Tuesday, October 28, 2014

கந்த சஷ்டி - ஆறு படை வீடு கவசங்கள்


image
முருகன் Murugan Devotees - Lord Muruga - அடியார்கள் - ...
Muruga, Kaumaram - Devotion to Murugan, sacred texts, poems, bhajan songs, temple kovil koyil information, philosophies, pages in Tamil, முருகன் இணைய...
View on www.kaumaram.com
Preview by Yahoo
image
Murugan Bhakti: Skanda-Kumara website
Comprehensive website of the pan-Indian god Skanda or Muruga in Sanskrit and Tamil sources including photo galleries, research articles and news.
View on murugan.org
Preview by Yahoo

  சஷ்டி கவசம் - உருவான கதை


கந்த சஷ்டி -  ஆறு படை வீடு கவசங்கள்

கந்தசஷ்டி கவசம் உருவான கதை..
கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின் போது வீரர்கள் எதிரிகளிடமிருந்துதன்னைக் காத்துக் கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்தசஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும்,கஷ்டத்திலிருந்தும்நோய்நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்

இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். தேவராய சுவாமிகள் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா?

தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும்அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள்மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.

அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள்,சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிரவழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.

நல்ல அருட்கவியும்மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள்சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில்,தினத்துக்கு ஒன்றாகஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.

அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாடஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.

தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவைஅனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த,

'சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்'.... என்று தொடங்கும் கவசம்.

இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது.என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும்.

முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு.முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, 'சரவணபவ'என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்துஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம்கடன்ரோகம்சத்ரு பேன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலேவந்த வினையும்வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?

இத்த்னை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்துஅறிவு,செல்வம்சந்தானம்வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக்கேட்டாலும்கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பதுகுறிப்பிடதக்கது.

(Please read everyday from 14th to 18th Nov. 2012)


முருகப் பெருமான் வரலாறு பற்றி முதன் முதலாகத் தமிழில் படைக்கப் பெற்ற இலக்கியம்,​​ 'திருமுருகாற்றுப் படைஆகும்


முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறுபடை வீடுகளாவன:-
http://www.kanthakottam.com/index.php?option=com_content&view=article&id=19&Itemid=27




கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்.

No comments:

Post a Comment