Friday, December 12, 2014

கடி ஜோக்ஸ் 122


மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே  

சமைக்கிறேன்..எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்.. நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் 

இன்ஷுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..!

............................................
மாப்பிள்ளைக்கு கவர்மென்ட் வேலை கிடையாதா?
போலீஸ், கோர்ட்னு கவர்ன்மென்டுக்கே வேலை கொடுக்கிறாரே…!
.............................................................
வேட்டைக்காரர்: ஸ்காட்லாந்தில் இருந்த போது நான் நிறைய சிங்கங்களை

சுட்டுத் தள்ளியிருக்கிறேன்.
நண்பர்: ஸ்காட்லாந்தில் சிங்கமே கிடையாது என்று புத்தகத்தில்

படித்திருக்கிறேனே?
வேட்டைக்காரர்: எப்படி இருக்கும்? எல்லாத்தையும் தான் நான் சுட்டுத்

தள்ளிட்டேனே!
......................................................
மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்ஒருவனைக் 

கொன்றுவிட்டது.அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த எலி கேட்டது.
எதுக்கு அவனைக் கொன்னேனு…புலி : அந்தப் பரதேசி மூணு மணி நேரமா 

என்னைப்பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு.
.......................................................
“எங்க அப்பாவுக்கு நான் கதவு மாதிரி…”
“எப்படி…?”
“அதான் அடிக்கடி சாத்து சாத்துன்னு சாத்தறாரே!”
...........................................
“எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வருது சார் …”
“எப்படி..?”
“நான் “சுடு தண்ணி”ன்னு சொல்றேன்; அவ அதை “காபி”ன்னு சொல்றா..!”
............................................................
நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
யாரோ இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன்

அடியேன்னு சொல்லியிருக்காரு.
..........................................................
நர்ஸோட இதயத்தைத் திருடலாம்னு நினைச்சு அந்த ஆஸ்பத்திரியில

பேஷண்ட் மாதிரி அட்மிட் ஆனது தப்பாப் போச்சு..!
ஏன் என்ன ஆச்சு?
டாக்டர் என் கிட்னியைத் திருடிட்டடார்..!
..............................................................................
எதுக்குங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முந்தியே வரதட்சணைப் பணத்தை

கேட்குறீங்க?
அப்பதானே மாப்பிள்ளையை ஜாமீன்ல எடுக்க முடியும்…!
.........................................................
தலைவரே தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப்

போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ?
ஏன் இப்ப என்னாச்சு ?
கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து 

வாங்கிட்டான்.
.........................................................................
.
தண்ணீர் மேல படகு போனா உல்லாசம்.ஆனா,படகு மேல தண்ணீர் போனா 

கைலாசம்.

......................................................................
Back வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும், Front வீல ஓவர்டேக் பண்ண 

முடியாது.
..................................................................................

 டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் வரும்.10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,தூக்க ஆள் 

வரும்.
..........................
பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன் ஆயிடும் ஆனா,பாய்சன் 10 நாள் கழிச்சி 

பாயாசம் ஆகுமா?
.......................................................

என்னதான் MBBS படிச்சி டாக்டர் ஆனாலும் கம்ப்யுட்டர்ல இருக்கற

வைரசுக்கு மாத்திரை குடுக்க முடயுமா? ,,, யோசிப்பா, யோசி,
last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.
...................................................................
பரிட்சைல பெயில் ஆனா திரும்ப படிச்சி பாஸ் பண்ணலாம்.ஆனா,

பாஸ் ஆயிட்டா. திரும்ப படிச்சி பெயில் ஆக முடியாது. ‘

நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா.
...................................................................................................
ரசத்துல நான் புளியே போட மறந்துட்டேன்... எப்படி அப்படியே சாப்பிடறீங்க ?
நீ சமையல் பண்ண ஆரம்பிச்சபோதே எனக்கு வயித்துல புளியைக் கரைக்க 

ஆரம்பிச்சிடிச்சு.
.................................................................................
கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு 

ஆபீசுக்கே வந்திருக்கிறே?

மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. 

நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்.
..........................................................................


 மாணவன்: "சார்! இன்னும் ஒரு மாதத்துக்கு எனக்கு பரிட்சை பேப்பர்ல முட்டை போடாதீங்க"! ...
ஆசிரியர்: "ஏண்டா"?.!!..

"எங்க அப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருக்கார்"!!!.

No comments:

Post a Comment