Saturday, October 11, 2014

கடி ஜோக்ஸ் 106


.மூன்று கைதிகள் மூன்று ஆசைகள்
ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.
முதல் கைதியின் ஆசை:
நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாவது கைதியின் ஆசைகள் ;
நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
மூன்றாவது கைதி :
தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.
செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். ''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், ''என்ன சொல்கிறாய்,நீ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!
''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.'
# புத்திசாலி எந்த தருணத்திலும் தன்னை காத்துக் கொள்கிறான்... புத்தியைத் தீட்டு
,......................................................
 காலையில் எழுந்தவுடன் “கடிப்பு”
1. கான்க்ரீட்டுக்கும் மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்.?
கான்க்ரீட்டுக்கு தண்ணியடிக்காட்ட ”க்ராக்” வரும்
மனுஷனுக்கு தண்ணியடிச்சா “க்ராக்” வரும்.

2.அண்டர்வேர்க்கும் கோவணத்துக்கும் என்ன வித்தியாசம்?
அண்டர்வேர் - அணிந்துவிட்டு கடைசியில் கிழிப்போம்
கோவணம் - கிழித்துவிட்டு அணிவோம்.
(First is "Wear and Tear" and the second is "Tear and Wear")
நன்றி : வீடு படத்தில் வந்த தாத்தா..
............................................................................
3. ஹெல்மெட் அணியாமல் ஆக்ஸிடெண்ட்டில் இறந்தவர்கள் மேல் லோகத்தில் சந்தித்தால் ஆங்கிலத்தில் எப்படி சொல்வீர்கள்?
They "met in hell" ன்னுதான்.
...............................................................
4. உன் பையன் போலீஸ் ஆஃபிஸர் ஆனதிலிருந்து ”பிடிக்கவே” முடியலயே.
அவன் திருடனை “பிடிக்க” போயிருக்கான்.
........................................................................
5.உன் பையன் "Circle Inspector" ஆகிட்டானமே? இப்போ எங்கே இருக்கான்.?
ஊர் ஊரா "circle" அடிச்சிட்டுருக்கான்.
.......................................

No comments:

Post a Comment