Tuesday, March 11, 2014

அந்த ஒட்டகக்குட்டி தன் தாயிடம் கேட்டது,

அந்த ஒட்டகக்குட்டி தன் தாயிடம் கேட்டது, 
"அம்மா, எனக்கு ஒரு சந்தேகம். நமக்கு ஏன் திமில்கள் பெரிதாக இருக்கின்றன?” 

தாய் ஒட்டகம் சொன்னது, 
"மகனே, அது நாம் பாலைவனத்தில் நெடுந்தொலைவு நடக்க நீர் போறாமல் போகக்கூடாது என்பதற்காக, நீர் சேகரிக்கும் பையாக செயல்படுகிறது.”

ஒட்டகக்குட்டி மேலும் கேட்டது,
"அம்மா, நமக்கு ஏன் கால்கள் இவ்வளவு நீண்டவையாகவும், மொழுக்கென்றும் உள்ளன?”

தாய் சொன்னது,
"மகனே, நாம் பாலைவனத்தில் நீண்ட தூரம் நடக்கவேண்டுமல்லவா? மணலில் நடக்க ஏதுவாக நமது கால்கள் அப்படி அமைந்துள்ளன”

ஒட்டகக்குட்டி மீண்டும்,
“அம்மா, நமது கண் பீலிகள் ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன? சில நேரம் எனது பார்வையை மறைக்கிறது” தாய் சொன்னது,

“நாம் பாலைவனத்தில் நடக்கும்போது, வெப்பக்காற்றிலும், மணற்புழுதியிலும் நமது விழிகளை பாதுகாக்க இவ்வாறு அமைந்துள்ளது."

ஒட்டகக்குட்டி மீண்டும் கேட்டது,
“அப்படி என்றால், நாம் பாலைவனத்தில் இல்லாமல், இங்கே மிருக காட்சி சாலையில் என்ன செய்கிறோம்....??!!

படித்ததில் கண் கலங்கி ரசித்தது !!! 

.............................................
அது குட்டிக் குழ்ந்தைகளுக்கான பள்ளிக்கூடம் (Kindergarten School)
குட்டிக் குட்டிக் குழந்தைகள் தங்களுடைய பிஞ்சு விரல்களால் படங்கள்
வரைவதை, வகுப்பு ஆசிரியை மகிழ்ச்சியுடன் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்.

படம் வரையும் குழந்தைகளின் நடுவே கன்னத்தில் குழிவிழும் அழகான குழந்தை
ஒன்று தன்னை மறந்து மிகவும் சீரியசாகப் படம் வரைந்து கொண்டிருக்கிறது.
அதனருகே சென்ற ஆசிரியை அந்தப் பெண் குழந்தையிடம் வினவுகிறார்:

"என்ன படம்டா வரைகிறாய் ராஜாத்தி?

மழலை பதில் சொல்லிற்று;

"சாமி படத்தை வரைகிறேன் மிஸ்!"

சற்று நிதானித்த ஆசிரியை சொன்னார்," சாமி எப்படியிருப்பார் என்று யாருக்கும்
தெரியாதேடா?"

சட்டென்று யோசிக்காமல் குழந்தை சொன்னது."ஒரு நிமிடம் பொறுங்கள். நான்
வரைந்தவுடன் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்!"

No comments:

Post a Comment