Saturday, October 11, 2014

கடி ஜோக்ஸ் 107

இது எப்படி இருக்கு!??!
"என் கணவர் குடிச்சிட்டு வந்தா, நான் பக்கத்துலயே போகமாட்டேன்..."
ஓஹோ இப்ப தான் தெரியுது, அந்தாள் ஏன் இப்ப்டி ரெகுலர் குடிகாரனா மாறினாருன்னு. ஒரு மனிதனுக்கு இவ்வளவு சந்தோசம் தரக்கூடாதும்மா
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என்னமோ போடா மாதவா!:
1 : என்னப்பா! வியாபாரமெல்லாம் எப்படி நடக்குது ?
2 : எல்லாமே தலைகீழா நடக்குது.

1 : என்னாச்சுது?
2 : முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன். இப்ப "ரவை" வியாபாரம் செய்யறேன்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நேத்து ஒரு கல்யாண மண்டபத்துக்கு போனேன்.

என்னை பார்த்து நீ மாப்பிளை வீடா ? பொண்ணு வீடா ? ன்னு-
கேட்டுட்டாங்க.....இன்சல்டா போச்சு!

அப்பறம் அந்த மண்டபம் சரிவராதுனு அடுத்த மண்டபம் போயி சாப்டேன்.
.டைம்க்கு சாப்டுரனும்....!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன். அப்புறம்?...
ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி... இப்ப?....
இப்ப..நல்ல சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படறேன்
.................................

மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

"டாக்டர் தெரியாம.. காசை முழுங்கிட்டேன்''
"என்ன காசு? ஒரு ரூபாயா... ரெண்டு ரூபாயா... அஞ்சு ரூபாயா?''
"அதான் தெரியாம முழுங்கிட்டேன்னு சொன்னேனே டாக்டர்''
.....................................................
........................................................................
இது எப்படி இருக்கு!??!.

Teacher: பொது அறிவு அதிகம் உள்ள அரசியல் தலைவர் யார்?

Boy: ஜி.கே. மூப்பனார்!?
....................................

பாத்திரத்துல என்னப்பா ஏதோ படம் வரைஞ்சு வச்சிருக்கே...?
“தொழிலுக்கு அடியேன் வச்சிருக்கும் ‘லோகோ’ தாயீ...!
................................

பாட சாலைக்கும்,சிறைச்சாலைக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?
பாடசாலைல பாடபுத்தகம் படிக்கலாம்
சிறைச்சாலைல கதைபுத்தகம் படிக்கலாம்...
!
.............................................................

No comments:

Post a Comment