Monday, March 10, 2014

ஊரெங்கும் மகிழ்ந்து, ஒன்றாகக் கலந்து ........தீபாவளி

கங்காஸ்நானம் ஆச்சா?

தீபாவளி என்றால் நினைவுக்கு வருவது காலங்கார்த்தாலை எழுந்து, பூண்டு, இஞ்சி, மொளகு நசுக்கிப் போட்டு நல்ல எண்ணையைக் காய்ச்சி எடுத்த எண்ணைத் தேச்சக் குளித்து, புது ட்ரெஸ் போட்டுக் கொண்டு வெடி வெடிப்பதுதான்.

ரெண்டு நாளுக்கு முன்னாடி பெரியப்பா போய் பட்டாசு வாங்கிண்டு வருவா.
அதுவும் ரெண்டோ இல்ல மூணு பெருங்காய மஞ்சள் பை அளவுத் தான் வரும். அதைப் பிரிச்சுக் கொடுப்பாள் . அதைப்  பிரிச்சுப் பங்குப் போடும்போது பாக்கணுமே! என்னமோ நூறு ஏக்கரா நிலத்தை பிரிச்சுக் கொடுக்கறாமாதிரி  பழியாக் காத்துண்டு கெடப்போம்.

அதுல வேற பொண்ணுங்களுக்கெல்லாம் வெடி கிடையாது.வெறும் புஸ்வாணம் ,சுருசுரு மத்தாப்பு, வெத்துப்பெட்டியில வர வெத்துக் குச்சி கலர்கலரா, பாம்பு மாத்திரைகள், ரொம்ப கெஞ்சிக் கேட்டா, தனித் தனியா வருமே 'கேப்' ஒரு ரெண்டு டப்பா .சாட்டை கொஞ்சம் வயசானதும்.அவ்ளோதான். இதைப் பிரிச்சுக் கொடுத்ததுமே அவா அவா அதை யார் கண்ணிலும் படாம ஒழிச்சுவைக்க எடம் தேடணுமே ? அது ஒரு பெரிய விசயமாக்கும் !


புருஷ பசங்கள் மட்டும் சரவெடி , எலக்ட்ரிக், ஊசிப்பட்டாசு, லக்ஷ்மி வெடி, லயன் மார்க் வெடி, விஷ்ணு சக்கரம்னு ஒரு போடு போடுவா.
*                                                                    *                                                                     *

கூட்டுக் குடும்பத்தில் நாலு மணிக்கு எழுந்திருக்கணும்னா , ரெண்டு மணிக்கே எழுந்து வெந்நீருக்கு அடுப்பைப் பத்த வச்சு, ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அடுப்பை எரியவிட்டு, முன்னாடிக் குளிக்கறவா தண்ணீ எடுத்துண்டதும் தண்ணீ போட்டு விறகை வச்சு தண்ணீ சுடப் பண்ணனும். நம்ம கஷ்டப் பட்டுப் பண்ணிண்டு இருக்கப் போ தடால்னு வேறயாராவது போய்க் குளிச்சுடுவா, அப்ப இருக்கும் பாரு கோபம், எண்ணப் பண்ணுவோம்னு பின்னாடி சொல்றேன்.
என்னோட சில்கி தலை மயிருக்கு கொஞ்சத்தில் என்னை போகாது, எப்பவும் தீபாவளி அன்னிக்கு ரெண்டு தடவையாவதுக் குளிக்கணும், போகப் போக ஷாம்பூ வந்தது, அதிலும் எண்ணை தேச்சுக் குளிக்கற வழக்கம் போக ஆரம்பிச்சது.
புதுசு என்றால் எங்களுக்கு, அதாவது பெண்களுக்கு, பவானி சீட்டிப் பாவாடையோ, சின்னாளம் பட்டோ தான்,புருஷப் பசங்களுக்கு, நிக்கர், ஷர்ட் , சில சமயம் அந்த நிக்கர் . ஆர். எஸ் .எஸ் காரா மாதிரி ரெண்டு காலும் ஒரே காலிலே நுழஞ்சிடலாம், அவ்ளோ தொள தொள ன்னு தச்சிடுவா.

எல்லோரும் குளிச்சதுமே பட்டாசு விடப் போய்டுவோம், இதுல சில கடைக் குட்டிகள் அம்மா வந்துக் குளிப்பாட்டணும்னு ஒக்காந்துண்டு இருக்கும்கள்.

நான் சொல்லவே இல்லையே. எங்கள் குடும்பத்தில்.   நாங்கள் கொறஞ்சது பதினஞ்சிலிருந்து இருபது வரை இருப்போம், சில் சமயம் ரெண்டு குடும்பம் சில சமயம் மூணு.

பக்கத்தாத்து 'தனம் இங்கிட்டு வாம்மா' வீட்டுல இருக்கறவா எழுந்துருக்கறதுக்கு முன்னாடியே நாங்கள் எழுந்துடுவோம்.அவாத்துல யாரவது எழுந்துட்டாளான்னு பாக்கறதுக்கு தண்ணீ தொட்டி மேல ஏறி திருட்டுதனமாப் பாப்போம்.

பட்டாசு வெடிச்சவுடன் தான் வயத்துல ரேடியோப் பாட ஆரம்பிக்கும் அப்பப் போய் பட்சணம் கேட்போம்.
*                                                                 *                                                             *
பட்சணம் பண்ணறது ஒரு பெரிய பாடு, பூந்தி  லட்டு, பாதுஷா, ரவா லட்டு, காரத்துல இன்வேரியாபிளி மிக்ஸர் தான், ரொம்ப எகனாமிகல் , எல்லாரும் அள்ளித் தின்னாலாம் ,பாடும் இல்லை.

 இதுலயும் ரேஷன் , மிச்சர் ஒரு கப் அதாவது செவெண்டிஸ்ல கல்யாணத்துல பாயசத்துக்கு ஒரு கப் கொடுப்பாளே அந்த அளவுத் தான். சுக்ர தசைன்னா ஒரு முழு லட்டு கிடைக்கும், இல்லன்ன உடுத்த தூள் தான். பாய்ஸ்க்கு ஸ்வீட் பிடிக்கும் அப்போ, மிக்சர்க்கு எக்ஸ்சேன்ஜ் பண்ணிப்போம்.
இப்போ மாதிரி கடையிலே வாங்கித் தின்பதெல்லாம் அபூர்வம், வீட்டில் எண்ணைப் புகை போடணும்னே பக்ஷணங்கள் செய்வது வழக்கம்.

பத்து மணிக்கா, எல்லாரும் பாட்டிக்கு, ஆல்ஸோ கால்ட்  கமாண்டர் இன் சீப் , நமஸ்காரம் பண்ணுவோம். பாட்டி கையிலே புது கரன்சி நோட்டுக்கள் இருக்கும், அது ஆளுக்குத் தகுந்தாப் போல டிநாமிநேஷன்  மாறி வரும்.

 பாத்திரம் அறிந்து பிச்சைப் போடுங்கரதுன்னு சொல்வது இங்கே சரியாக இருக்கும். பாட்டிக்கு சிலப் பிறப் பசங்கள் பிடிக்கும் ,ரொம்பவே!
நமஸ்காரம் பண்ணினதும், வாயாலே ஷேமமா இருன்னோ, தீர்காயுசா இருன்னோ சொல்லிக் கேள்விப் பட்டதே இல்லை. ஆனா அந்த வாயே எங்களுக்கு , பணம் போடும், எப்டின்னா, ரூபா நோட்டை ஊதி ஊதி, பாத்து, எங்கேயாவது ஜாஸ்தி கொடுத்துடுவோமுன்னு பத்து தரம் அதை தட்டி தட்டி, பிறகு, முகம் பாத்து , ஒரு ரூபாயோ, ரெண்டு ரூபாயோ கொடுப்பாள். அதுக்கு நாய் நாக்கைத் தொங்கப் போட்டுண்டு இருக்கா மாதிரி நாங்களும் தப்பித் தவறி ஜாஸ்தியா கொடுக்க மாட்டாளுன்னு வாலை சுருட்டிண்டு இருப்போம்!

அப்பறம், சாப்பாடு பண்ணுவா , அம்மாவும் பெரிம்மாவும்.அதுக்கு கூட மாட நாங்கள் ஹெல்ப் பண்ணுவோம், வடைக்கு அரைத்து , காய் கறிகள் நறுக்கி, பாத்திரம் தேய்த்துக் கொடுத்து......

சாப்பாடு முடிஞ்சதும் எல்லா இலைகளையும் எடுத்து, இடத்தை சுத்தப் படுத்தி ...
,படுக்க?....................
அப்பா எங்களை எல்லாரையும் தன்னுடன் கோழி அமுக்கரா மாதிரி அமுக்கி, ரூமை இருட்டுப் பண்ணிப் படுக்க வச்சுடுவா. சில பொண்  பசங்கள் ஹெல்ப் பண்றோம் பேர்வழின்னு தப்பிச்சுடுவோம் , கடைக்குட்டி 'வுளவுல வாயி ' எல்லாம் மாட்டிண்டுவா.

இதுல வேடிக்கை என்னன்னா புருசப் பசங்கத் தான் மாட்டிப்பா, வேதுவைத் தவிர அவன் ஆத்துக்கு பெரிய பேரன்.

படுக்கரா மாதிரி படுத்துப்பா, அப்பா நல்லாத் தூங்கிட்டான்னு தெரிஞ்சதுமே, ஒவ் ஒருத்தரா அம்பேல், சிலபேர் அன்னிக்கு நரி மூஞ்சில முழிச்சா, அப்பா பாக்கறதுக்கு முன்னாடியே தப்பிச்சுடலாம், இல்ல மாட்டிண்டா, அடுத்தது யாரு தப்பிக்கலாம்னு ப்ளான் போட்டாலோ அவாளுக்கு விமோசனமே கிடையாது.

அதுக்குள்ள தப்பிச்ச நரிகள், வெளியிலேப் போயி வீடு வீடா வெடிச்சக் குப்பையைக் கிளறி, வெடிக்காத பட்டாஸ்களை பொறுக்கி ஒன்னு சேத்து எடுத்துண்டு வருவோம். இப்ப நெனச்சா, குருவிக்கார கும்பல்னு பாட்டி சில சமயம் சொன்னது ஞாபகத்துக்கு வருது. குருவிக்காரா மாதிரிதான் ஆனா டால்டா டப்பா தான் இல்லை. வந்தோமா, அதுல ஊசிப்பட்டாசு, எலக்ட்ரிக் வெடி, லக்ஷ்மி வெடி, கேப்புன்னு ( இப்போ ஈகோ ப்ரெண்ட்லின்னு , ட்ரை , வெட் வேஸ்ட்ன்னு , செக்ரேகெட் பண்ணறா மாதிரி) தனித் தனியாப் பிரிச்சு, வெடிகளை எல்லாம், என்னமோ இப்போ டெரரிஸ்ட் பாம் மாதிரி, ஹைய் லெவல் ஆளுதான் வெடிக்கலாம்னு வேது , நந்துக்கு கொடுத்துடுவோம்.
எல்லாரும் பிஸியா இந்தக் காரியத்துல மும்முரமா மூழ்கிண்டு இருக்கப் போ ஒன்னு யாராவது தூதனை அப்பா அனுப்பிச்சு அழைச்சுண்டு வரச் சொல்லி இருப்பா, இல்லன்னா அப்பாவே அங்கே வந்து, எவண்டா அவன் பட்டாசு வெடிக்கறதுன்னு கத்துவா.

 அப்பப் பாக்கணுமே, ஓடி ஒழிய எங்கெல்லாம் இடம் இருக்குன்னு, சில சமயம் எங்களுக்கேத் தெரியாது, அப்டியே,... ராமர் வுட்ட பானம் திரும்பிப் பாத்தாக் காணம்'னு ஓடிடுவோம். ஆனா யாராவது பலியாடு இருந்து தானே ஆகணும்!

அப்ப தான் என்னிக்கும் கை எடுத்து கும்பிடாதவா, அந்த பலி ஆட்டுக்கு, மானசீகமா, பழம் ,பாலு, தேனு, பன்னிர் , இளநீர், நெய் எல்லாம் போட்டு அபிஷேகம் பண்ணிப் பட்டு.. ரிமெம்பர் .. சின்னாளம் பட்டு இல்லை,........நல்லிப் பட்டுப் பீதாம்பரம் சாத்தி  ஐயோ, அம்மா, அப்பா, என்னைக் காட்டிக் கொடுத்து டாதடான்னு கெஞ்சி, அப்பா உள்ளப் போனதுமே ஈசல் எல்லாம் புத்துலேந்து வரா மாதிரி வருவோம். கொஞ்ச நேரத்துக்கு அமைதிக் காத்துடுவோம்.

சில சமயம் வெற்றி, குமரகுரு, தண்ட பாணி பின்னாடிக் கூட ஒழிஞ்சிண்டுடுவோம்... வாச சட்டத்துக்கும், ரூம் சுவருக்கும் நடுவுல இருக்கற இடத்துலேயும் செவுரோட செவுரு ஓட்டினா மாதிரி.....

பாட்டிக்குன்னு தனி பீரோ இருக்கு அதுலதான் ரவாலட்டு, ஜாங்கிரி, லட்டு முறுக்கு எல்லாம் சின்ன சின்ன காலு வச்ச பேலா, பீப்பால்ல போட்டு மூடி வப்பா .தெனம்  பீரோவததெறந்து , ஒரு தரம் நோட்டம் விடுவா, நாங்களும் நாய் எலும்புத்துண்டுக்கு காதுண்டஉ இருக்கா மாதிரி, குறுக்க நெடுக்க போயிண்டு இருப்போம்,வேற வழி இல்லன்னா,' இந்தா ,இத எடுத்துண்டு போண்ணு' சொல்லுவா. இப்பத் தான் எங்களுக்கு இக்கட்டான நெலமை,  பேசாம கம்முனு,  வாய மூடிண்டு போறதா இல்ல கொஞ்சம் தண்டோரா போடலாமான்னு? போனப் போறதுன்னு  கொடுத்தா அட நான் பத்து பேருக்கு சொல்லி அடுத்த தரம் எனக்கு கெடைக்கலன்னா?     அதனால சல சமயம் தனியாவே வாயில போட்டு  அடச்சுண்டு , ஒரு டம்ளர் தண்ணியும் குடிச்சுட்டு போய் விளையாட சேந்துக்கறது , இதுல என்னன்னா, சாப்பிட்ட டேஸ்டு கொஞ்ச நேரம் வாயிலேயே இருக்கணும்னு தான் ஆசை, ஆனால்அது  மத்தவாளுக்குத் தெரிஞ்சுச்சுன்னா , கோவிந்தா!
அப்டியும் செல சமயம் மனசுக் கேட்காம,'' பிச்சை  எடுத்தான் பெருமாளு, அத்தையும்  புடுங்கினானா  ஹனுமானு''ன்னு துளியுண்டு  கில்லி,விண்டு யாரு அப்ப யானைக்கு ரொம்பக் க்ளோசோ அவாளுக்கு, தலைமேல சத்தியம் பண்ணிக் கொடுப்பேன், அப்பத் தானே நெக்ஸ்ட்  டைம் எனக்கும் கொஞ்சம் கிள்ளி க் கிடைக்கும்!



  பாட்டியோட ரெண்டாவது பொண்ணு, லல்லி, இல்ல மொதல் கொள்ளுப் பேத்தி ராஜி,வேது ,மகேஷ்  பட்டாளத்து பிள்ள சந்துருக்குன்னு எடுத்து வைப்பா, அவா  வரல்லைன்னா ரொம்ப தாராளமா கொடுக்கராமாதிரி கூப்பிட்டுக் குடுப்பா. செல சமயம் சுறு சுறு எறும்போ,பிள்ளையார் எறும்போ வரிசையா பாட்டிக் கப்போர்டு பக்கம் போனாலே, சுனாமி எச்சரிக்கையா எடுத்துண்டு பழியா காத்துண்டு இருப்போம் வயறு நிவாரணத்துக்கு!

அப்பவே எங்களுக்குத் தெரிஞ்சுடும், ஒன்னு பூஞ்சக்காளான் புடிச்சிருக்கு, இல்ல வாசன வந்துடுத்துன்னு .. பாட்டியாவது, தாராளமாவது!



வீணாப்போனாலும் போகட்டும் தனக்குப் பிடிக்காத பேரன் பேத்திக்கோ, பிள்ள மாட்டுப் பொண்ணுக்கோ கொடுக்க மனசே வராது.!ரொம்ப பாரப் பட்சம் பார்த்தப் பாட்டின்னா  அது எங்களோட இந்தப் பாட்டித்தான், ஒருப் பிள்ளைகளாவது அம்மாவைத் தட்டிக் கேட்டதில்லை . அப்டி அவாள் தான் கேட்கலைன்னுட்டு, நாங்கக் கேட்டாலோ சாயங்காலம் எப்ப வரும் ,பிள்ளைகள் அதுவும் கங்கு  எப்ப வருவான்னு காத்துண்டு  இருந்துட்டு, போட்டுக் கொடுப்பா, முக்காவாசி மாட்டிண்டது நான் தான், எனக்கு அன்னிலேருந்தே அநியாயம் பிடிக்காது.

பாட்டி தன மனசுப் போல இருந்ததுனாலே ,நாங்க ஒன்னும் கொறஞ்சுப் போனதில்லே, இப்டி இவளாட்டம் இருக்கக் கூடாதுன்னு ஒரு உறுதி எடுத்துண்டு, தாராளமா, எல்லாருக்கும் கொடுக்கணும்னு இருக்கேன். செலப் பேறப் பாத்து இப்டிதான் இருக்கணும், இப்டி இருக்கக் கூடாதுண்ணு தெரிஞ்சுக்கணும்!
பாட்டிக் கிட்டேருந்து சில நல்ல சமாச்சாரங்களும் கத்துக் கொண்டு இருக்கோம் ஒரு ஹிடன் கரிக்குலம்  மாதிரி ,அதை இன்னிக்கும் பாலோ பண்ணிடு வரோம், அதைப்  பத்தி பின்னாடி போஸ்டிங்க்ளப் பாப்போம் .

No comments:

Post a Comment