சிரிக்கும் பழக்கமே மனிதனுக்கு மறந்துவிட்டதோ என்ற சூழலில் வாழ்கிறோம்…
01. அன்றாட வாழ்க்கையில் பல கவிதைக் கணங்கள் உண்டு.. ரசனைக்குரிய
பொழுதுகள் உண்டு.. நகைச்சுவை பொங்கும் தருணங்கள் உண்டு.. இவற்றையெல்லாம்
சரியாக அடையாளம் கண்டு கொள்வதில்தான் புன்னகையின் சாவி இருக்கிறது..
- மகிழ்ச்சியை அடைய முன் அதன் திறவுகோலை கண்டறிக..
- மகிழ்ச்சியை அடைய முன் அதன் திறவுகோலை கண்டறிக..
02. சார்ளி சப்ளினின் படங்கள் ஒரு நூற்றாண்டு கொண்டவை.. ஆனாலும்
இன்றைக்கும் அந்தப் படங்களில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது.. எல்லா வயதினரும்
பார்க்கக்கூடிய நிரந்தரத் தன்மை இருக்கிறது.. காரணம் சிரிப்பு சோகம்
இரண்டும் கலந்தவை அவர் படங்கள்..
- நிஜ வாழ்வை கூர்ந்து அவதானித்து திரைக்கதை ஆக்கினால் வெற்றி…
- நிஜ வாழ்வை கூர்ந்து அவதானித்து திரைக்கதை ஆக்கினால் வெற்றி…
03. வெளிப்பார்வைக்கு ஒருவர் கோமாளியாகத் தெரிகிறார் என்பதால் அவரை
மட்டமாக மதித்துவிடக்கூடாது.. சார்ளி சப்ளினுக்கு பின்னால் ஒரு மகத்தான
சரித்திரமே ஒளிந்திருந்தபடியால்தான் அவர் படங்கள் மகத்தான சரித்திரம்
படைத்தன..
- உருவத்தை வைத்து ஒருவனை எடை போடாதே..
- உருவத்தை வைத்து ஒருவனை எடை போடாதே..
04. கொடிய வறுமையுடன் பிறந்து, பரம ஏழையாக கிட்டத்தட்ட அநாதையாக
வளர்ந்து, தன்னுடைய திறமை, தன்னம்பிக்கை, கடின உழைப்பு ஆகியவற்றை மட்டுமே
முதலீடாக வைத்து வெற்றிபெற்ற சாப்ளினின் வாழ்வில் நமக்கு அறிவதற்கு பல அரிய
செய்திகள் புதைந்து கிடக்கின்றன.
- உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் வறுமைதான்..
- உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் வறுமைதான்..
05. சார்ளி நீ தான் உலகத்திலேயே சிறந்த மேடைக் கலைஞனாக வரப்போகிறாய்,
உன்னைப் பார்க்க ஜனங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு குவியப்
போகிறார்கள்.. இது சாப்ளினுக்கு தாய் சொன்ன உற்சாக வார்த்தை இதை
நம்பித்தான் அவர் உயர்ந்தார்.. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து நடக்க
வேண்டும்.
- நீங்கள் சொல்லும் உற்சாக வார்த்தைகள் உலகிற்கு ஒரு சாதனையாளனை தருகிறது..
- நீங்கள் சொல்லும் உற்சாக வார்த்தைகள் உலகிற்கு ஒரு சாதனையாளனை தருகிறது..
06. இந்த வேலைதான் என்றில்லை எந்த வேலையானாலும் சட்டென்று ஒப்புக்கொண்டு
காரியத்தில் இறங்கிவிடும் தன்மை கொண்டவர் சார்ளி சப்ளின் அவருடைய வாழ்வின்
வெற்றியே அதுதான்.
- தூரத்தில் இருக்கும் பலாக்காய்க்கு ஆசைப்பட்டு கையில் இருக்கும் பலாக்காயை இழந்துவிடாதே…
- தூரத்தில் இருக்கும் பலாக்காய்க்கு ஆசைப்பட்டு கையில் இருக்கும் பலாக்காயை இழந்துவிடாதே…
07. எந்த வேலையாக இருந்தாலும் அதிகம் கேட்கமாட்டார் ஆனால் பேசிய தொகையை
கறாராக கேட்பார் அது அவருடைய பழக்கம், உயர்வுக்கும் அது காரணமானது.
- சம்பளம் கொடுக்கத் தெரியாதோர் அதிகமாக வாழும் உலகிலேயே நாம் வாழ்கிறோம்..
- சம்பளம் கொடுக்கத் தெரியாதோர் அதிகமாக வாழும் உலகிலேயே நாம் வாழ்கிறோம்..
08. சரியான சாப்பாடு இல்லை.. போதுமான துணிமணிகள் இல்லை.. கவுரவமாக
நான்குபேர் நடுவில் சென்றுவர அந்தஸ்த்து இல்லை.. இப்படி பல இல்லைகளை வைத்து
நின்மதி இல்லையென்று மனம் சோர்ந்துவிடாமல் வென்றவர் சார்ளி சப்ளின்.
- இல்லை என்று சோர்ந்துவிடாதே இல்லையின் அடுத்த பக்கம் உண்டு..
- இல்லை என்று சோர்ந்துவிடாதே இல்லையின் அடுத்த பக்கம் உண்டு..
09. பட்டினியால் சார்ளி சப்ளின் சரியான உயரம் பெறவில்லை, உடம்பு, கை,
கால்கள் என்று எவையுமே சரியான விகிதத்தில் இருக்கவில்லை.. இப்படியாக
பிற்காலத்தில் அவருடைய சிலையைச் செய்த சிற்பி கவலையுடன் சொன்னார்.. மாறாக ;
சரியான அளவில் உடல் அளவு பெற்றவர்களை எல்லாம் வென்று வாழ்ந்ததுதான்
அவருடைய தன்னம்பிக்கை என்றார்.
- உடலைவிட அதை இயக்கும் ஆன்மா வலிமை மிக்கது…
- உடலைவிட அதை இயக்கும் ஆன்மா வலிமை மிக்கது…
10. கருணை இல்லங்களில் இருப்பதும் கருணையை எதிர்பார்த்து வாழ்வதும் மிகப்பெரும் கொடுமையாகும் என்கிறார் சார்ளி சப்ளின்.
- தன்னிறைவு பெற்ற சமுதாயத்தில் கொடை வள்ளல் இருக்கமாட்டான்..
11. இன்னொருவரிடம் சென்று உதவிக்காக கையேந்தும் வாழ்க்கை இனி என்றுமே வேண்டாம்.. என்பதே சார்ளி சப்ளின் சிறுவயது இலட்சியமாகும்.
- இன்னொருவர் பாடுபட்டு உழைத்த பணத்தை பாடுபடாமல் பிச்சையாக கேட்பது குற்றம்…

12. முதலில் நம்மை நம்ப வேண்டும், அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் ஜெயிக்க முடியாது என்பது சார்ளி சப்ளின் கொள்கை.
- நம்பிக்கையே வாழ்க்கை..
- நம்பிக்கையே வாழ்க்கை..
13. தனது நிகழ்ச்சிகளை பார்ப்பவர் எதை ரசிக்கிறார்கள், எதை
விரும்பவில்லை என்று அன்றாடம் சிந்திப்பார், அவருடைய படைப்புக்களை
செம்மைப்படுத்த இதுவே காரணம். மக்களுக்கு பிடித்ததை கொடுப்பதில் அவர்
வெற்றி பெற்றார்.
. மக்களை நாடி பிடித்துப் பார்ப்பவனே மக்கள் திலகமாகலாம்..
. மக்களை நாடி பிடித்துப் பார்ப்பவனே மக்கள் திலகமாகலாம்..
14. சோகப்பாத்திரங்களில் நடித்த சார்ளி சப்ளின் நகைச்சுவை
பாத்திரங்களில் நடித்தபோது மக்கள் கைதட்டினார்கள்.. அந்தக் கைதட்டல்களே
அவரை சிரிப்பு நடிகனாக்கியது.. கைதட்டல்கள் சரியான வழிகாட்டிகள்..
. பாராட்டு வெற்றிக்கு படிக்கட்டு போடும்..
. பாராட்டு வெற்றிக்கு படிக்கட்டு போடும்..
15. ஆங்கிலத்தில் ஒரு படத்தைக் கொடுத்தால் ஆங்கிலம் தெரிந்தோருக்கு
மட்டுமே புரியும், உலகத்தில் ஆங்கிலம் தெரியாதவர்களே அதிகம், ஆகவே உலகத்தை
குறிவைத்து மொழியற்ற படங்களை எடுத்ததே அவருடைய பெரு வெற்றியின் இரகசியம்.
- ஒன்றே உலகம் ஒருவனே தேவன்..
- ஒன்றே உலகம் ஒருவனே தேவன்..
16. பூமிப்பந்தை சுற்றி வந்தால் கண்ணில் படக்கூடிய ஒவ்வொரு சந்திலும்
சார்ளி சப்ளின் படத்தை காணலாம்.. இந்த வெற்றி மவுனப்படங்களை
தயாரித்ததால்தான் அவருக்குக் கிட்டியது.
- உயர்ந்த கலைக்கு மொழி இல்லை..
- உயர்ந்த கலைக்கு மொழி இல்லை..
17. மேடை ஏறி நடிப்பது வெறும் விளையாட்டல்ல.. அதிலும் சில ஒழுக்கவிதிகள்
உண்டு, கட்டுப்பாடுகள் உண்டு, கடுமையான பயிற்சிகள் உண்டு, அவற்றை
முறைப்படி பின்பற்றினால் நடிப்பு மெருகேறும் என்பதைக் கண்டு கொண்டார்.
- முயற்சி இல்லாதவன் கலையில் வென்றதில்லை..
- முயற்சி இல்லாதவன் கலையில் வென்றதில்லை..
18. சினிமாவின் ஆனா ஆவன்னா கூட சார்ளி சப்ளினுக்கு தெரியாது ஆனால் மேடை
நாடகத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சி திரைப்படங்களாகத்தான் இருக்கும் என்ற
முடிவுக்கு அவர் வந்தார்.
- இன்று நாம் இருக்கும் நிலை நிரந்தரமல்ல அடுத்த கட்டத்திற்கு தயாராக வேண்டும்..
- இன்று நாம் இருக்கும் நிலை நிரந்தரமல்ல அடுத்த கட்டத்திற்கு தயாராக வேண்டும்..
19. வந்த வாய்ப்பை பாழாக்கிக் கொள்ளக்கூடாது.. அதே சமயம் புது நடிகன்தானே என்பதற்காக அடிமாட்டு சம்பளத்திற்கு உடன்படவும் கூடாது.
- சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கும் தமிழ் ஊடக உலகம் திருந்த வேண்டும்..
- சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கும் தமிழ் ஊடக உலகம் திருந்த வேண்டும்..
20. தினந்தோறும் மற்றவர் வருவதற்கு முன்பதாகவே ஸ்ரூடியோ சென்றுவிடுவார்
சார்ளி சப்ளின் அங்கிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆச்சரியத்தோடு
பார்த்து, ரசித்து கற்றுக்கொண்டார், கேட்டுத் தெரிந்துகொண்டார்.
- தினசரி கற்பவனே வெற்றி பெறுகிறார்..
- தினசரி கற்பவனே வெற்றி பெறுகிறார்..
21. காலையில் முதல் ஆளாக ஸ்ரூடியோ போகும் சார்ளி சப்ளின் மாலையில்
கடைசி ஆளாக வீடு வருவார் அவருடைய ஆர்வத்தையும், அனைத்தையும் அறியும்
ஆற்றலையும் கண்டு மற்றவர்கள் இறுதியில் அசந்து போனார்கள்.
- சிறிய மனிதனும் எறும்புபோல உழைத்தால் ஜாம்பவான்களையும் வெல்லலாம்..
- சிறிய மனிதனும் எறும்புபோல உழைத்தால் ஜாம்பவான்களையும் வெல்லலாம்..
22. வலது கால் சப்பாத்தை இடது காலுக்கும் இடது கால் சப்பாத்தை வலது
காலுக்கும் போட்டார்.. இப்படி மாற்றிப் போட்டே அனைவர் கவனத்தையும்
தொட்டார்.
- புதுமையே வெற்றி பெறும்..
- புதுமையே வெற்றி பெறும்..
23. மற்றவர் இயக்கத்தில் நடித்தால் சுதந்திரம் இல்லை என்பதால் தானே
இயக்க வேண்டும் என்றார்.. வாழ்வா சாவா என்ற முடிவுக்கு வந்தார்.
தன்னம்பிக்கையும் துணிச்சலுமே அவரை வழி நடத்தியது.
- உழைத்திட வேண்டும் கைகளை நம்பி..
- உழைத்திட வேண்டும் கைகளை நம்பி..
24. படப்பிடிப்பு இல்லாத நேரம் கூட சார்ளி சப்ளின் யாருடனும் பேசுவதில்லை தன்பாட்டுக்கு படித்துக் கொண்டே இருப்பார்.
- வீண் பேச்சுக்கள் காலத்தின் விரயம்..
- வீண் பேச்சுக்கள் காலத்தின் விரயம்..
25. பணப்பெட்டிகளை குறி வைத்து படம் எடுத்தால் ஒரு காலமும் காலத்தை வென்ற அமர காவியங்களை படைக்க முடியாது என்றார்..
- காசால் காவியம் படைக்க முடியாது.. காசுதான் படைக்கலாம்..
- காசால் காவியம் படைக்க முடியாது.. காசுதான் படைக்கலாம்..
No comments:
Post a Comment