Tuesday, October 21, 2014

கடி ஜோக்ஸ் 112


சாரி ஆண்ட்டி ,நான் எறிந்த ரப்பர் பால்தான் உங்க 

மாமியார் நெற்றியில் பட்டது ...நல்ல வேளை 

ஒண்ணும் ஆகலே,அதுக்கு நீங்க ஏன் நூறு ரூபாய்

 கொடுக்கிறீங்க?

இனிமேல் நல்ல கார்க் பால் வாங்கி

 விளையாடுங்க..

.....................

"என்னதான் பிரஸ் நடத்துபவரா இருந்தாலும், 

அவரால 'அச்சு' வெல்லம் போட்டுதான் பொங்கல் 

செய்ய முடியும். 'ஆப்செட்' வெல்லாம் போட்டு 

செய்ய முடியாது!"

......................................................

.என்ன சார் திடீர்னு ரயிலு நின்னுடுச்சு.....

"டிராக்கிலமரம்விழுந்துகிடக்குதாம்...."."

எனக்கு அப்பவே தெரியுமுங்க.:::::::::மரங்கள்லாம் 

பின்னாடி ஓடும்போதே நினைச்சேன்.,!!.தடுமாறி 

கீழே விழும்னு ...."விழுந்துடிச்சா.

.......................................

நண்பன் 1: ஏண்டா பழத்தை சாப்டுட்டுதோல 

மட்டும் எனக்கு தர?

நண்பன் 2: தோல் கொடுப்பான் தோழன்

அது இதுதாண்டா உனக்கு தெரியாதா?

நண்பன் 1: ???????

.........................................................

.கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு 

வந்திருக்கிறேன்!

மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு 

வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா 

என்னங்க பண்றது.. 

கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் 


நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!

.................................................
..டீச்சர் : ஏண்டா அமாவாசை, ஏன் நேற்று பள்ளிக்கு 

வரலை?

அமாவாசை : நேற்று பவுர்ணமி டீச்சர். பவுர்ண்மி 

அன்னக்கு எப்படி அமாவாசை வரும்?

டீச்சர் : சே, என்னை பிடிச்ச கிரகணம் இன்னும் 

விடமாட்டேங்குது.

...........................................................

ஒருவர் வெகு நேரமாக ஒரு பீரோவை வீட்டுக்கு 

வெளியே கொண்டு செல்ல 

 திணறிக்கோண்டிருந்தார். பீரோ பாதி வெளியேயும்,

 பாதி உள்ளேயும் இருந்தது. அப்போது ஒருவர் 

அந்தவழியே வந்தார். நான் உதவட்டுமா என்று 

கேட்டார். அவரும் சரி நான் உள்ளே போகிறேன், 

நீங்கள் பீரோவை வெளியிலிருந்து பிடியுங்கள் 

என்றார். நேரம் கடந்து கொண்டிருந்தது. பீரொ 

இருந்த இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட 

நகரவில்லை. வீட்டுக்காரர் வெளியே வந்தார். “சே, 

இருவரிருந்தும் பீரோவை வெளியே எடுக்க 

முடியவில்லையே” என்றார். உதவ 

வந்தவர்.”என்ன? பீரோவை வெளியே 

எடுக்கணுமா?. நான் உள்ளே கொண்டு 

போகவேண்டும் என்று நினைத்து உள்ளே அல்லவா 

தள்ளிக்கொண்டிருந்தேன்” என்றார்.
இதிலிருந்த கிடைத்த நீதி என்ன? கூட்டாக செய்யும்

 வேலையை யாரும் ஈகோ பார்க்காமல், என்ன

செயயவேண்டும் என்று கலந்தாலோசித்து


செய்யவேண்டும்.(வடிவேல் பாஷையில் “எதயும் 

பிளான் பண்ணி பண்ணனும்.
.........................................................
WARNING: திடுக்கிடும் செய்திகளைக் கேட்க 

விரும்பாதவர்கள், இளகிய மனம் உடையவர்கள் 

மற்றும் 15 வயது நிரம்பாதவர்கள் இதைப் படிக்க 

வேண்டாம்.

DISCLAIMER: இதை நீங்கள் உங்கள் சொந்த ரிஸ்கில்

 படிக்க ஒப்புக்கொண்டு தொடர்கிறீர்கள். படித்து

முடிக்கும்போது உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள

எந்த வகையான உணர்வுகளுக்கும் - இதை

எழுதியவர் பொறுப்பேற்க இயலாது.
_________________________________
ராசிபுரம் அருகில் 1987 ஜனவரியில் நடந்த ஒரு

உண்மைச் சம்பவம்.

ராசிபுரம் ரத்னம் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட்

ஆரோக்கியம் என்கிற 23 வயது பட்டதாரி இளைஞர்.

■ ஜனவரி 16ஆம் தேதி அவர் பயணம் செய்த

ஆட்டோ மீது ஒரு லாரி மோதியதில், ஆட்டோ

டிரைவர் மரணமடைந்தார் - ஆனால் வின்சென்ட்

காயமேதுமின்றி உயிர் பிழைத்தார்.

■ 19ஆம் தேதி வின்சென்ட் பயணம் செய்த அரசுப்

பேருந்து ஒரு மரத்தில் மோதியதில் 7 பேர்

உயிரிழந்தனர் - ஆனால் வின்சென்ட்

உயிர்பிழைத்தார்.

■ 22ஆம் தேதி வின்சென்ட் பயணம் செய்த சேலம்-

பெங்களூர் ரயில் ஓசூர் அருகில் தடம்புரண்டு 28

பேர் கொல்லப்பட்டனர் - ஆனால் வின்சென்ட்டுக்கு

 ஒன்றுமே ஆகவில்லை.

ஒரு வாரத்துக்குள் நடந்த இம்மூன்று

விபத்துகளிலும் அவர் உயிர் பிழைத்ததற்கு எது

காரணமாக இருக்கக் கூடும் என்று அவருடைய

நண்பர் ஒருவர் ஆர்வத்துடன் கேட்டபோது,

வின்சென்ட் ஆரோக்கியம் சொன்ன பதில் என்ன

தெரியுமா?




"ஆரோக்கியத்தைக் காப்பது லைஃப் பாய்!"

No comments:

Post a Comment