Tuesday, October 7, 2014

கடி ஜோக்ஸ் 104

.நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட !!!
ஒரு Interview-ல ஒருவனை எப்பிடியாவது Fail பண்ணனும் என்னும் நோக்கத்தோடு Interview எடுப்பவர் கேள்வி கேக்க ஆரம்பிச்சாரு.
Interviewer : நீ ஒரு Aeroplane-ல போற. அதுல 50 பாறாங்கல்ல கொண்டு போற. ஒரு கல்ல Aeroplane-க்கு வெளியில தூக்கிப் போடற. மீதி எத்தனை கல் இருக்கும்.?
ஒருவன் : '49'
Interviewer : ஒரு பிரிட்ஜுல மூன்று step-ல ஒரு யானையை எப்படி வைப்பாய்?
ஒருவன் : Fridge-ஐத் திறப்பேன். யானையை வைப்பேன். Fridge-ஐ மூடுவேன்.
Interviewer : சரி. இப்போ ஒரு மானை நாலு step-ல வைக்கணும்.
ஒருவன் : Fridge-ஐத் திறப்பேன். யானையை வெளியே எடுப்பேன். மானை வைப்பேன். Fridge-ஐ மூடுவேன்.
Interviewer : இன்னிக்கி காட்டு ராஜா சிங்கத்தோட 'BIRTH DAY'. அதுக்கு ஒரே ஒரு மிருகத்தைத் தவிர எல்லா மிருகங்களும் Present. எந்த மிருகம் Absent?
ஒருவன் : Fridge-ல அடைபட்டிருக்கிற மான்.
இண்டர்வியூவர் அசந்துட்டாரு....
Interviewer : சரி இப்போ ஒரு மனிதன் முதலைகள் நிறைந்த ஒரு சதுப்பு நிலப்பரப்பை நடந்தே கடக்க முயற்சிக்கிறான். ஒரு முதலைகூட அவனைத் தாக்கவில்லை. ஏன்?
ஒருவன் : முதலைகள் எல்லாம் Birthday Party-க்குப் போயிருக்கு.
Interviewer : இருந்தாலும் அவன் செத்துப் போயிடுறான். எப்பிடி?
ஒருவன் : ம்ம்ம்ம்.... சதுப்பு நிலத்துல முங்கி மூச்சுத் திணறியிருக்கலாம்.
இண்டர்வியூவர் முகம் மலர்ந்தது.
Interviewer : இல்லை.... நீ Aeroplane-இல் இருந்து கீழ போட்ட கல் அவர் தலையில விழுந்து செத்துட்டார். நீ கொலைகாரன்....So no நோ வேலை. You may go now.
ஒருவன் : ???
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>பெண்களை வாடி போடி என்றும்..
வாமா போமா என்றும்
வாடா போடா என்றும்
பா என்றும்
செல்லம் குட்டி என்றும்
அழைப்பது அனைத்துஆண்களின் வழக்கமாக
இருக்கிறது.
இதையெல்லாம் என்ன அர்த்தத்தில்
அவர்களை அப்படி அழைக்கிறோம்
என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை.
(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்)
இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம்
இருக்கிறது.
மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக
நினைத்து,
பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக
நினைத்து,
டா என்று அழைப்பது அவர்களை தன்
தோழனுக்கு நிகராக
நினைத்து (தனக்கு நிகராகவும்
நினைத்து தான்) அதாவது ஆணுக்கு பெண்
சமம் என்ற அடிப்படையில்,
குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும்
செல்லம் என்று அழைப்பது தன்னுடைய
அன்புக்கு நிகராகவும
அழைக்கிறார்கள்.
ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய
மனைவி மற்றும் காதலியிடம்
மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.
அதனால் தான் நான்
பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.
அந்த எழுத்து என் மனைவிக்கானது...
அதை நான் மற்ற பெண்களிடம் பயன்படுத்த
விரும்பவில்லை.

................................
ப்ளேன்:(ராக்கெட்டிடம்) நீ மட்டும் எப்படி இவ்வளவு ஸ்பீடா போறே?ஸ்பெஷலா எதுவும் சாப்புடுறியா?
ராக்கெட்: ங்கொய்யலே...உனக்கும் வால்ல தீ வெச்சா தெரியுன்டி
......................................

ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள்
அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர்,'அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும்,அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர் சிறைக்கு செல்ல வேண்டினார்.
அதே போல் வோடபோன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்தஅவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார்.
அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல் வரமாக "எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர்,"10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய்,8வது வாய்ப்பை பயன்படுத்தியும்பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.
நீ ஒரு ஏமாற்றுக்காரன்"என்றார்.
கடவுள் பொறுமையாக,"நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற?
அது மாதிரி தான் இதுவும்,3 வரம் சர்விஸ் சார்ஜ்

..........................

No comments:

Post a Comment