Monday, April 18, 2016

"வேதமும் பெண்களும்".


"ஆண்கள் எல்லா அங்கமும் தரை மேல் பட சாஷ்டாங்கமாக விழவேண்டும்.ஆனால் பெண்கள் தாய்மைக்குரிய உறுப்புகள் தரையில் படாத வண்ணம் நமஸ்கரிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது)
[எஸ்.கணேச சர்மா புத்தகத்தில் இருந்து வரகூரான்
நாராயணனால் தட்டச்சு செய்யப்பட்டது]

.
ஒரு முனிவன், "இந்திரனை வெல்லக் கூடிய ஒரு
பிள்ளை தனக்கு வேண்டும்"என்று தவமிருந்தார்.
பிரம்மா எதிரே வந்து, வேண்டியதைக் கேட்கச் சொன்னார்.
இந்திரனை அழிக்கப் பிள்ளை வேண்டும் என்பதற்கு
பதிலாக,'இந்திரன் அழிக்கும் ஒரு பிள்ளை வேண்டும்'
என்று கேட்டுவிட்டார்! விபரீதம் நேர்ந்துவிட்டது.
அதே போல் கும்பகர்ணன் நித்தியத்துவம் என்று கேட்க
விரும்பினாலும் "நித்திரைத்துவம் வேண்டும்" என்று வாய் தவறிவிட்டதும் நமக்குத் தெரிந்த கதைதான்.
எனவே வேதம் ஓதுவதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதனால்தான் இவை எல்லாரிடமும் கொடுக்கப்படாமல் மிகவும் பாதுகாப்புடன் எச்சரிக்கையாகக் கையாளக் கூடிய சில குறிப்பிட்டவர்களிடம் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எல்லோரும் எல்லாவற்றையும் செய்வது சாத்தியமில்லை. ஆகவே,இந்த ஏற்பாட்டில் ஏதோ ஏற்றத்தாழ்வு இருப்பதாக நினைக்கக் கூடாது.
உதாரணமாக பெண்கள் மந்திரங்கள் சொல்ல வேண்டாம்
என்று இருக்கிறது.காரணம்,இந்த மந்திர ஒலிகளை நாபிக் கமலத்திலிருந்து எழுப்பவேண்டியிருக்கிறது.
எனவே,பெண்கள் அதைச் சொல்லும்போது கர்ப்பப்பைக்கு ஏதாவது தாக்கம் வரலாமென்ற அக்கறையால்தான் அதை விலக்கினார்கள்.
உலகில் சிருஷ்டிக்குக் காரணமான,தாய்மைக்கு மூலமான பெண்கள், அதெற்கென்று இருக்கும் உறுப்பைக் காப்பது முக்கியம் இல்லையா?
நமது சாஸ்திரங்கள் அர்த்தம் நிறைந்தவை என்பதில் சந்தேகமில்லை.
நமஸ்காரம் பண்ணுவதில்கூட ஆண்கள் எல்லா அங்கமும் தரை மேல் பட சாஷ்டாங்கமாக விழவேண்டும்.ஆனால் பெண்கள் தாய்மைக்குரிய உறுப்புகள் தரையில் படாத வண்ணம் நமஸ்கரிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment