அரசன் அன்று கொள்வான் தெய்வ நின்று கொல்லும் என்று கூட ஒரு சொல் உண்டு.
பிறர் பொருளை நாடாதே. அதிலும் சிவன் சொத்து குலநாசம் என்றெல்லாம் கூட வாக்கு நிலவுகிறதே.
வேலியே பயிரை மேய்ந்தால்...... இதுவும் அன்றாடம் நடக்கும் அக்கிரமங்களைப் பார்க்கும்போது கேட்கும்போதும் நமக்கு தோன்றுகிற ஒரு சொல்.
அது சரி. இதெல்லாம் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் உள்ள விஷயமா?
ஆமாம் கீழே கண்டதை படித்தால் சம்பந்தப்பட்டவை என்று புரியும்.
யார் இதை சரிப்படுத்துவது.
யாருக்கு பொறுப்பு இருக்கிறது இதில். அவர்கள் படிக்கட்டும். விசாரிக்கட்டும். இப்போவாவது கொஞ்சம் தூக்கத்திலிருந்து விழிக்கட்டும்.
பக்தர்கள் ஒன்று சேரட்டும். கோட்டை விட்டு விட்டு சிவனே என்று இருக்கிற சிவனும் நெற்றிக் கண்ணை திறக்கட்டும்.நியாயம் பிறக்கட்டும்.
நல்லது நடந்தால் நாடு சீற்படுமல்லவா.?
இந்திரா நேற்றா இது நடக்கிறது. எல்லோரும் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும், படித்துக்கொண்டும் இருந்து விட்டு வேலா வேளைக்கு சாப்பிட்டு விட்டு டி வி சேன்னல் பார்த்துக்கொண்டு மறுநாள் காலை பேப்பரில் யார் யாரை கற்பழித்தார், எவர் கொலையுண்டார், எந்த பாங்கில் கொள்ளை, எவன் எங்கே எவனை ஏசினான்,வெட்டினான். யார் யாரோடு கூட்டு, யார் யாரை கழட்டி விட்டார்கள் என்றெல்லாம் சமத்தாக படித்துவிட்டு மறந்து விடுகிறோம்.
அடே திடீரென்று என் எதிர் வீட்டில் பெரிதாக டி வி வைத்து அதிலிருந்து டி எம் எஸ் குரல் எனக்கு கேட்கிறதே!
''என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மரியட்டுமே, தன்னாலே வெளி வரும் தயங்காதே, இறைவன் இருக்கிறான்........?
இருக்கிறானா எங்கே எங்கே எங்கே?
No comments:
Post a Comment