குழல்
இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச் சொல் கேளாதோர் என்பதற்கு ஏற்ப மழலைச்
செல்வத்தை வேண்டுவோருக்கு வேண்டும்படி அருள் செய்து அருள்பாளித்துக்
கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ புத்தரகாமேஸ்வரர் ஆலயத்தை பற்றி
இக்கட்டுரையில் அறிந்து கொள்வோம்.
தசரத
மஹா சக்கரவர்த்தி நீண்டகாலமாக மழலைச் செல்வம் இல்லாமல் மனம் வருந்தி தன்
குலகுருவான வசிஷ்டரிடம் சென்று கேட்டபோது அவர் நீ தென்னாட்டினை அடைந்து
ஜமதக்கனி முனிவரின் கமண்டலத்திலிருந்து உற்பத்தியாகி மேற்கிலிருந்து
கிழக்கு நோக்கி பாய்ந்து பின்பு திரும்பி வடக்கிலிருந்து தெற்காக பாயும்
கமண்டல நாக நதிக்கரையில் ஓர் சிவாலயம்.
அமைத்து
வழிபாடு செய்து புத்திரகாமேட்டி யாகம் செய்து அதன் அவிர் பாகத்தை (பாயசம்)
உண்டால் புத்திரபேறு கிடைக்கும் என சொல்லியதின்படி அவ்வாறே ஓர் சிவாலயம்
அமைத்து கலைக்கோடி முனிவரை வைத்து ஸ்ரீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததன்
பலனாக ஸ்ரீராம லட்சும பரத சத்ருகன் ஆகிய அவதார புருஷர்கள் அவதரித்ததாக
வரலாறு. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி
நகரின் ஈசான்ய மூலையில் புதுகாமூர் பகுதியில் அமைந்திருக்கின்றது.
இக்கோவிலில்
கமண்டல நாகநதிக்கரையில் அழகிய படித்துறை அமைந்துள்ளது படித்துறையின்
இடதுபுறம் வடக்கு முகமான படித்துறை விநாயகர் சன்னதியும், வலப்புறம்
வடக்குநோக்கிய வீர ஆஞ்சிநேயர் தனி சன்னதியும் உள்ளது. ராசகோபுரத்திற்கு
எதிரே ஆலயத்தின் வெளிப்புறம் தசரத மஹாசக்கரவர்த்திக்கு தனி சன்னதியும்
உள்ளது.
ஆலயத்திற்கு
வெளிப்புறம் ஈசான்ய மூலையில்ää பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாயந்த அரச மரமும்
வேப்ப மரமும் இணைந்துள்ள இடத்தில் நாகதோஷம் கிரகதோஷம் செவ்வாய் தோஷம்
புத்திரதோஷம் போன்றவையால் பாதிக்கப்படட்வர்களால்; பரிகாhரமாக அமைக்கப்பட்ட
நாகசிலைகள் நூற்றுக்கணக்கில் உள்ளது. ஆலயத்தின் முகப்பில் பழமையான மூன்று
நிலை இராஜகோபுரம் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது உள்ளே
நுழைந்தவுடன் கொடிமரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இடதுபுறம் வலம்புரி
விநாயகர் தனி சன்னதி, அதனை தொடர்ந்து 63 நாயன்மார்கள் சன்னதியும் உள்ளது.
பின்புறம் நிருதிமூலையில் அஷ்டலிங்கங்களும் உள்ளது. அதனை தொடர்ந்து,
ஸ்ரீவீரபத்ரர் காளி சன்னதியும், வள்ளிதெய்வாணையுடன் கூடிய சுப்ரமண்யர்
சன்னதியும் உள்ளது கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் குருதட்சணாமூர்த்தி
மகாவிஷ்ணு ஸ்ரீபிரம்மா ஸ்ரீதுர்கை ஆகியோர் உள்ளனர். சண்டிகேசுவரர் தனி
சன்னதி உள்ளது.
இந்த
ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவியின் பெயர் ஸ்ரீபெரியநாயகி நின்றகோலத்தில்
மிகவும் அற்புதமாக சிரித்தபடி காட்சியளிக்கும் இந்த அம்மனின் எழில் கோலத்தை
பார்த்து பார்த்து பரவசமடைந்து கொண்டே இருக்கலாம் மேலும் ஆலயத்தில் ஸ்ரீ
வேணுகோபாலசாமி சகஸ்ரலிங்கம் ஸ்ரீரேணுகாம்பாள் ஆகிய தனி சன்னதியும் ஸ்ரீ கால
பைரவர் ஸ்ரீசூரிய பகவான் ஸ்ரீசனிஸ்வரபகவான் சன்னதியும் உள்ளது. மேலும்
அம்மனுக்கு எதிரிலும் ஒருகொடிமரம் உள்ளது. எனவே முற்காலத்தில் இந்த
ஆலயத்தில் இரண்டு பிரம்மோற்சவுங்கள் நடத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஸ்தல விருட்சமாக ஆண்டிற்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் மட்டும்
பூக்கக்கூடிய பாரிஜாத இனத்தை சேர்ந்த பவள மல்லி மரமும் வில்வ மரமும்
உள்ளது.
பல
ஏக்கர் பரப்பளவில் விஸ்தாரமாக இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கமண்டல
நாகநதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் திங்கட்கிழமை தோறும்
சோமவார வழிபாடும் சங்கடரசதுர்த்தி தோறும் படித்துறையில் உள்ள விநாயகர்
வலம்புரி விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் சனிக்கிழமை தோறும் ஸ்ரீ வீர
ஆஞ்சநேயர் பூஜையும் தேய்பிறை அஷ்டமி தோறும் ஸ்ரீகாலபைரவர் சிறப்பு பூஜையும்
பிரதோஷ வழிபாடும் 63 நாயன் மார்கள் குரு பூஜையும் சிறப்பாக நடைபெற்று
வருகிறது. மேலும் இவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி பூஜையும் உற்சவர்
சுவாமியான சோமாஸ்கந்தர் ஆலயத்தின் வெளி பிரகாரத்தை வலம் வருகின்ற
நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறுகிறது. சிவாலயங்களில் ஆண்டிற்கு 6 முறை
நடைபெறும் நடராஜர் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகிறது. சிறப்பு விழாக்களாக
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத பௌர்ணமியன்று குழந்தைபேறு வேண்டும் தம்பதிகள்
கூட்டாக பங்குபெறும் ‘மஹாபுத்திரகாமேட்டி யாகம்” நடைபெறுகிறது இந்த
யாகத்தில் நாட்டின் பல பகுதிகளிருந்தும்ää வெளிநாட்டில் இருந்தும்
குழந்தைபேறு இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு புத்திர பாக்யம் பெற்றுள்ளனர;
ஆடி பெருக்கு அன்று உற்சவர் சுவாமிகளுக்கு கமண்டல நாக நதியில் அபிஷேகமும்
படி பூஜையும் நடைபெறுகிறது. ஆடி மாத சுவாதி நட்சத்திரன்று லட்சதீப
விழாவும் சுவாமி நகர் வலம் வருதலும் நடைபெறுகிறது.
ஜப்பசி
மாத பௌர்ணமியன்று. “மஹா அன்னாபிஷேக விழா” வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெறும் அன்னதானமும் நடைபெறுகின்றதுää
கார்த்திகை மாதத்தில் வருகின்ற திங்கட்கிழமைகளிலும் நள்ளிரவு தொடங்கி
பக்தர்கள் ஆலயத்திற்கு வெளியில் உள்ள அரச வேம்;பு இணைந்துள்ள மரத்தின் கீழ்
உள்ள நாகசிலைகளுக்கு தம்பதிசமேதராக பூஜை செய்து விட்டு ஆலயத்திற்கு உள்ளே
சென்று சுவாமி அம்மனை தரிசித்துவிட்டு சுமங்கலி பெண்கள் காலில் விழந்து ஆசி
வாங்குவது சிறப்பாக நடைபெறுகிறது.
மார்கழி
மாதம் ஆருத்ராதரிசனவிழாவும்ää சுவாமி நகர் வலம் வருகின்ற நிகழ்வும்
நடைபெறுகிறது. தைமாதம் மாட்டு பொங்கல் அன்று திருவூடல் விழாவும்ää முக்கிய
நிகழ்வாக காணும் பொங்கல் அன்று ஊர்மக்கள் லட்சகணக்கில் ஒன்று கூடும் ஆற்று
படி விழாவும் ஸ்ரீபுத்திகாமேஸ்வரர் உற்சவர் சுவாமிகள் ஆற்றில் எழந்தருளும்
விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. மாசி மாதம் மஹா சிவராத்திரி விழா நான்கு
கால பூஜையுடன் சிறப்பாக நடைபெறுகிறது டன் கணக்கில் உப்பு வண்ணபொடி கொண்டு
ஒவ்வொரு சிவராத்திரியன்றும் சிவ தத்துவத்தை விளக்கும் அற்புதமான உப்பு
ஓவியம் அமைக்கப்படுவதும் சிறப்புää பங்குனி மாதம் பங்குனி உத்திரத்தன்று
ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது.
மன்னராட்சி
காலத்தில் ஜாகீர்தாரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆயலம் தற்போது இந்து சமய
அற நிலைய ஆட்சித்துறையின் கட்டுபாட்டில் உள்ளது பக்தர்கள் மற்றும் ஆன்மிக
அன்பர்கள் இணைந்து பக்தர்கள் சங்கம் அமைத்து ஆலயத்தில் மேற்கூறிய விழாக்கள்
தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதற்கும் ஆலயத்தின் வளர்ச்சிக்கும் உதவும்
வகையில் பணி செய்துவருகின்றனர்.
இவ்வளவு
சிறப்பும் பெருமையும் பழமையும் வாய்ந்த இந்த ஆலயம் தமிழ்நாட்டில்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் அமைந்துள்ளது ஆரணி நகருக்கு
சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதி
உள்ளது இரயில் மார்க்கமாக வரவேண்டும் என்றால் காட்பாடி மற்றும் விழப்புரம்
பகுதிகளிலிருந்து வரமுடியும் விரைவில் திருப்பணி துவங்க உள்ள இந்த
ஆலயத்திற்கு நாமும் நேரில் சென்று தரிசித்து திருப்பணியில் பங்கொண்டு சிவ
புண்ணியம் பெறலாமே.
புத்திரபாக்யம் வேண்டுவோர் விரதம் அனுஷ்டிக்கும் முறை:
புத்திரபாக்யம்
வேண்டுவோர்ää தொடர்ந்து 5 திங்கட்கிழமைகளில் வீட்டிலேயே உபவாசம் இருக்க
வேண்டும் அந்த சமயத்தில் முதல் வாரம் 1 குழந்தைக்கும் இரண்டாவது வாரம் 2
குழந்தைகளுக்கு இப்படியே ஐந்தாவது வாரம் 5 குழந்தைகள் வரை அன்னமிடுதல்
வேண்டும் பின்பு 6 வது வாரம் ஸ்ரீபுத்திரகாமேட்டீசுவர் கோவிலுக்கு வந்து
சுவாமிää அம்மனுக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தால்
புத்தரபாக்யம் நிச்சயம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment