Wednesday, August 24, 2011

நம்பிக்கை

 நம்பிக்கைதான் வாழ்க்கையின் தும்பிக்கை.  நம்பிக்கைஇருக்கும் வரை ஒருவனுக்கு வாழ்க்கை வாழத் தோணும், நல்லது நடக்கும் என்று நினைத்தே ஒவ்வொரு   நல்ல செயலையும் செய்யத்தோணும். அதனாலேயே மனிதன் கனவுகளை நனவாக்கப் பார்க்கின்றான். ஒட்டகத்திற்கு பாலைவனத்திலும் தண்ணீர் கிடைக்கும் .


  அதுவே ஒரு உந்து சக்தியாக துரத்தி குறி பார்த்து அம்பு எய்த உத்வேகத்தைக் கொடுக்கிறது. பயிற்சி செய்ய செய்ய அதை முழு பரிமாணத்திற்கு கொண்டு வரவும் காரியத்தை கணக் கச்சிதமாக முடிக்கவும் செய்கிறது.விவசாயிக்கு  மழை மேகம்  போலே சாதாரண மனிதனுக்கு நம்பிக்கை . 

தாய் குரங்கு தன குட்டியை எப்படி முதுகில் கீழே விழாமல் சுமக்கும் என்று குட்டிக்கு நம்பிக்கையோ அப்படியே மனிதனுக்கும் .நம்பிக்கை  ஒரு மாற்றத்தையும் ஒரு திருப்பு முனையும் கொண்டு வரும் என்ற எதிர்ப்பார்ப்பே எப்பேர்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அணையா தீபமாக 
ஒருசுடராககொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் !

1 comment:

  1. Sriniketan's Avatar
    Sriniketan


    Naalai enbadhe nambikkai tharum sollaayitre. Nambikkai dhaan vaazhkkai...seria sonéega..


    Don't forget to visit at your leisure and enjoy http://www.indusladies.com/forums/bl...n/index39.html

    ReplyDelete