Tuesday, October 7, 2014

கடி ஜோக்ஸ் 105


,டீச்சர்: ஏன்டா லேட்?
பையன்: வீட்டில பிரச்னை
டீச்சர்: என்ன பிரச்னை?
பையன்: வீட்டில் பாட்டி செத்துட்டாங்க. எரிக்கறதா புதைக்கறதானு பிரச்னை
டீச்சர்: அதில் என்ன பிரச்னை
பையன்: எரிச்சா பிரச்னையில்லை புதைச்சா தான் பிரச்னை
டீச்சர்: அதில் என்ன பிரச்னை
பையன்: புதைச்சா அந்த இடத்தில புல்லு முளைக்குமா முளைக்காதானு தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை
பையன்: புல்லு முளைக்காட்டி பிரச்னையில்ல, புல் முளைச்சா. தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை
பையன் : முளைச்ச புல்லை மாடு திங்குமா திங்காதானு தான் பிரச்னை
டீச்சர்: அதில் என்ன பிரச்னை
பையன்: முளைச்ச புல்லை மாடு திங்கலைனா பிரச்னையில்லை, தின்னாதான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை
பையன் : முளைச்ச புல்லை தின்ன மாடு பிழைக்குமா பிழைக்காதானு தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை
பையன்: மாடு பிழைச்சுட்டா பிரச்னையில்லை பிழைக்காம செத்துட்டா தான் பிரச்னை
டீச்சர் :அதில் என்ன பிரச்னை
பையன்: வேறென்ன, எரிக்கறதா புதைக்கிறதானு தான்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வீட்டில் புகுந்த திருடன் ஆணையும் பெண்ணையும் கட்டிப் போட்டு விட்டு திருடிய பின் கிளம்ப தயாரானான்.
ஆண்: திருடனுது திருடின , உனக்கு புண்ணிய்யமா போகும். போறதுக்கு முன்னாடி அந்த பொம்பளையை அவிழ்த்து விட்டுட்டு போ
திருடன்: ஏன்

ஆண்: யோவ், அது என் மனைவி இல்லை, பக்கத்து வீட்டுக்காரம்மா
.......................................
..ICUவில் பேஷன்ட் படுத்திருந்தான். வெளியே கதவை டொக் டொக் என்று தட்டும் சத்தம் கேட்டது.
பேஷன்ட்: யாரது
வெளியே இருந்து குரல்: நான் தான் எமன்.
பேஷன்ட்: நல்ல வேளை, நான் கூட டாக்டரோ என்று பயந்து விட்டேன்
............................................................
வீட்டுக்கு திருட வந்தவனைப் பிடித்தவர்கள் அவனைக் கட்டிவைக்க கயிறு இல்லாததால், அவனை கீழே தள்ளி அவன் மீது குண்டாக இருந்த அந்த வீட்டம்மாவை உட்கார வைத்தார்கள்.
அப்பா பையனை பார்த்து சொன்னார்: சீக்கிரமா ஓடிப்போய் போலிஸை கூட்டி வா.
அவன் அங்குமிங்குமாக ஓடுவதைப் பார்த்த அப்பா சத்தம் போட்டார், "சீக்கிர்ம் போ, என்னெ தேடிக்கொன்டிருக்கிறாய்?",

பையன்: என் செருப்பைக் காணோம், அதைத்தான்
தேடிக்கொன்டிருக்கிறேன்.
திருடன் சொன்னான்: தம்பி, வேணுமின்னா என் செருப்பைக்கூட எடுத்துட்டு போ. ஆனா சீக்கிரம் போ. இந்தம்மா வெய்ட் தாங்க முடியல‌.
..........................................
1: வயலுக்குள்ள என்ன சண்டை அவங்க ரெண்டு பேருக்கும்? ஒருத்தர் வாயைப் பேத்துடுவேன்கிறார்... இன்னொருத்தர் காலை ஒடச்சிடுவேன்கிறார்.....!
2 :ஒண்ணுமில்லங்க... 'வாய்க்-கால்' சண்டைதான்

...................................................
உங்க மாமா டெல்லிக்கு போனாரே! அங்க என்னவா இருக்கார்?
அங்கேயும் என்னோட மாமாவாத்தான் இருக்கார்!
ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !

அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !
........................

No comments:

Post a Comment