Saturday, December 13, 2014

கிராமத்து திண்ணை வீடு



கிராமத்து நாட்கள் .................

கிராமத்து திண்ணை வீடு ....................

திண்ணை இல்லா கிராமத்து வீட்டை பார்க்கமுடியாது முன்னொரு காலத்தில் அந்த அளவிற்கு மக்களோடு ஒன்றி இருந்தது திண்ணை. வீடு கட்டினால் நிச்சயம் பெரிய திண்ணை சின்ன திண்ணை என்று நிச்சயம் வீட்டின் முன் கட்டி இருப்பர்.

திண்ணை என்பது ஒரு திண்டு போல இருக்கும். இது வீட்டின் முன் பகுதியில் அல்லது தலைவாசல் பகுதியில் திறந்த வெளியில் அமைந்திருக்கும். சுவற்றில் சாய்ந்தும், காலைத் தொங்கவிடுவதற்கும் வசதியான அமைப்பாக அமைத்திருப்பர். இதில் இருக்கும் தூண்கள் வீட்டைத்தாங்கிக்கொண்டு இருக்கும்.

திண்ணையில் உட்கார்ந்து ஊர் கதை பேசுவதும் வீட்டுக்கு வரும் உறவினர்கள் அங்கு உட்கார்ந்து ஊர்க்காரர்களோடு அளவாடுவதும், பள்ளிப்பாடங்களை சிறுவர்கள் அங்கு உட்கார்ந்து படிப்பதற்கும், வீட்டு பஞ்சாயத்து, ஊர் பஞ்சயாத்து என ஒவ்வொரு திண்ணைகளும் அந்த கால கதையை சொல்லும்..

தங்களது அனுபவங்களை பகிரும் இடமாக இருந்த திண்ணை இன்று இல்லாமலே போய் விட்டது.. திண்ணை கட்டும் இடத்தில் ஒரு 4 க்கு 4 அறை கட்டி வாடகைக்கு விடும் காலம் இந்த காலம்...

கிராமத்துத் திண்ணை நினைவுகளில்
அலைபாயும் நெஞ்சில் ஏக்கம்வடியுது;
இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?

                                                            -    SATHISH SANGKAVI   .


அந்தக் காலத்தில
கிராமத்து நாட்கள் .................
 ....................
திண்ணை இல்லா கிராமத்து வீட்டை பார்க்கமுடியாது முன்னொரு 

காலத்தில் அந்த அளவிற்கு மக்களோடு ஒன்றி இருந்தது திண்ணை. வீடு 

கட்டினால் நிச்சயம் பெரிய திண்ணை சின்ன திண்ணை என்று நிச்சயம் 

வீட்டின் முன் கட்டி இருப்பர்.
திண்ணை என்பது ஒரு திண்டு போல இருக்கும். இது வீட்டின் முன் பகுதியில் 


அல்லது தலைவாசல் பகுதியில் திறந்த வெளியில் அமைந்திருக்கும். 

சுவற்றில் சாய்ந்தும், காலைத் தொங்கவிடுவதற்கும் வசதியான அமைப்பாக 

அமைத்திருப்பர். இதில் இருக்கும் தூண்கள் வீட்டைத்தாங்கிக்கொண்டு 

இருக்கும்.

திண்ணையில் உட்கார்ந்து ஊர் கதை பேசுவதும் வீட்டுக்கு வரும் 

உறவினர்கள் அங்கு உட்கார்ந்து ஊர்க்காரர்களோடு அளவாடுவதும், 

பள்ளிப்பாடங்களை சிறுவர்கள் அங்கு உட்கார்ந்து படிப்பதற்கும், வீட்டு 

பஞ்சாயத்து, ஊர் பஞ்சயாத்து என ஒவ்வொரு திண்ணைகளும் அந்த கால 

கதையை சொல்லும்..

தங்களது அனுபவங்களை பகிரும் இடமாக இருந்த திண்ணை இன்று 

இல்லாமலே போய் விட்டது.. திண்ணை கட்டும் இடத்தில் ஒரு 4 க்கு 4 அறை 

கட்டி வாடகைக்கு விடும் காலம் இந்த காலம்...

கிராமத்துத் திண்ணை நினைவுகளில்அலைபாயும் நெஞ்சில் ஏக்கம்வடியுது;

இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?

No comments:

Post a Comment