Wednesday, November 5, 2014

தாத்தாவும் பேரனும்

       

''ஏன்  தாத்தா  எல்லோருமே   மஹா பெரியவா  என்று  எழுதறா,  பேசறா, 

படிக்கிறா,  அவரைப் பார்த்தா   ரொம்ப  சாதாரணமாக தானே  இருக்கிறார் . 

 நான்  பார்த்ததில்லை,  படத்திலே  தான்  அவரைப் பார்த்திருக்கேன், 

 காஞ்சிபுரம்  கூட்டிண்டு போனபோது  ஒரு  கண்ணாடிக்குள்ளே   நிஜமாவே 

 அவர்  உட்கார்ந்திருந்தது  மாதிரி  இருந்ததே அவர்  தானே மஹா பெரியவா 

''ஆமாம்  கோபு,  அவர்  மகா பெரியவா தான்.  ஈடு இணை இல்லை  

அவருக்கு. மஹா  பெரியவா பற்றி பேசாதவர்கள்,  சொல்லாதவர்கள், 

 நினைக்காதவர்கள், புகழாதவர்கள்,  கிடையாது. 

ஏன்  அப்படி  ஒரு  விசேஷம் 

அவரிடம்.    ஒரு வார்த்தையில்  சொல்லுவதாக  இருந்தால்  அவர்  ஒரு  

நடமாடும்  கடவுளாக இருந்தார். இவ்வளவு  சாதரணமாக,  எளிமையாக,  

அமைதியாக,  பார்த்தாலே  ஒரு  சிறந்த  பக்தி  வரும்படி தோன்றிய மகான்  

உலகிலேயே இல்லை.  எத்தனையோ  உன்னத   புருஷர்கள் இருந்தார்கள், 

இருக்கிறார்கள்,  தாம்  ஒரு மத தலைவர், மடாதிபதி, உலகமெல்லாம்  

புகழும், பேரும்  பெற்றவர், என்கிற  படாடோபம்  கடுகளவும்இல்லாது,  

ஏழையிலும்  ஏழையாக,மாட்டுத்தொழுவத்தில்,  கிணற்றடியில், 

கட்டாந்தரையில்  இருந்த  ஒரு  மகான்  எங்காவது உண்டா? .

 பணத்தை  தொடாத  ஒரு தெய்வ புருஷர்  உண்டா?  பார்த்திருக்கிறோமா, 

இனிபார்ப்போமா?    இல்லை இல்லை  என்று  அழுத்தமாக 

 யோசிக்காமலேயே  சொல்ல முடிகிறதல்லவா?.  அது  தான்  மஹா 

 பெரியவா.   சாஸ்திரம், சங்கீதம்,  உளவியல், பல  மொழி,  எல்லாமே  

அறிந்த சகல  கலா வல்லுநர்,  சரித்திர  ஆராய்ச்சியாளர், விஞ்ஞானம் 

மெய்ஞானம்  இரண்டுமே  அறிந்த  மகான்   ஒருவர் உண்டென்றால் அது 

மஹா பெரியவா.  அப்படியில்லை  என்றால்  மஹா  பெரியவா என்ற  

பெயர்  பெறமுடியுமா?. 
'
'பெரிய  விஷயம்  பத்தி  எல்லாம்  ரொம்ப சிம்பிளா சொல்வாராம், 

 சிரிச்சுண்டே எல்லார் கிட்டயும்  கூட   தமாஷா   பேசுவாராமே. அப்படியா 

 தாத்தா? 

''நீ  சொன்னது ரொம்ப  ரைட்டு.   ஒரு  தடவை  என்ன  நடந்தது  என்று 

 சொல்றேன்  கேள்: 

எங்கோ  வெளியே  ஒரு  இடத்தில்  முகாம்.

அன்று  மஹா  பெரியவா  மௌனம்  இல்லை. என்னவோ  கொஞ்சம் 

 உற்சாகமாகவே  இருந்தார். இரவு  நேரம்  நெருங்க  கொசுக்கள் 

கூட்டமாக படைஎடுத்து வந்தன.   அருகில்  இருந்தோரிடம்  ஏதோ சந்தேக 

 நிவர்த்தி பண்ணிக்கொண்டிருந்தவர் அவர்களைநோக்கிமகா விஷ்ணுவும்

 கொசுவும் ண்ணு தான் என்று உங்களில் யாருக்காவது 

தெரியுமோ?  என்றார் பெரியவா.

என்ன  பதில் சொல்வது  என்று  அவர்கள்  விழிக்க, ஒரு மோகனச்சிரிப்புடன், 

''விஷ்ணுவின் கையில் சக்கரம்சுற்றிக்கொண்டிருக்கு,கொசுவும்சக்கரமாய்

சுற்றிக்கொண்டுதான் இருக்குகெட்டவர்கள்விஷ்ணுவைப் பார்க்கமுடியாமல்

 ஒதுங்கிக் கொள்வார்கள்.கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்கமுடியாமல்

 ஒதுங்கி விடுவார்கள்ச்ருதியிடம் விளையாடுபவர் விஷ்ணு[ச்ருதி=வேதம்]

ச்ருதி முனையில் ஙொய்என்று கத்திக்கொண்டு விளையாடும் கொசு

[ச்ருதி=காது]!"

இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம்மடத்தோடுஅவர்கள் இருந்த முகாமி

ல்கொசுத்தொல்லை தாங்க முடியாது.

"
அனந்தசயனம் பண்ணும் பெருமாள்தான்கொசுன்னு
நினைச்சுண்டேன்னா

பகவத்ஸ்மரணையோடு தூங்கலாம்!"என்று எல்லோரையும்  கொசுக்கடிக்கு 

 தயார் செய்து சமாதானம் செய்வாராம்.இப்படி எந்தக் கஷ்டத்தையும் நகைச்சு

வைததும்ப சரி செய்து விடும் சாதுர்யம்  சமயத்திற்கேற்ப   நகைச்சுவை

பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.ஒரு  சமயம்  ஒரு  முகாமில் 

 
நீண்டஉபன்யாசம் நடந்து கொண்டிருந்தது.பெரியவாளும் வீற்றிருந்து 

கேட்டுக்கொண்டிருந்தா. உபன்யாசகருக்கு  உற்சாகம்.  பெரியவாளே 

 தன்னுடைய  பிரசங்கத்தை  அனுபவிச்சு  கேட்கிறாளே  என்று.  . 

ஒரு வழியாகஉபன்யாசம் முடிந்தது.  பிரசங்கி  பெரியவாளை நமஸ்காரம் 

பண்ணி  ஆசிர்வாதம்  பெற  அருகில்  வந்தார். 

உடனே பெரியவா "சாக்கு கிடைச்சுதுன்னுநன்னா ரொம்ப நேரம் சொன்னயா?"

நாம்  ஏதோ  தப்பு  பண்ணிட்டோமோ  என்று  பிரசங்கி  கொஞ்சம்  தயங்கினார்.  
என்ன  பதில் சொல்வது?  

அவரது நிலையை  புரிந்துகொண்டு  பெரியவாளே,   

 "நீ ஒக்காந்துண்டிருந்ததுஒரு சாக்குமேலே... அந்த சாக்கைச்சொன்னேன்!" 

என்று தமாஷ்பண்ணினாராம்

 அந்த  பிரசங்க  மேடையில்  ஜமக்காளம்  இல்லை,  கோணி சாக்கை   

மடித்துப்போட்டு  கித்தான் விரித்து  தான்  பிரசங்கி  உட்கார்ந்திருந்ததை 

 கவனித்து  பெரியவாள்  சொன்ன  சமயோசித    சிலேடை   இது.

எனக்கு  மஹா பெரியவா  பத்தி  இன்னும்  நிறைய  சொல்லு வந்து 

கேக்கறேன்  என்று  சொல்லிவிட்டு கோபு  ஓடி விட்டான். 

No comments:

Post a Comment