Monday, October 13, 2014

பக்தி ஆலயங்களின் தூய்மை

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

பேட்டைக்குப் பேட்டைகாலனிக்குக் காலனி புதுக் கோயில்கள் கட்டுகிறார்கள்எங்கே பார்த்தாலும் பழைய கோயில்களையும் புனருத்தாரணம் செய்துகும்பாபிஷேகம் செய்கிறார்கள்புதுக்கோயில்பழைய கோயில் கும்பாபிஷேகங்களுக்காக என்னிடம் பலர் வந்து யோசனையும்பிரஸாதமும் கேட்டபடிஇருக்கிறார்கள்இது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.
அதே சமயத்தில் என் மனசுக்கு நிரம்ப வருத்தம் தருகிற விஷயங்களையும் பல பக்தர்கள் வந்து தெரிவித்துக் கொள்கிறார்கள்வேறு யாரிடமும்சொல்லிக்கொள்ள முடியாமல் ஸ்வாமிகளிடம் சொல்லலாம் என்று என்னிடம் வந்து முறையிடுகிறார்கள்இவற்றுக்கு நான் பரிகாரம் தேட வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறார்கள்மற்றவர்கள் வெளியே சொல்லத் தயங்குகிற இந்த விஷயங்களை நானும் கூடச் சொல்லாமல் இருக்கக்கூடாதுஎனக்குஎல்லோரும் சொந்தம்ஸ்வாதீனப்பட்ட மநுஷ்யர்கள் என்றால்நான் அவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் எனக்கு நல்லது கெட்டது என்றுதோன்றுவதைச் சொல்லத்தான் வேண்டும்எனவே மனசு விட்டு இப்போது சொல்கிறேன்.
கோயில்களில் சூழ்நிலை அமைதியாகதூய்மையாக இருக்க வேண்டும்பகவத் ஸ்மரணை தவிர மற்ற நினைவுகள் மறந்துவிடும்படியாக இருக்கவேண்டும்ஆனால் இப்போது என்ன பார்க்கிறோம்பெரும்பாலான க்ஷேத்திரங்களில் கோயிலைச் சுற்றி ஏகப்பட்ட கடைகள் வந்துவிட்டனடீக்கடை,சிகரெட் கடை எதுவுமே பாக்கியில்லைகோயில் அதிகாரிகளே கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதால் இந்த இடங்களை வாடகைக்குக்கொடுக்கிறார்கள். ---- அதாவது அநேகமாக ஸ்வாமமியைத் தவிர கோவிலையே வாடகைக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்லலாம்இம்மாதிரியானசூழ்நிலையில் தெய்வ சாந்நித்தியத்தை நாம் கிரகித்துக்கொள்ள சக்தி குறைகிறதுநம் பக்தி சுற்றுச்சூழலால் குறைகிறது.
ஆபீஸ் கட்டிடங்கள்காட்டேஜ்'கள் எல்லாம் இப்போது பல க்ஷேத்திரங்களில் ஏராளமாக முளைத்துவிட்டனஅங்கெல்லாம் தெய்வ சம்பந்தமற்றகாரியங்கள் நிறைய நடக்கின்றனஇது சாந்நியத்தை பாதிக்கிறதுஏதோ எட்டாக் கையில் இருக்கிற கோயில்களில்தான் விச்ராந்தியான சூழல் இருக்கிறது.அபிவிருத்தி என்ற பெயரில் இவற்றில் அதிகாரிகள் அநாசாரத்தைப் புகுத்திவிடப் போகிறார்களோ என்று பயமாக இருக்கிறது.
இப்போது கோயில்களுக்குத் தனித்தனி நிர்வாகம் இல்லாமல் ஒரே சர்க்கார் நிப்வாகத்தில் இருப்பதால் அவர்களுக்குப் பொது ஜனங்கள் எடுத்துச் சொல்லவேண்டும்துரதிஷ்டவசமாகஆலய ஆபீஸர்கள் ஏதாவதொரு நல்ல காரியத்தை ஆரம்பித்து முடிக்கு முன்பே வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடுகிறார்கள். 'செய்கிற காரியத்தைப் பூர்த்தி செய்து பலனைப் பார்க்கலாம்என்கிற உற்சாகம் இருந்தால்தான் அதிகாரிகளிடமிருந்து சிறப்பான பணியை எதிர்பார்க்கமுடியும்.
ஆலயங்களில் உட்புறமும்சூழ்நிலையும் சுத்தமாக இல்லாத வரையில்ஆஸ்திக காரியம் எத்தனைத்தான் நடந்தாலும் எத்தனை கும்பாபிஷேகங்கள்நடந்தாலும் நாம் திருப்திபடுவதற்கில்லைகும்பாபிஷேகத்துக்கு அப்புறம் சாந்நித்தியம் நிலைத்திருக்க வழி பண்ணிவிட்டால் என்ன பிரயோஜனம்?பிரஜைகள் இவ்விஷயத்தில் தீவிரமான கவனம் செலுத்தினால்அதிகாரிகளுக்கும் சர்க்காருக்கும் பொறுப்புணர்ச்சி அதிகரித்து ஆவன செய்வார்கள்பொதுமக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்துக்கு (public opinion) அந்த சக்தி உண்டு.
ஆலயங்களுக்கு உள்ளேயே நடக்கிற அநாசாரங்களை என்னைத் தவிர யாரும் எடுத்துச் சொல்லமாட்டார்கள் போலிருக்கிறதுஅதையும் நானேசொல்கிறேன்இப்போதெல்லாம் டூரிஷ்டுகள், 45, 50 நாள் யாத்திரை கோஷ்டிகள்காலேஜ் பெண்கள்ட்ரெயினிங் ஸ்கூல் பெண்கள் என்று பலர் கூட்டம்கூட்டமாகக் கோயில்களுக்கு பஸ்கள் அமர்த்திக் கொண்டு வருகிறார்கள்அவர்களில் எத்தனையோ பேர் விலகியிருக்க வேண்டிய காலத்திலும்தரிசனத்திற்கு வந்து விடுகிறார்கள்இப்படி செய்வது தோஷம் என்று தெரியாததாலேயே பெரும்பாலும் கோயிலுக்கு வந்து விடுகிறார்கள்முன்பெல்லாமவீட்டு விலக்கு என்று எவர்களை வீடுகளிலேயே தனித்து வைத்தார்களோ அவர்கள் இப்போது கோயிலிலும்கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்துவிடுகிறார்கள். 'ஸ்வாமிக்கு ஏது தீட்டு?' சீர்திருத்தக்காரர்கள் நான் சொல்வதை ஆக்ஷேபிக்கலாம்தீட்டு இல்லாத சுவாமி எங்கேயும் இருக்கிறார்அவரைக்கோயிலில்தான் வந்து தரிசிக்கவேண்டுமெல்பதில்லையேசாஸ்திரப் பிரகாரம் ஸ்வாமியின் சாந்நித்தியத்தைக் கிரகித்துத் தரும் கோயில்களில்அந்தசாஸ்திரகங்கள் சொன்ன விதிப்படிதான் ஸ்வாமியைத் தரிசிக்க வேண்டும்இந்த விதிகளை மீறுவதால்தான் பல மகாக்ஷேத்திரங்களில்விபத்துவிபரீதம்எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்.

'அந்த மகா க்ஷேத்திரத்தில் ஏன் இப்படிப்பட்ட விபத்து உண்டாச்சுஸ்வாமி சாந்நித்தியமே போய்விட்டதா?' என்று கேட்கிறார்கள்நான் மனசு நொந்துசொல்கிறேன்ஸ்வாமி சாந்நித்தியம் இருப்பதாலேயேதான் நாம் செய்கிற அநாச்சாரத்தைப் பொறுக்க முடியாமல்தம் கருணையும் மீறிஇப்படிஅவ்வப்போது ஒரு விபரீதத்தை நமக்குத் தண்டனையாகத் தருகிறார்விபத்து என்ற பேரில் சில புண்யசாலிகளைத் தம்மிடம் சேர்த்துக்கொண்டு,உயிரோடிருக்கிற நம்மைத்தான் தண்டிக்கிறார்நாம் திருந்த வேண்டும்நல்ல ஆசார ஸம்பன்னர்களாக இருக்கவேண்டும் என்று கருணையினாலேதான்தண்டனை கொடுக்கிறார்.

காட்டேஜ்எக்ஸ்கர்ஷன் எல்லாமே அநேக க்ஷேத்திரங்களில் பக்தியைவிடஉல்லாசகக் கேளிக்கைகளைத்தான் அதிகப் படுத்தியிருக்கின்றன.மொத்தத்தில்நம் வீட்டில் நம்மால் சகிக்க முடியாத அபச்சாரங்களை சாக்ஷாத் வேங்கடரமண ஸ்வாமி சந்நிதியிலும்மற்றும் பல தெய்வ சந்நிதிகளிலும்இழைக்கிறோம்.
இது எனக்கு நன்றாகத் தெரிந்தும்சொல்லாமல் வெறுமனே இருந்தேனானால்அதுவே எல்லாவற்றிலும் பெரிய அபசாரம் என்பதால் என்மனஸிலிருந்ததைச் சொன்னேன்உங்களிடம் சொல்வதாக மட்டும் நினைக்காமல்சாக்ஷாத் வேங்கடரமண ஸ்வாமியிடமே பிரார்த்தனையோடுசொல்கிறேன்அந்த அபச்சாரங்களைத் தடுத்து நிறுத்துவதில் ஆஸ்திக மகா ஜனங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க அவர்தான் அருள் செய்ய வேண்டும்!

No comments:

Post a Comment