவில்லை...' என்றார்.
அன்றிலிருந்து, முதியவர் வழிகாட்டுதலின்படி, ஆள் அரவமற்ற அந்த தீவில், புது நகரத்தை உருவாக்கினார் செல்வந்தரான அந்த மன்னர்.
ஓராண்டு காலம் முடிந்ததும், தங்கள் வழக்கப்படி, அரசரை தீவில் விட்டனர் மக்கள். அரசரோ, தனக்கு வழிகாட்டிய பெரியவரையும் தீவிற்கு அழைத்து வந்து விட்டார்.
இதற்கு முன், இங்கு வந்து இறந்த போன அரசர்களைப் போல இல்லாமல் நலமாக வாழ்ந்தார். அதற்கு வழிகாட்டிய பெரியவர், 'மன்னா... பழைய தீவில் இருந்து, இந்தத்தீவிற்குப் பொருட்களை அனுப்பி உன்னை பாதுகாத்துக் கொண்டது போல், புண்ணியங்கள் செய்து, அதை மேலுலகத்திற்கு அனுப்பி வை. அங்கு போனதும், நீ நலமாக வாழ்வாய்...' என்று கூறி, மறைந்தார்.
அரசருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. பெரியவராக வந்து வழிகாட்டி, தன்னைக் காப்பாற்றியது தெய்வம் என! அதன்படியே, புண்ணியங்களைச் செய்து, நற்கதி பெற்றார்.
இது கதை அல்ல, நம் அன்றாட வாழ்வில், யாரோ ஒருவர் மூலம், உபதேசித்து வழிகாட்டுகிறது தெய்வம். அதை உணர்ந்து செயல்பட்டு, உயர்வை அடைவது நம் கடமை! 


"வேதமும் பெண்களும்".


"ஆண்கள் எல்லா அங்கமும் தரை மேல் பட சாஷ்டாங்கமாக விழவேண்டும்.ஆனால் பெண்கள் தாய்மைக்குரிய உறுப்புகள் தரையில் படாத வண்ணம் நமஸ்கரிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது)
[எஸ்.கணேச சர்மா புத்தகத்தில் இருந்து வரகூரான்
நாராயணனால் தட்டச்சு செய்யப்பட்டது]

.
ஒரு முனிவன், "இந்திரனை வெல்லக் கூடிய ஒரு
பிள்ளை தனக்கு வேண்டும்"என்று தவமிருந்தார்.
பிரம்மா எதிரே வந்து, வேண்டியதைக் கேட்கச் சொன்னார்.
இந்திரனை அழிக்கப் பிள்ளை வேண்டும் என்பதற்கு
பதிலாக,'இந்திரன் அழிக்கும் ஒரு பிள்ளை வேண்டும்'
என்று கேட்டுவிட்டார்! விபரீதம் நேர்ந்துவிட்டது.
அதே போல் கும்பகர்ணன் நித்தியத்துவம் என்று கேட்க
விரும்பினாலும் "நித்திரைத்துவம் வேண்டும்" என்று வாய் தவறிவிட்டதும் நமக்குத் தெரிந்த கதைதான்.
எனவே வேதம் ஓதுவதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதனால்தான் இவை எல்லாரிடமும் கொடுக்கப்படாமல் மிகவும் பாதுகாப்புடன் எச்சரிக்கையாகக் கையாளக் கூடிய சில குறிப்பிட்டவர்களிடம் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எல்லோரும் எல்லாவற்றையும் செய்வது சாத்தியமில்லை. ஆகவே,இந்த ஏற்பாட்டில் ஏதோ ஏற்றத்தாழ்வு இருப்பதாக நினைக்கக் கூடாது.
உதாரணமாக பெண்கள் மந்திரங்கள் சொல்ல வேண்டாம்
என்று இருக்கிறது.காரணம்,இந்த மந்திர ஒலிகளை நாபிக் கமலத்திலிருந்து எழுப்பவேண்டியிருக்கிறது.
எனவே,பெண்கள் அதைச் சொல்லும்போது கர்ப்பப்பைக்கு ஏதாவது தாக்கம் வரலாமென்ற அக்கறையால்தான் அதை விலக்கினார்கள்.
உலகில் சிருஷ்டிக்குக் காரணமான,தாய்மைக்கு மூலமான பெண்கள், அதெற்கென்று இருக்கும் உறுப்பைக் காப்பது முக்கியம் இல்லையா?
நமது சாஸ்திரங்கள் அர்த்தம் நிறைந்தவை என்பதில் சந்தேகமில்லை.
நமஸ்காரம் பண்ணுவதில்கூட ஆண்கள் எல்லா அங்கமும் தரை மேல் பட சாஷ்டாங்கமாக விழவேண்டும்.ஆனால் பெண்கள் தாய்மைக்குரிய உறுப்புகள் தரையில் படாத வண்ணம் நமஸ்கரிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.

துளசியை வணங்குவதால் என்ன பயன் ?

எங்கெல்லாம் துளசி படர்ந்துள்ளதோ அவ்விடமேல்லாம் பிருந்தாவனமாகும். துளசிக்கு இன்னொரு பெயரும் உண்டு - பிருந்தை.
துளசி என்பதற்கு ஒப்பில்லாதது என்று பொருள். துளசியின் நுனியில் பிரம்மதேவரும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

துளசியை வணங்குவதால் என்ன பயன் ?

தினமும் துளசி ஸ்தோத்ரம் சொல்லி,துளசி செடியில் சிறிது நீர் ஊற்றி தொழலாம். தினமும் முடியாதவர்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி துளசியை தொழலாம். மஞ்சள் மற்றும் குங்குமத்தை துளசியின் தண்டில் வைத்து, பூவைத்தும் வழிபடலாம்.
துளசி ஸ்தோத்ரம்

ஸ்ரீமத் துளசியம்மா, திருவே கல்யாணி அம்மா
வெள்ளிக் கிழமைதன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க் கிழமைதன்னில் செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளினை நான் பணிந்தேன்
பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே
ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே
அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
வனமாலை எனும் மறுவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே

எவர் தன்னை பூஜை செய்கின்றனரோ அவருக்கு என்ன பலன் வந்து சேரும் என்பதை துளசியே சொல்கின்றாள்;
அன்புடனே நல்ல அருந்துளசிக் கொண்டுவந்து மண்ணின்மேல் நட்டு மகிழ்ந்து நல் நீரூற்றி முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு செங்காவி சுற்றுமிட்டு திருவிளக்கும் ஏற்றிவைத்து பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில்வைத்து புஷ்பங்களை சொறிந்துப் பூஜித்தப் பேர்களுக்கு என்ன பலன் என்று ருஷிகேசர் தான் கேட்க ;
மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள் -
"மங்களமாய் எனை வைத்து மகிழ்ந்து உபாசித்தவர்கள்
தீவினையைப் போக்கி சிறந்த பலன் நானளிப்பேன்,
அரும்பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்,
தரிதிரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன்,
புத்திரன் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் அளிப்பேன்,
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்,
கிருஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன்,
மும்மூர்த்திகள் பூஜை செய்தால் மோக்ஷபதம் நான் கொடுப்பேன்,
கோடி காராம்பசுவை கன்றுடனே கொண்டு வந்து கொம்புக்கு பொன் அமைத்து குழம்புக்கு வெள்ளிக் கட்டி கங்கைக்கரை தன்னில், கிரகண
புண்யக் காலத்தில் வாலுருவி அந்தணர்க்கு மஹா தானம் செய்த பலன் நானளிப்பேன். சத்யம்" என்று நாயகியும் சொல்லலுமே,
"அப்படியே ஆகுமென" திருமால் அறிக்கை இட்டார்.
இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள் அற்புதமாய் வாழ்ந்திடிவார்  பிருந்தையின் அருளால்!

புத்திர பாக்யம் அருளும் ஸ்ரீ புத்தரகாமேஸ்வரர்


குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச் சொல் கேளாதோர் என்பதற்கு ஏற்ப மழலைச் செல்வத்தை வேண்டுவோருக்கு வேண்டும்படி அருள் செய்து அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ புத்தரகாமேஸ்வரர் ஆலயத்தை பற்றி இக்கட்டுரையில் அறிந்து கொள்வோம்.
தசரத மஹா சக்கரவர்த்தி நீண்டகாலமாக மழலைச் செல்வம் இல்லாமல் மனம் வருந்தி தன் குலகுருவான வசிஷ்டரிடம் சென்று கேட்டபோது அவர் நீ தென்னாட்டினை அடைந்து ஜமதக்கனி முனிவரின் கமண்டலத்திலிருந்து உற்பத்தியாகி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து பின்பு திரும்பி வடக்கிலிருந்து தெற்காக பாயும் கமண்டல நாக நதிக்கரையில் ஓர் சிவாலயம்.
அமைத்து வழிபாடு செய்து புத்திரகாமேட்டி யாகம் செய்து அதன் அவிர் பாகத்தை (பாயசம்) உண்டால் புத்திரபேறு கிடைக்கும் என சொல்லியதின்படி அவ்வாறே ஓர் சிவாலயம் அமைத்து கலைக்கோடி முனிவரை வைத்து ஸ்ரீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததன் பலனாக ஸ்ரீராம லட்சும பரத சத்ருகன் ஆகிய அவதார புருஷர்கள் அவதரித்ததாக வரலாறு. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரின் ஈசான்ய மூலையில் புதுகாமூர் பகுதியில் அமைந்திருக்கின்றது.
இக்கோவிலில் கமண்டல நாகநதிக்கரையில் அழகிய படித்துறை அமைந்துள்ளது படித்துறையின் இடதுபுறம் வடக்கு முகமான படித்துறை விநாயகர் சன்னதியும், வலப்புறம் வடக்குநோக்கிய வீர ஆஞ்சிநேயர் தனி சன்னதியும் உள்ளது. ராசகோபுரத்திற்கு எதிரே ஆலயத்தின் வெளிப்புறம் தசரத மஹாசக்கரவர்த்திக்கு தனி சன்னதியும் உள்ளது.
ஆலயத்திற்கு வெளிப்புறம் ஈசான்ய மூலையில்ää பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாயந்த அரச மரமும் வேப்ப மரமும் இணைந்துள்ள இடத்தில் நாகதோஷம் கிரகதோஷம் செவ்வாய் தோஷம் புத்திரதோஷம் போன்றவையால் பாதிக்கப்படட்வர்களால்; பரிகாhரமாக அமைக்கப்பட்ட நாகசிலைகள் நூற்றுக்கணக்கில் உள்ளது. ஆலயத்தின் முகப்பில் பழமையான மூன்று நிலை இராஜகோபுரம் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இடதுபுறம் வலம்புரி விநாயகர் தனி சன்னதி, அதனை தொடர்ந்து 63 நாயன்மார்கள் சன்னதியும் உள்ளது. பின்புறம் நிருதிமூலையில் அஷ்டலிங்கங்களும் உள்ளது. அதனை தொடர்ந்து, ஸ்ரீவீரபத்ரர் காளி சன்னதியும், வள்ளிதெய்வாணையுடன் கூடிய சுப்ரமண்யர் சன்னதியும் உள்ளது கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் குருதட்சணாமூர்த்தி மகாவிஷ்ணு ஸ்ரீபிரம்மா ஸ்ரீதுர்கை ஆகியோர் உள்ளனர். சண்டிகேசுவரர் தனி சன்னதி உள்ளது.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவியின் பெயர் ஸ்ரீபெரியநாயகி நின்றகோலத்தில் மிகவும் அற்புதமாக சிரித்தபடி காட்சியளிக்கும் இந்த அம்மனின் எழில் கோலத்தை பார்த்து பார்த்து பரவசமடைந்து கொண்டே இருக்கலாம் மேலும் ஆலயத்தில் ஸ்ரீ வேணுகோபாலசாமி சகஸ்ரலிங்கம் ஸ்ரீரேணுகாம்பாள் ஆகிய தனி சன்னதியும் ஸ்ரீ கால பைரவர் ஸ்ரீசூரிய பகவான் ஸ்ரீசனிஸ்வரபகவான் சன்னதியும் உள்ளது. மேலும் அம்மனுக்கு எதிரிலும் ஒருகொடிமரம் உள்ளது. எனவே முற்காலத்தில் இந்த ஆலயத்தில் இரண்டு பிரம்மோற்சவுங்கள் நடத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஸ்தல விருட்சமாக ஆண்டிற்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் மட்டும் பூக்கக்கூடிய பாரிஜாத இனத்தை சேர்ந்த பவள மல்லி மரமும் வில்வ மரமும் உள்ளது.
பல ஏக்கர் பரப்பளவில் விஸ்தாரமாக இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கமண்டல நாகநதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் திங்கட்கிழமை தோறும் சோமவார வழிபாடும் சங்கடரசதுர்த்தி தோறும் படித்துறையில் உள்ள  விநாயகர் வலம்புரி விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் சனிக்கிழமை தோறும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பூஜையும் தேய்பிறை அஷ்டமி தோறும் ஸ்ரீகாலபைரவர் சிறப்பு பூஜையும் பிரதோஷ வழிபாடும் 63 நாயன் மார்கள் குரு பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி பூஜையும் உற்சவர் சுவாமியான சோமாஸ்கந்தர் ஆலயத்தின் வெளி பிரகாரத்தை வலம் வருகின்ற நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறுகிறது. சிவாலயங்களில் ஆண்டிற்கு 6 முறை நடைபெறும் நடராஜர் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகிறது. சிறப்பு விழாக்களாக ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத பௌர்ணமியன்று குழந்தைபேறு வேண்டும் தம்பதிகள் கூட்டாக பங்குபெறும் ‘மஹாபுத்திரகாமேட்டி யாகம்” நடைபெறுகிறது இந்த யாகத்தில் நாட்டின் பல  பகுதிகளிருந்தும்ää வெளிநாட்டில் இருந்தும் குழந்தைபேறு இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு புத்திர பாக்யம் பெற்றுள்ளனர; ஆடி பெருக்கு அன்று உற்சவர் சுவாமிகளுக்கு கமண்டல நாக நதியில் அபிஷேகமும் படி பூஜையும் நடைபெறுகிறது. ஆடி மாத சுவாதி நட்சத்திரன்று லட்சதீப  விழாவும் சுவாமி நகர் வலம் வருதலும் நடைபெறுகிறது.
ஜப்பசி மாத பௌர்ணமியன்று. “மஹா அன்னாபிஷேக விழா” வெகு சிறப்பாக நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெறும் அன்னதானமும் நடைபெறுகின்றதுää கார்த்திகை மாதத்தில் வருகின்ற  திங்கட்கிழமைகளிலும் நள்ளிரவு தொடங்கி பக்தர்கள் ஆலயத்திற்கு வெளியில் உள்ள அரச வேம்;பு இணைந்துள்ள மரத்தின் கீழ் உள்ள நாகசிலைகளுக்கு தம்பதிசமேதராக பூஜை செய்து விட்டு ஆலயத்திற்கு உள்ளே சென்று சுவாமி அம்மனை தரிசித்துவிட்டு சுமங்கலி பெண்கள் காலில் விழந்து ஆசி வாங்குவது சிறப்பாக நடைபெறுகிறது.
மார்கழி மாதம் ஆருத்ராதரிசனவிழாவும்ää சுவாமி நகர் வலம் வருகின்ற நிகழ்வும் நடைபெறுகிறது. தைமாதம் மாட்டு பொங்கல் அன்று திருவூடல் விழாவும்ää முக்கிய நிகழ்வாக காணும் பொங்கல் அன்று ஊர்மக்கள் லட்சகணக்கில் ஒன்று கூடும் ஆற்று படி விழாவும் ஸ்ரீபுத்திகாமேஸ்வரர் உற்சவர் சுவாமிகள் ஆற்றில் எழந்தருளும் விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. மாசி மாதம் மஹா சிவராத்திரி விழா நான்கு கால பூஜையுடன் சிறப்பாக நடைபெறுகிறது டன் கணக்கில் உப்பு வண்ணபொடி கொண்டு ஒவ்வொரு சிவராத்திரியன்றும் சிவ தத்துவத்தை விளக்கும் அற்புதமான உப்பு ஓவியம் அமைக்கப்படுவதும் சிறப்புää பங்குனி மாதம் பங்குனி உத்திரத்தன்று ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது.
மன்னராட்சி காலத்தில் ஜாகீர்தாரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆயலம் தற்போது இந்து சமய அற நிலைய ஆட்சித்துறையின் கட்டுபாட்டில் உள்ளது பக்தர்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் இணைந்து பக்தர்கள் சங்கம் அமைத்து ஆலயத்தில் மேற்கூறிய விழாக்கள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதற்கும் ஆலயத்தின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் பணி செய்துவருகின்றனர்.
இவ்வளவு சிறப்பும் பெருமையும் பழமையும் வாய்ந்த இந்த ஆலயம் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் அமைந்துள்ளது ஆரணி நகருக்கு சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது இரயில் மார்க்கமாக வரவேண்டும் என்றால் காட்பாடி மற்றும் விழப்புரம் பகுதிகளிலிருந்து வரமுடியும்  விரைவில்  திருப்பணி துவங்க உள்ள இந்த ஆலயத்திற்கு நாமும் நேரில் சென்று தரிசித்து திருப்பணியில் பங்கொண்டு சிவ புண்ணியம் பெறலாமே.
புத்திரபாக்யம் வேண்டுவோர் விரதம் அனுஷ்டிக்கும் முறை:
புத்திரபாக்யம் வேண்டுவோர்ää தொடர்ந்து 5 திங்கட்கிழமைகளில் வீட்டிலேயே உபவாசம் இருக்க வேண்டும் அந்த சமயத்தில் முதல் வாரம் 1 குழந்தைக்கும் இரண்டாவது வாரம் 2 குழந்தைகளுக்கு இப்படியே ஐந்தாவது வாரம் 5 குழந்தைகள் வரை அன்னமிடுதல் வேண்டும் பின்பு 6 வது வாரம் ஸ்ரீபுத்திரகாமேட்டீசுவர் கோவிலுக்கு வந்து சுவாமிää அம்மனுக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தால் புத்தரபாக்யம் நிச்சயம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் -


'சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவன்தானே!' என்று போற்றுகின்றனர் வைணவப் பெருமக்கள்.
பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்திருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன. அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர்.
''ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே... அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம்'' என பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள்.
ஆச்சார்யர்கள் சொன்னதை விடுங்கள்... ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார்... ''கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று!
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார ஸேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன் நிறைவாக வாழலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
'சரக சம்ஹிதை’யின் ஒளஷத சாஸ்திரம், அற்புதமாக இதை விவரிக்கிறது. 'எப்படி வாசுதேவனுக்குத் தோல்வி என்பதே கிடையாதோ, இந்தச் சமுத்திரம் எப்படி வற்றாமல் இருக்கிறதோ, என் தாயாரின் திருமணத்தை எப்படி நான் பார்த்தது கிடையாதோ... இந்த சத் வாக்கியங்கள் அனைத்தும் உண்மையானதைப் போல, இந்த மருந்தும் வேலை செய்து குணமாக்கும்’ என்கிற மந்திரத்தைச் சொல்லியபடி, மருந்து தயார் செய்வார்களாம்.
இத்தனை பெருமைகளைக் கொண்டவன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. இதனால்தான், அபராஜிதன் எனும் திருநாமம் அமையப் பெற்றான். அபராஜிதன் என்றால், தோல்வியே இல்லாதவன் என்று அர்த்தம்!
பகவானின் ஒவ்வொரு அவதாரத்துக்கும் அவனுடைய ஒவ்வொரு திருநாமத்துக்கும் அளப்பரிய சக்தி உண்டு. அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டால், காரியங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். உடுத்துகிற ஆடை, பஞ்சில் இருந்து வருகிறது; அந்தப் பஞ்சு, புடவையாகவும் வேஷ்டியாகவும், சட்டையாகவும் துண்டாகவும் எப்படியெல்லாம் மாறுகிறது பார்த்தீர்களா? பகவானின் திருமேனி அவதாரமும் திவ்விய நாமங்களும் அப்படித்தான்!
சஜாதிபய பேதம், விஜாதிபய பேதம், ஸ்வத்த பேதம் என மூன்று பேதங்கள் உள்ளன. அதாவது, தென்னையும் வாழையும் மரம்தான்! ஆனால், தென்னை என்பது ஒரு வகை மரம்; வாழை என்பது வேறொரு வகையானது! ஆனால், இரண்டுமே மரம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இது, சஜாதிபய பேதம்!
அடுத்து, விஜாதிபய பேதம். அது வேறு, இது வேறு. அதாவது, ஒன்று மரமாகவும், இன்னொன்று மலையாகவும் இருக்கிறது. ஆகவே, மரத்தையும் மலையையும் எப்படி ஒரே வகை என்று சொல்ல முடியும்?
மூன்றாவதாக, ஸ்வத்த பேதம். அதாவது ஒரு மரம் இருக்கிறது. அதில் வேர், கிளை, இலை, பழம் என அனைத்தும் இருக்கின்றன. இப்போது, வேரைப் பார்த்து மரம் என்பீர்களா? கிளையை அல்லது இலையைப் பார்த்து மரம் என்று சொல்வீர்களா? வேரை வேர் என்றும் கிளையை கிளை என்றும், இலையை இலை என்றும் கனியை கனி என்றும்தானே சொல்வோம்?! மொத்தமாக மரம் என்று சொன்னாலும், தனித்தனியே ஒவ்வொரு பெயருடன் வேறுபட்டுத் திகழ்கின்றன, பார்த்தீர்களா?
இறைவன் எனும் பிரமாண்டமானவனும் இப்படித்தான்! பரமாத்மாவான அந்தப் பரந்தாமன், அனைத்துக்கும் அப்பாற்பட்டவன். எல்லாமுமாக இருப்பவனும் அவனே; எதுவுமற்றுத் திகழ்பவனும் அவனே! ஏகஹ என்றும் ந ஏகஹ என்றும் ஸ்ரீகிருஷ்ணனை இரண்டு விதமாகவும் அழைப்பது அதனால்தான்! இதைச் சொல்லும் விதமாகத்தான், உணர்த்துகிற வகையாகத்தான் அவனுடைய ஒவ்வொரு திருநாமமும் அமைந்தது.
'நீராய் நிலனாய்...' என்று துவங்குகிற பாடல் உண்டு. அதில் நீராகவும் இருக்கிறாய்; நிலமாகவும் இருக்கிறாய்; நெருப்பாகவும் இருக்கிறாய்; காற்றாகவும் இருக்கிறாய் என்று ஆழ்வார் வியந்து பாடுவார். அந்த வியப்பின் நிறைவாக, 'அட போப்பா... உன்னை எப்படிக் கூப்பிடுறதுன்னே எனக்குத் தெரியலை!' என்று ஏக்கமாகச் சொல்வார். ஆனால் ஒரு விஷயம்... இங்கே பல இடங்களில், வரிகளில்... இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவுறச் சொல்லிக் கொண்டே வருகிற உத்தி ரசனைக்கு உரியது!
மண்ணை எடுத்துச் சாப்பிட்டான் கண்ணன். இதை பலராமன் யசோதைக்குச் சொல்ல... 'எல்லாரும் பொய் சொல்றாங்கம்மா... நான் மண்ணைச் சாப்பிடலை’ என்று குறும்பு கொப்பளிக்கச் சொல்கிறான் கண்ணன். 'நீ விஷமக்காரனாச்சே... செஞ்சாலும் செய்திருப்பே. எங்கே வாயைத் திறந்து காட்டு’ என்கிறாள் யசோதை.
வேறு வழியின்றி, தன் வாயைத் திறக்கிறான் கண்ணபிரான். அங்கே, ஏழுலகையும் தன் தாயாருக்குக் காட்டி அருள்கிறான் பகவான். அதாவது, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்பது ஒருவன்தான். ஆனால், அவன் காட்டியது ஏழுலகங்களையும்! 'வையம் ஏழும் கண்டாள்... என்றொரு பாடல், 'காட்டியது ஒருவன்; கண்டது ஏழு’ எனும் பொருள்படும்படி, அழகுற விவரிக்கிறது.
ஸ்ரீகிருஷ்ணனுக்கு 'சஹா’ எனும் திருநாமம் அமைந்தது அதனால்தான்! அதாவது... கொடுப்பது, கொடுப்பவன் என்று அர்த்தம். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளிக் கொடுப்பவன் ஸ்ரீகிருஷ்ணன் அல்லவா?
சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட உபதேசித்தவன், அந்தக் கருணாமூர்த்தி அல்லவா?
சர்க்கரையை, பச்சை மிளகாய் என்றோ வேம்பு என்றோ மாற்றிச் சொல்லிவிட்டு, அந்தச் சர்க்கரையைச் சாப்பிட்டால் அது காரமாகிவிடுமா? கசப்பாகிவிடுமா? சர்க்கரையின் இயல்பை மாற்ற எவராலும் முடியாது. அப்படித்தான்... பகவானின் எந்தத் திருநாமங்களைச் சொன்னாலும், அவனுடைய பரிபூரண அன்பும் ஆசீர்வாதமும் நமக்கு என்றைக்கும் உண்டு.
இதேபோல் 'வஹா’ எனும் திருநாமமும் கொண்டிருக்கிறான் பகவான். வஹா என்றால் வசிப்பது, வசிப்பவன் என்று அர்த்தம்.
இதைத்தான் பராசர பட்டர், தன் சிஷ்யரான மைத்ரேயரிடம்... 'ஜகத் முழுவதுமாக, ஜகத்தில் உள்ள உயிர்கள் அனைத்திலுமாக ஊடுருவிப் பரவியிருக்கிறான் பரந்தாமன்’ என்கிறார். அதாவது அந்தராத்மாவாக, அந்தராமியாக, அனுப்பிரவேசம் பண்ணியிருக்கிறான்.
அட... இதைத்தானே பிரகலாதனும் சொன்னான் என்கிறீர்கள்தானே?!
ஆமாம். 'இறைவன் எங்கே இருக்கிறான்?' என்று இரணியன் கேட்டதற்கு, 'எங்கும் உளன்’ என்றான் பிரகலாதன். உடனே 'இங்கே இருக்கிறானா?' என்று கேட்டான் இரணியன். எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி இது. பின்னே... எங்கும் இருப்பவன் என்று சொல்லிவிட்ட பிறகு இங்கே இருக்கிறானா என்று கேட்கலாமோ?
'இந்தத் தூணில் இருக்கிறானா?' என்று அவன் கேட்க, 'இருக்கிறான்’ என்று பதில் சொன்னால், 'அந்தத் தூணில் இல்லையா?' என்கிற அடுத்த கேள்வியும் வரும். இதை உணர்ந்த பிரகலாதன், விதண்டாவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்... எனச் சொன்னான்.
சஹா என்றால் கொடுப்பவன்; வஹா என்றால் வசிப்பவன். கொடுக்க வேண்டும் என்றால், கூட இருந்துதானே ஆக வேண்டும்?!
நம்மில், நமக்குள்... ஊடுருவியிருக்கிறான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். இன்று இல்லையேனும் நாளை... நாளை இல்லையேனும் அடுத்த வாரம்... அதுவும் இல்லையெனில் அடுத்த மாதம்... நாம் திருந்த மாட்டோமா, நல்வழிக்கு வரமாட்டோமா எனக் காத்துக் கொண்டிருக்கிறான் கண்ணபிரான்.
'ஆடுற வரைக்கும் ஆடு. ஓய்ஞ்சு முடிஞ்சாதான் உன் புத்திக்கு எதுவுமே உரைக்கும்’ என்று பிள்ளையைப் பெற்ற தாய், பொறுமை காப்பதைப் போல, நமக்குள் இருந்தபடி நமக்காகக் காத்திருக்கிறான் கண்ணபிரான். முடிந்தால், அவனை உணர முயற்சி செய்து பாருங்களேன்!

சுந்தர காண்டம்

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன்
பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட
விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன்
கூறியுள்ளார்.
2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திரசுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான்மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும்அதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும்
சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர்பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய்விட்டது.
3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும்மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிகபெரியவர்கள் கூறியுள்ளனர்.
4. சுந்தரகாண்டத்தை நாம் எந்தஅளவுக்கு படிக்கிறோமோ அந்த
அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால்வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும்.கஷ்டங்கள் தொலைந்து போகும்.
7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால்,வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.
8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமானதிருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய்விடும்.
9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால்அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை,துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு,வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.
10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும்.முடியாத செயல்கள் முடிந்து விடும்.
11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம்ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம்உண்டாகும்.
12. ராம நவமியன்று விரதம்இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம்படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.
13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்றநம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான்.எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்கவேண்டும் என்கிறார்கள்.
14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள்தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில்இருந்து விடுபடலாம்.
15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத்தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு "ஜெய பஞ்சகம்''என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோகவனத்துக்கு செல்லும் முன்பு கூறியஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.
17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம்செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும்அகலும்.
18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம்தரும் சொர்க்கம் என்பார்கள்.
19. பெண்கள் வேதத்தை சொல்லக் கூடாது என்பது விதி.எனவே சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லியபுண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.
20. ராமாயணத்தில் மொத்தம்
24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள்சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.
21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ,அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல்கிடைக்கும்.
22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும்நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.
23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம்படித்தால் மனம் லேசாகி விடும்.
24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில்33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ளஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால்
உடனே திருமணம் கைகூடும்.
25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றியசுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.
26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள்
தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் ஆண்
குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில்இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும்குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.
28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன்முழு பலனும் கிடைக்கும்.
29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது.அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.
30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவஉணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவஉணவு தயாரிக்கக் கூடாது.
31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்றசக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில்ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன்பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்தஅறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும்நல்லது.
34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும்படிக்கலாம்.
35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூடஇடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.
36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில்சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.
37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும்ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிகஎளிதாக பலன் பெறலாம்.
38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும்ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால்அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.
39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும்நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்தநைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.
40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள்வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம்செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.