Monday, March 10, 2014

கடி ஜோக்ஸ் 78

சேல்ஸ் மேனேஜர்:உங்களுக்கு எதாவதுவிற்பனை அனுபவம் இருக்கிறதா?

இன்டெர்வியுக்கு சென்றவர்

ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் ்னுடையமனைவியின் அனைத்து நகைகளுமேவிற்றிருக்கிறேன்! 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

என்னுடைய அம்மா ஒரு கார்டை வைத்தே
நடக்கப் போவதை சொல்லி விடுவார்கள்!

எப்படி?

ஆம்! என்னுடைய ரேங்க்கார்டைப் பார்த்தே, என்அப்பா வந்து என்னை என்னசெய்யப் போகிறார்
என்பதை சொல்லி விடுவார்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மனைவி: ஏங்க!நீங்களாவது உங்கள் நண்பரிடம்சொல்லக் கூடாதா?அவருக்குப் பார்த்த பெண்
நல்லாவே இல்ல!

கணவன்: நான் ஏன் சொல்லவேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பாபு: என்மனைவி என்னை லச்சாதிபதிஆக்கி விட்டாள்!

கோபு: ம்ம். நீகொடுத்து வைத்தவன்!

பாபு: போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்கபோகணும்?

கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட
போகணும்!
.............................



..தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய்ஒன்று தவறிப் போய்அரண்மனைக்குள் நுழைந்தது. அந்த அறைக்குள் நுழைந்தநாய்க்கு அதிரிச்சி ஏனெனில் சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன.
 சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது,அந்த நூறு நாய்களும் பதிலுக்கு "உர்ர்.. உர்ர்.." என்றது.
அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது இருந்தும் கோபம் தாளாமல் "லொள் லொள்" என குறைக்கஆரம்பித்தது.
எல்லா நாய்களும் சேர்ந்து குறைத்து. 
அந்தநாய் குறைப்பதை நிறுத்தியவுடன்எல்லா நாய்களும்குறைப்பதை நிறுத்திகொண்டது. மறுபடியும் கோபமும் பயமும் அதிகமானது.

உடனே வெறி பிடித்ததை போல்தொடர்ந்து குறைக்கஆரம்பித்தது பதிலுக்கு அந்த நாய்களும்குரைத்தன. இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய்விட்டது.

அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்க்கு புரிந்திருக்கும்.
1. தான் நுழைந்தது நூற்றுக் கணக்கானகண்ணாடிகளை கொண்ட அறை என்று
2. தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள்என்று
3. குறைத்து சுற்றி இருந்த நாய்கள் அல்ல தன்எதிரொலி என்று


நீதி:
இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம்கிடைக்கும். அன்பு செலுத்தினால்அன்பு கிடைக்கும்

...................................................................

திருமண வயதாகியும் ஒரு இளைஞன் எந்தவேலைக்கும் செல்லாமல் சோம்பிக்கிடந்தான். வெறுத்துப்போன அவன்தந்தை கோபமாக ஒரு நாள்,'இன்றிலிருந்துதினசரி நூறு ரூபாய்
கொண்டு வந்தால்தான்உனக்கு சாப்பாடு,''என்றார்.இளைஞன் நொந்து போய்விட்டான்.
என்ன
செய்வது என்று அவனுக்குத்தெரியவில்லை.தாயிடம்புலம்பினான். தாயும் இரக்கப்பட்டு, ''நீ
வெளியில்போய்வா.நான் உன்னிடம் நூறு ரூபாய்தருகிறேன்.நீ அதை அப்பாவிடம்
கொடுத்துவிடு'' என்று சொல்லஅவனும் சம்மதித்தான்.

அன்று நூறு ரூபாயை அப்பாவிடம்
கொடுத்தபோது அவர் அதை வாங்கி,''நீயும் உன் ரூபாயும்,''என்ற கூறி தூக்கி எறிந்து விட்டு இளைஞன் அமைதியாக இருந்தான். 

சிலநாட்கள் இப்படியே போயிற்று.ஒரு நிலையில் தாயிடம் கொடுக்கப்பணமில்லை.சில நாட்கள் கடன் வாங்கிக்கொடுத்தாள் .
ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் தந்தை ,''நீயும் உன்ரூபாயும்,''என்று கூறி விட்டெறிந்து கொண்டிருந்
இப்போது தாய்க்கு கடன் யாரும்கொடுக்கத் தயாராயில்லை. 

மேலும்கொடுத்த பணத்தைக் கேட்க
ஆரம்பித்தனர்.தாய்வேறு வழியில்லாது,''மகனே,இனி நான்செய்வதற்கு ஒன்றுமில்லை.இனி நீ போய்ஏதாவது வேலை செய்து பணம்கொண்டு வருவதைத்தவிரவேறு வழியில்லை.உன் தந்தையும் இவ்விசயத்தில் பிடிவாதமாகஇருக்கிறார்.நான் என்ன செய்ய
முடியும்?என்று கூறி கை விரித்து விட்டார்
வேறு வழியின்றி வெளியே சென்று எந்த வேலையானாலும்செய்து அன்று நூறு ரூபாய்
சம்பாதித்து விட்டான்.அன்று பெருமையாகத் தந்தையிடம்ரூபாயைக் கொடுத்தான்.அன்றும் வழக்கம்போலத் தந்தை,''நீயும் உன்ரூபாயும்,''என்று கூறித்தூக்கி எறிந்தார்.


இளைஞனுக்கு வந்ததே கோபம்!''அவனவன் மூட்டை தூக்கி கல்சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்துக்கொண்டு வந்தால் இப்படித்தூக்கி எறிகிறீர்களே,என்னநியாயம்?''என்று கேட்டான்.தந்தை சிரித்துக் கொண்டே கீழ குனிந்து எறிந்தபணத்தை எடுத்து,அதை முத்தமிட்டு தனதவைத்துக்கொண்டு,''இது என் மகன் உழைப்பில் வந்த பணம்,இனி அவனைப்பற்றி எனக்குக்கவலை இல்லை''என்று கூறி மகிழ்ச்சியு
வெளியே சென்றார்.

...........................................................................................
ஒவ்வொரு ஸ்டேஷன் வந்ததும் அந்த ஆசாமி பெட்டி படுக்கையைச் சுருட்டிக் கொண்டு அவசரமாக இறங்கி பிளாட்பாரத்தில் சற்று நின்று விட்டு, ரயில் புறப்படும்போது மறுபடியும் பெட்டி படுக்கையுடன் அவசரமாக ஏறிக் கொள்வதுமாக இருந்தார். அவரைப் பார்க்க எல்லாருக்கும் பரிதாபமாயிருந்தது. 

"எதற்குப் பாவம் இத்தனை சிரமப்பட்டு ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இறங்கி இறங்கி ஏறுகிறீர்கள். நீங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்ததும் நாங்கள் சொல்கிறோம்" என்றார் ஒருத்தர். 

அவர் சொன்னார் "இறங்க வேண்டிய ஸ்டேஷன் எது என்று எனக்குத் தெரியும். அந்த அளவு முட்டாளல்ல நான். ஆனால், நான் ஒரு ஹார்ட்-பேஷண்ட். 

என் டாக்டர், நீண்ட ரயில் பணம் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். அதனால் பிரேக் பண்ணி பிரேக் பண்ணிப் பயணம் செய்கிறேன்.
.............................

ஒரு பெரிய பணக்காரன் ஒரு பார்ல தண்ணியடிக்க போனான்.,
2 ரவுண்டு அடுச்சு முடிச்சுட்டு,பில் கொடுக்க பர்ஸ எடுத்தான்.,
மறுபடியும் இன்னொரு லார்ஞ் ஆர்டர் பண்ணி குடிச்சான்,
மறுபடி பர்ஸ பாத்திட்டு அடுத்த லார்ஞ் ஆர்டர் பண்ணான்,
திரும்பவும் பர்ஸ் மறுபடியும் ஒரு லார்ஜ்,

சப்ளையர் காண்டாகி,
ஏன் சார் நீங்க எவ்ளவு பெரிய பணக்காரர், நீங்க போயி இப்டி
பர்ஸ் ல எவ்ளவு இருக்கு னு பாத்து சரக்கடிங்கிறீங்களே?

"நான் பர்ஸ் எடுத்தது பணம் எவ்வளவு இருக்குனு பாக்குரதுக்கு இல்ல, ஒவ்வொரு தடவையும் பில் கொடுக்குறதுக்காக தான் பர்ஸ் எடுக்குறேன், எடுக்கும் போதெல்லாம் என் மனைவி போட்டோ தெரியுது., அந்த கடுப்புலயே இன்னொரு லார்ஜ் ஆர்டர் பண்றேன்"

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment