பூ மலர்ந்து கெட்டது , வாய் விரிந்து கெட்டது ., சீதை சிரிச்சு கெட்டாள்.
எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்.
கட்டுப்போனைக்கு சிவராத்ரி விரதமா ?
உழக்கு மிளகு கொடுப்பானேன் ,ஒளிந்திருந்து மிளகு சாறு குடிப்பானேன்?
சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் தின்கிரதாம் .
வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல.
பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும் , இலை பொத்தல் இலை என்கிறான்.
உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.
கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .வயிறே வைகுண்டம் .
கொடுக்கிறது கோத்திரத்தில் கிடையாது, வாங்குறது வம்சத்தில் உண்டு.
சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .
குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .
வீட்டுக்கு செல்வம் மாடு , தோட்டச் செல்வம் முருங்கை.
பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்.
தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்.
உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல .
அடிங்கரதுக்கு பொண்டாட்டிய க் காணோம் ,ஆறாவது குழந்தைக்கு என்ன பேரு வைக்கலாமாம்.
கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?
ஆம்புடையான் செத்து அவதி படும் போது, அண்டை வீட்டுக்காரன் அக்குளிலே பாய்ச்சுகிறான் !
சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் இச்சம் பாயைகட்டிகொண்டு எதிரே வந்தாளாம் .
பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !
ஊரார் வீட்டு நெய்யே , என் பொண்சாதி கையே.
செல்லம் செரூக்குகிறதா ? வாசல் படி வழுக்கிறதா ?
கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?
திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .
பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை.
குறையச் சொல்லி , நிறைய அள.
அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்.
அறைக்காசை ஆயிரம் பொன்னாக்கிரவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி.
ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு
நாளாச்சுது .
ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேறு
நாளாச்சுது.
Too good mathangi.
ReplyDelete