Sunday, December 14, 2014

குற்றமுள்ள நெஞ்சம்


அந்த கால் டாக்ஸி மெட்ரோ ரயில் இடர்பாடுகளை கஷ்டப்பட்டு தாண்டி சென்னை சென்டரல் ரயில் நிலயத்தை வந்தடைந்தது.
கீதாவும் சேகரும் டாக்ஸியிலிருந்து இறங்கினார்கள். கூடவே இரண்டு பெட்டிகள் இழுத்து செல்லும் வசதியுடன், சேகர் முதுகில் ஒரு பை, கீதாவின் தோளில் ஹேன்ட் பேக், கையில் செல்போன்.
கீதா தேவைக்கு அதிகமாக சேகருடன் ஒட்டிக் கொண்டு நடந்தாள். முகத்தில் புதிய கல்யாணத்தின் பூரிப்பு தெரிந்தது.
ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்து ஒன்றாம் பிளாட்பாரத்திற்கு சென்றார்கள்.
அங்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பல மொழி பேசுபவர்களுடன் நின்றுக் கொண்டிருந்தது.
ஏசி ஸெகன்ட் ஸ்லீப்பர் பெட்டியில் ஏறி தங்கள் இடத்திற்கு சென்றார்கள். பெட்டிகளை சீட்டின் கீழே வைத்து உட்கார எதிரே அமர்ந்துக் கொண்டிருந்த அந்த அறிமுகமில்லாத நபர் சேகரைப் பார்த்து "வெல்கம்" என்று கை குலுக்கி கீதாவைப் பார்த்து புன்னகைப் புரிந்தார்.
கீதா அவரை உற்று பார்த்தாள். முகம் வயது அறுபதை தொட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டியது. ஆனால் செயற்கை சாதனங்களால் வயதை குறைக்க போராடிக் கொள்வது அப்பட்டமாகத் தெரிந்தது. அவர் பக்கத்தில் முகப்பு அட்டையில் குறைந்த துணியுடன் பெண்கள் போட்டா இருக்கும் இரண்டு புத்தகங்கள், கீதாவிற்கு முதல் பார்வையிலேயே அவரை பிடிக்காமல் போனது.
அவர் "ஐயம் கோபிநாத்" என்று சேகருடன் தன்னை அறிமுகம் செய்துக் கொள்ள சேகர் தன் பெயரைக் கூறினான். பத்து மணிக்கு வண்டியை எடுக்க அனைவரும் உறங்க தயாராடினார்கள். அன்றிரவு இரண்டு முறை உறக்கத்தலிருந்து விழித்தப்போது அவர் தன்னை பார்த்துக் கொண்டிருந்தை உணர்ந்த கீதாவிற்கு அவர் மேல் வெறுப்பு அதிகமாகியது.
இரண்டாம் நாள் பயணம், கோபிநாத் வலுக்கட்டாயமாக இவர்களுடன், அதுவும் கீதாவிடம் பேசினார், அவள் அலட்சியப்படுத்தினாலும் கவலைப்படவில்லை. ஒருசமயம் அவர் இல்லாதப் போது சேகரிடம் " அந்த கிழவன் பார்வையே சரியில்லை, அவனைப் பார்த்தா பத்தின்டு வருது" என சேகர் " ஒருநாள்ல மனுஷங்கள இப்படியெல்லாம் எடைப் போடக்கூடாது, எனிவே இன்னிக்கு நைட்தான், பேர் இட்" என்றான்.
இரவு உணவை முடித்து சிறிது நேரம் பேசியப்பின் உறங்கச் சென்றார்கள். காலை வண்டி டில்லியை நெருங்கி கொண்டிருந்தது. ஏதோ பேச்சு குரல் கேட்க கீதா கண் விழித்து பார்த்தாள். கோபிநாத் போனில் பேசிக் கொண்டிருந்தார். கண் மூடிக் கிடந்து அவர் பேசுவதைக் கேட்டாள்.
" அப்படியே அச்சு நம்ப பொண்ணு ரஞ்சினி மாதிரியே இருக்கா கமலா"
மறுமுனையில் ஏதோக் கேட்க " ஆமாம், கல்யாணம் ஆயிடுத்து, புருஷனோட வந்திருக்கா" என்றார்.
தன்னைப் பற்றி போனில் பேசும் அவர் மீது எரிச்சல் கொண்டு எழுந்த அவள் அவர் கூறியதை கேட்டாள்
" நம்ம பொண்ணு மாதிரி கோபம் அதிகம்,ஹூம் நம்ப பொண்ணு உசுரோட இருந்திருந்தா ஜம்முன்னு கல்யாணம் ஆகி மாப்பிளையோட இருப்பா, இன்னும் கொஞ்ச நேரம் வரைதான் இந்த பொண்ணு ரூபத்துல நம்ப குழந்தைபு பார்க்க முடியும்" என்றார் உடைந்த குரலில்.
இதைக் கேட்டு அதிர்ச்சயடைந்த கீதா எழுந்து அவரைகு கட்டிக் கொண்டு "என்னை மன்னிசுடுங்கப்பா, என்னை மன்னிசுடுங்க" என்று கதற கோபிநாத்தும், மனைவிக் குரல் கேட்டு எழுந்த சேகரும் திகைத்தனர்.

No comments:

Post a Comment