மஹா பெரியவா -------அவதார புருஷனின் அற்புத லீலைகள்
1960 அல்லது 1962 ல் நடந்த சம்பவம்
1960 அல்லது 1962 ல் நடந்த சம்பவம்
அப்போது திருப்பதியில் லக்ஷ்மி நாராயணன் என்ற தமிழர் மஹா பெரியவாளின் பரம பக்தர் கலக்டராக இருந்தார் .திருப்பதியில் 3 வருடமாக மழை இல்லாததால் பஞ்சம் தலை விரித்தாடியது .மக்கள் கூட்டம் கூட்டமாக ஊரை காலி செய்து கொண்டிருந்தார்கள்.
பரப்பிரம்மம் திருப்பதியில் முகாம் ---பரமனின் பரமபத விளையாட்டு ஆரம்பமானது
கலக்டெர் லக்மி நாராயண் பெரியவாளை சந்தித்தார்
""என்னடா திருப்பதியே வெறிச்சோடி இருக்கே ""
ஆமாம் சுவாமி மூணு வருஷமா சுத்தமா மழை இல்ல, விவசாயமும் இல்ல ,அரிசி பஞ்சம் வந்துடுத்து, எல்லாரும் கூட்டமா ஊரையே காலி பண்ணிண்டு வேற ஊருக்கு போயிண்டு இருக்கா பஞ்சம் பிழைக்க , அரசாங்கத்துக்கும் என்ன பண்றதுன்னு புரியல , நீங்கதான் தயவு பண்ணனும் , மழை பெய்யணும் .
அவதாரம் வந்த நோக்கமே அதுதானே!!! , ஆபத் பாந்தவன் அமைதியா எல்லாவற்றையும் கேட்டது .
ஓரமாக ஒரு வெட்ட வெளியில் வஜ்ராசனமிட்டு அமர்ந்தது
நான்கு திசையெங்கும் கைகளால் தொடர்
மந்திர வீச்சு மந்திர வீச்சு மந்திர வீச்சு !!!!!!
தொடர்ந்து மூன்று மணிநேரம் மந்திர ஜபம்
அலுவல் காரணமாக கலக்டர் லக்ஷ்மி கீழ் திருப்பதி வந்து கொண்டிருந்தார் அவர் கீழ் திருப்பதியை அடைவதற்குள் , வருண பக்வான் மஹா பெரியவாளின்
மந்திர ஜெபத்தால் -----------
மகத்தான மழை , தொடர்ந்து பேய் மழை கொட்டி தீர்த்தது
இந்து பத்திரிக்கை இதை பற்றி 1989 அல்லது 90 ல் ஒரு கவர் ஸ்டோரி போட்டார்கள் .தேடி பிடித்து படியுங்கள் .
மஹா பெரியவாளை பெற்றெடுத்த மஹா லக்ஷ்மிக்கு நமஸ்காரம் என்ன தவம் செய்தோம் என்ன தவம் செய்தோம்
எந்தரோ மகானு பாவுலு அந்தரீக்கி வந்தனமுலு
மஹா பெரியவா சரணம்
No comments:
Post a Comment