நல்ல ஆன்ம உடல் பயிற்ச்சிக்காக கோயில்களுக்கு செல்வது செல்வது வழக்கம். பொதுவாகவே கோயில்கள் மூன்று அல்லது ஐந்து பிரகாரங்கள் கொண்டதாக இருக்கும்..
அப்படி எல்லா பிரகரங்களையும், இறைவை த்யானித்து நிதானமாக நடந்து வரும்போது உடலுக்கும் பலம், மனதிற்கும் பலம். மனம் சோர்வடயாவிட்டாலும் சில சமயம் உடல் சற்றே சோர்வடையும்.
அப்படிப்பட்ட உடலுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்கும் வகையில் கோயிலுக்குள்ளே சிறிது நேரம் அமர்வது, பல்லாண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டுவரும் வழக்கம்.
இது வெறும் உடல் ஓய்வுக்கான நடைமுறை மட்டுமல்ல, மன அமைதிக்கான பயிற்சி என்றும் சொல்லலாம்.
கோயிலில் வலம் வந்தபிறகு அமர்வது என்பது வெறுமே ஓய்வெடுப்பதற்காக அல்ல.
தாம் சுற்றி வந்த இறைவனை நினைத்து, கண்மூடி தியானத்தில் ஆழ்வதற்காகவும்தான்.
அதுவும் பிற யாருக்கும் எந்த அசௌகரியமும் தராதபடி தனித்து அவ்வாறு ஆழ்வதுதான் சிறப்பு.
No comments:
Post a Comment