Saturday, November 8, 2014

போற வழிக்கி புண்ணியம் கோயில் இல்ல --அன்னதானம்

மஹா பெரியவா சரணம் ---
சமீப காலமாக நமது கல்யாண விசேஷங்கள் ரொம்ப டாம்பீகமாக நடப்பது எல்லோருக்கும் தெரியும் ,,"" என் கல்யாணத்துக்கு வந்துட்டு எல்லாரும் மூக்குல விரல வைக்கணும் அந்த மாதிரி பண்றேன் பாரு """ என்று சவால்கள் வேறு

அந்த காலங்களில் ஜானவாசம் என்றால் சாப்பாடு ,போளி இல்லாமல் இல்லை , பாரம்பரிய உணவு வகைகள் நாக்கில் ஜலம் ஊரும்
.
சமீபத்தில் ஒரு கல்யாண வரவேற்பு ----நாளை கல்யாணம் ,இன்று மாலை வரவேற்பு ( யார் கண்டு பிடிச்சது?? , திடிர்னு அந்த மாப்பிள்ளைக்கு ஏதாவது ஆயிடுத்துன்ன ??)

வரவேற்ப்பு தடபுடல் -மிக்கி மௌஸ், ஜண்டை, சினிமா பாட்டு, கர்நாட சங்கீதம் ,நாதஸ்வரம், இள வட்டங்கள் டான்ஸ் ( டாஸ்மாக் உபயம் )
ஆனால் எதையும் ஒழுங்கா கேக்க முடியல --ஆர்கெஸ்ட்ரா சத்தம் தாங்க முடியல , ( சத்தம் போட்டதுக்கு 50000/- )

சாப்பாடு இன்னும் பயங்கரம் ----- ஆறு வகையான கறி, 3 வகை கூட்டு , பூரி , நான் , சப்பாத்தி , வெஜ் புலாவ் , 3 வகையான நார்த் இந்தியன் சைடிஷ் , பிசி பேளா பாத், ரசம் , மோர் ,தயிர் , ஐஸ் கிரீம் , 2 ஸ்வீட், ப்ரூட் சாலட், பான் , இன்னும் நிறைய நிறைய , ஆனால் விஷயம் இதுவல்ல..

நா எப்போதும் போல ரசம் & மோர் சத்தம் சாப்பிட்டு விட்டு ஒரு ரவுண்டு சுத்தி பாத்தேன் . வயறு எரிகிறது , சாப்பிட்ட பல பேர் , எல்லாவற்றையும் தட்டில் வாங்கினார்களே தவிர -----70% அத்தனையும் குப்பை தொட்டியில்
தாய்மார்களே , தந்தைமார்களே , நீங்க இத பாக்க மாட்டீங்களா????????
எவ்ளவோ அனாதை இல்லங்கள் , முதியோர் இல்லங்கள் , கண் பார்வை அற்றோர் இல்லங்கள் -------அங்க போய் ஒரு வேளை சாப்பாடு போட்டா புண்ணியமா போகும்

தயவு செய்து இந்த ஆடம்பரம் பண்ணி நீங்க உழைச்ச காச வேஸ்ட் பண்ணாதீங்க .

போற வழிக்கி புண்ணியம் கோயில் இல்ல --அன்னதானம்
மஹா பெரியவா சரணம்

No comments:

Post a Comment