Wednesday, November 5, 2014

கடி ஜோக்ஸ் 115

'என்னங்க ,குக்கரைப் பார்க்கும் போதெல்லாம் என் ஞாபகம் வருதா ,ஏன் ?''
''அதுவும் வெயிட்டை தூக்க முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே 'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே !'

..............................................
அமெரிக்காவுலேர்ந்து ஒருத்தன் நம்மூரு சாமியாரைப் பார்க்க வந்தானாம். பல சிஷ்ய கோடிங்க கூட பந்தாவா இருந்த சாமியாரை படாதபாடு பட்டு வி.ஐ.பி டிக்கெட் வாங்கி பார்த்தானாம்.

"மகனே உனக்கு என்ன வேண்டும்?"ன்னு கேட்டாராம் சாமியார்.

"சாமி! நான் நினச்சது பலிக்க எனக்கு ஏதாவது ஒரு மந்திரம் சொல்லித்தாங்க"ன்னு கேட்டான் அமெரிக்கன்.

அவனை பக்கத்துல கூப்ட்டு உட்காரவச்சு காதுல ஒரு மந்திரத்தை உபதேசிச்சு, "மகனே.. அனுதினமும் இதை ஸ்ரத்தையாக உச்சாடனம் செய்து வா. ஆனால் யார் கேட்டாலும் என்ன மந்திரம் என்று மட்டும் சொல்லாதே! வெகு விரைவில் நல்ல பலன் உண்டாகும்"ன்னு ஆசீர்வாதம் பண்ணி ஊருக்கு அனுப்பினாராம்.

இந்தியாவுலேர்ந்து ஊருக்கு வந்த புருஷன் எப்பப்பார்த்தாலும் எதையோ முணுமுணுத்துக்கிட்டே இருக்கறத பார்த்து அவன் பொண்டாட்டி "என்னய்யா.. எதையோ முனுமுனுத்துகிட்டே இருக்கியே... என்னா" ன்னு அமட்டலா கேட்டாளாம்.

"உஹும்... சாமி சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.."ன்னானாம். பொண்டாட்டி சரி கழுத நாளைக்கு சொல்லட்டும்ன்னு ஃப்ரீயா விட்டுட்டாளாம். மறுநாளும் இந்த அமெரிக்கன் நடு கூடத்துல சோஃபால உட்கார்ந்துகிட்டு ஓயாம முனுமுனுத்துகிட்டே இருந்தானாம். இதைப் பார்த்த அவன் பொண்டாட்டி ஏகத்துக்கும் டென்ஷனாயிட்டாளாம். 

முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்க "யோவ்! முச்சூடும் எதையோ முனவுறியே மரியாதையா அது என்னன்னு சொல்லப்போறியா இல்லையா?"ன்னு மிரட்டினாளாம். இவன் வாயே தொறக்காம தலையை மட்டும் மாட்டேன் மாட்டேன்னு ஆட்டி ஆட்டி காமிச்சுகிட்டே அவள்ட்டேர்ந்து பிச்சுகிட்டு வெளியே ஓடினானாம்.

ஒரு மணிநேரம் கழிச்சு திரும்ப வந்தானாம். டேபிள் மேல "நான் இனிமே உன்கூட வாழமாட்டேன்"ன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு அவன் பொண்டாட்டி ஓடிப்போய்ட்டாளாம்.

அவனுக்கு ஒரே ஆச்சர்யம். என்னன்னா கேக்குறீங்க? வேறென்ன.. மந்திரம் பலிச்சுடுச்சேன்னுதான்

........................................................................................

பேச்சுலர் இருந்து குடும்பஸ்தன் ஆகிறவங்க கேட்டுக்கோங்கோ...!!

1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள்.

2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும்.

3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள்.

4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும்.

5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது.

6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள்.

7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள்.

8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும்.

9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும். இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள்.

10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச் சொன்னால் இங்கு யாரும் நம்பப்போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும்.

.............................................................................

என்னடி உன் புருஷன் நடு சாமத்துல குழந்தைய கொஞ்சிக்கிட்டு இருந்தாரு?

அதுவா… குழந்தைய இல்லடி.. என்னதான் கொஞ்சிக்கிட்டு இருந்தாரு!


அதுக்கு சமையல் ரூம்தான் கிடைத்ததா?


என்னது? சமையல் ரூமா? அங்க வேலைக்காரிதானே தூங்கிட்டு இருந்தா?!?…



'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கணவன்: உங்க அப்பா போல் இந்த உலகத்தில் ஒரு முட்டாள் இல்லை.

மனைவி: இது இப்பத்தான் உங்களுக்கு தெரியுமா? எனக்கு பத்து வருசம் முன்னாடியே தெரியும்.


கணவன்: எப்படி?



மனைவி: உங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வாச்சுருக்காரே… இது ஒண்ணு போதாதா?
.................................................

No comments:

Post a Comment