Tuesday, March 11, 2014

திரௌபதி, கர்ணனை விரட்டியடித்த கதை தெரியுமா உங்களுக்கு! – அரிய தகவல்


திரௌபதியின் சுயம்வரத்தை துருபதன் அறிவிப்பச் செய்தியினை கேள்விப்பட்டு, பாண டவர்கள், மன்னன் துருபதனால் ஆளப்படும் தென்பாஞ் சாலத்தைநோக்கி முன்னேறி னர். அப்படி அவர்கள் செல் லும் வழியில் வியாசரைக் கண்டனர்.
முனிவரை முறையாக வண ங்கி, அவரால் கௌரவிக்கப் பட்டு, அவரது உத்தரவின் பேரில் துருபதனின் வசிப்பிடத்தி ற்கு விரைந்தனர். அந்தப்பலம் வாய்ந்த ரத வீரர்கள் வழியில்
அழகான வனங்களையும், தடாகங்களையும் கண்டு அங் கே சிறிது காலம் தங்கி மெது மெதுவா க முன்னேறினர். கல் விக்குத் தங் களை அர்ப்பணித்து, செயல்களில் சுத்தமாக, இனிமையாக, இன்சொ ல் பேசுகிறவர்களான பாண்டவர்கள், கடைசியாக பாஞ்சாலர்களின் நாட்டில் நுழைந்தனர். தலைநகர் காம்பில்யத்தையும் அதன் கோட் டையையும் கண்டு, ஒரு குயவனின் வீட்டில் தங்கினர். இரந்துண்டு வாழும் வாழ்க்கை முறையை அனுசரித்து அந்தணத் தொழிலை க் கைக் கொண்டனர். அந்த துருபதனின் தலைநகரான காம்பில்ய த்தில் யாரும் அந்த வீரர்களை அடையாளம் காணவில்லை.
யக்ஞசேனன் அதாவது துருபதன், தனது மகள் திரௌபதியை பாண்டுவி ன் மகனான அர்ஜுனனுக்கு மணம் முடித்துக் கொடுப்ப தென்ற ஆசையை மனதில் வைத்திருந்தான். ஆனால் இது குறித்து அவன் யாரி டமும் பேச வில்லை.
பாஞ்சால மன்னன்{துருபதன்}, அர் ஜுனனை மனதில் கொண்டு, அர்ஜு னனைத்தவிர வேறு யாராலும் நா ணேற்ற முடியாத ஒரு உறுதியான வில்லைத் தயாரித்தான்.அந்த மன்னன் வானத்தில் ஒருஇயந்திரத்தைச் செய்து, அதில் ஒருகுறியையும் அந்த இயந்திரத்தில் இணைத்தான் . பிறகுதுருபதன,இந்தவில்லில் நாணேற்றி, நன்கு அலங்கரிக்கப்பட்ட இந்தக் கணைக ளை க் கொண்டு மேலே இந்த இயந்திரத்தில் இருக் கும் குறியை அடிப்பவ ன் எனது மகள் திரௌப தியைப் பெறுவான்” என்றஅறிவிப்புடன் துரு பதன் சுயம்வரத்தை அறிவித் தான்.
இந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்ட மற்ற நாட்டு மன்னர்கள் இந்த சுயம்வரத்திற்கு வந்தனர். மேலும் சிறப்பான சுயம்வரத்தை பார்வையிட முனிவர்களும் வந்தனர்.
அங்கே, துரியோதனனும், கௌரவ ர்களும் கர்ணனை அழைத்துக் கொ ண்டு வந்தனர். அங்கே பலமேன் மைமிகு அந்தணர்கள் பலநாடுகளி ல் இருந்தும் வந்திருந்தனர். அங்கு வந்திருந்த ஏகாதிபதிகள் அனைவ ரும் சிறப்பு மிகுந்த துருபதனால் நன்கு மதித்து வரவேற்கப்பட்டனர். சுயம்வரத்தைக் காண விரும்பிய குடிமக்கள், கடல் என ஆர்ப்பரித்து, அந்த அரை வட்ட அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மேடைகளில் அமர்ந்தன ர். அந்த ஏகாதிபதியான‌ துருபதன்,அந்தப் பெரிய அரங்கி னுள் வடகிழக்கு வா யில் வழியாக வந்தா ன். பல அழகிய அ றைகளுடன் இருந்த அந்த அரங்கமே துரு பதன் தலைநகர மான காம்பில்யத்திற்கு வ டகிழக்கில் சமதளமா ன தரை கொண்ட ஒரு அதிர்ஷ்டமான இடத்தைத் தேர்ந்தெ டுத்து அதி ல்அமைக்கப்பட்டது.
அந்த‌ அரங்கினுள் பாண் டவர்களும் நுழைந்தனர். அவர்கள் அந்தணர்களுட ன் அமர்ந்து பாஞ்சால ம ன்னனான‌ துருபதனின் ஒ ப்பற்ற செழுமையைக் கண்டனர். துருபதனின் மகள் தி ரௌபதி, தன்னை சுத்திகரித்துக் கொண்டு, அந்தஅரைவட்ட அரங்கினுள் நுழைந்தாள். அவள் விலை மதிப்பற்ற ஆடைக ளும், அனைத்து ஆபரணங்களும் பூண்டிருந்தாள். தனது கர ங்களில் ஒரு தங்கத் தட்டையும் மலர் மாலையையும் வைத்திருந்தாள். பிறகு அந்த சந்திர குலத்தின் புரோகிதரான மந்திரங்கள் அறிந்த ஒரு அந்தணர், வேள்வி நெருப்பை மூட் டி, சுத்திகரிக்கப்பட்ட நெய்யை ஊற்றிக் கொண்டிருந்தார்.
அப்படி நெய்யை ஊற்றி அக்னி யைத் திருப்திப்படுத்தி, மற்ற அந்த ணர்களை அதிர்ஷ்ட சூத்திரங்க ளை உச்சரிக்க வைத்து, சுற்றிலும் இசைக்கப்பட்ட இசை வாத்தியங்களை நிறுத்தினார். ஓ ஏகா திபதியே {ஜனமேஜயனே}, அந்த அரங்கமே அசை வற்று அமைதியானது. மேகத்தைப் போன்ற ஆழ்ந்த குரலுடைய திருஷ்டத்யும் னன் தனது தங்கை திரௌபதியின் கரம் பற்றி அந்தக் கூட்டத்திற்கு நடு வில் நின்றான். அப்படி நின்று சத்தமான குரலில், மேகத்தின் கர்ஜனைப் போல, அழகான வார்த்தைகளில் சிறந்த முறையில் பேசினான். அவன், “கூடி யிருக்கும் மன்னர்களே கேளுங் கள். இதுதான் வில், இதுதா ன் குறி, இவைதான் கணைகள். இந்த ஐந்து கணைகளால், அதோஅந்த இயந்திரத்தில் இரு க்கும் துளையின் வழியாக, அதற்கு அப்பால் இருக்கும் குறி யை அடிக்க வேண்டும். உண் மையாகச் சொல்கிறேன் நல்லகுலத்தில் பிறந்து, அழகுடன் கூடி பலம் கொண்ட எவரும், இன்று இந் த அருஞ்செயலைச் சாதித்து, எனது தங்கை திரௌபதியைதனது மனை வியாக அடையலாம்,” என்றான். கூடியிருந்த ஏகாதிபதிகளிடம் இப்ப டிச் சொன்ன துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன், தனது தங்கை திரௌபதியிடம், அங்கே கூடியிருந்த பல நாட்டுத் தலைவர்களின் பெயர், குலம் மற் றும் சாதனைகளைச் சொன்னான்’ திருஷ்டத்யும்னன்
அங்கு வந்திருந்த இள மையான இளவரசர்கள், ஒருவருக் கொருவர் மே லோங்கும் வகையில் த ங்களை, ஆயுத சாத னை செய்தவர்களாகவும், பெ ரும் பலத்தைக் கொடை யாகக் கொண்டிருப்பதா கவும் நினைத்துக் கொ ண்டு, தங்கள் ஆயுதங்களைச் சுழற்றிக் கொண்டு எழுந்தனர். அவர்கள் தங்கள் அழகிலும், வீரத்திலும், குலவழியிலும், அறிவிலும், செல்வத்திலும், இளமையிலும் கர்வம் கொண் டு, இமயத்தின் மதம் பிடித் த யானைகளைப் போல இருந்தனர். ஒருவரை ஒ ருவர் பொறாமையுடன் பார்த்து, காமதே வனின் வசப்பட்டு, “கிருஷ்ணை எ ன்கிற திரௌபதி எனக்கே சொந்தம்” என்று சொல்லி க்கொண்டு தங்கள் அரச ஆசனங்களில் இருந்து திடீரென எழுந்தனர். க்ஷத்திரியர்கள் ஒவ்வொருவரும் துருபதனின் மகள், திரௌபதியை வெல் லும் விருப்பத்தோடு, மலை களின் அரசன் மகள் உமாவைச்சூழ்ந்து நிற்கும் தேவர்கள் போல அந்த அரங்கத்தில் கூடியிருந்தனர். மலர்க ளால் ஆன வில்லைக் கொண்டிருக்கும் தே வன் மன்மதனின் கணைக ளால் தாக்கப்பட்டு, கிரு ஷ்ணை யின் நினைவால் இதயத்தை த் தொலைத்த அந்த அரங்க த்திலிருந்த இளவரசர்கள், அந்தப்பாஞ்சாலமங் கை திரௌபதியை வெல்வதற்காகத் தங்கள் சிறந்த நண்பர் களைக் கூட பொறாமையுடன் கண்டனர். ருத்ரர்கள், ஆதித் யர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள் , ஸ்வதர் கள், மரு தர்கள் கூடி வர, குபேரனும் யமனும் முன் னணியில் நடக்க, தேவர்க ள் தங்கள் ரதங்களில் அந்த இடத் திற்கு வந்தனர். அங்கே தைத்தியர்கள், சுபர் ணர்கள், நாகர் கள், தெய் வீக முனிவர்கள், குஹ்யர் கள், சாரணர்கள், விஸ் வவசுக்கள், நாரதர், பர்வதர், அப் சரஸ்களுடன் கூடிய முக் கிய கந்தர்வர்களும் அங்கே வந் தனர்.
ஹாலாயுதன், பலராமன், கிருஷ்ணன் மற்றும் மற்ற யாதவ குல தலைவர்கள், அந்தகர்கள் மற்றும் கிருஷ்ணனின் தலை மையை ஏற்ற மற்ற யாதவ குடிகளும் அந் தக் காட்சியைக் கண் டு அங்கே இருந்தனர். திரௌபதியால் ஈர்க் கப்பட்ட ஐந்து பாண்ட வர்களும் மதம் பிடித்த யானைகளைப் போல அமர்ந்திருந் தனர். தாமரைகளால் நிறைந்த தடாகம் போலவும், சாம்ப லால் மூடப்பட்ட நெருப்பு போலவும் இருந்த அந்தப் பாண்ட வர்களைக் கண்ட ‘யது’குல வீரர்களில் முதன்மையா ன கிருஷ்ணன் சிறிது நேரம் சிந்தித்தான். பிறகு ராமனிடம் பல ராமன், “அது யுதிஷ்டிரன், அது பீமன், அது அர்ஜுனன்; அது அந்த இரட்டையர்கள்,” என்று கிருஷ்ணன் சொன்னான். பலராமன் மெதுவாக அவ ர்கள் அனைவரையும் ஆ ய்ந்து, திருப்தியான கண் ணோட்டத்துடன் கிருஷ் ணனைக் கண்டா ன்.
மற்ற மன்னர்களின் மகன் களும், பேரன்களும், கோ பத்தில் தங்கள் உதடுக ளைக் கடித்துக் கொண்டு, கண்களும், இதயங்களும், நினைவுகளும் கிருஷ்ணை என் கிற‌ திரௌபதியின் மேல் நிலைத்திருக்க, அங்கிருந்த பாண் டவர்களைக் கவனி யாமல், தங்கள் கண்களை அகல விரி த்து திரௌபதியை மட்டும் கண்ட னர். பலம் பொருந்திய கரங்களு டைய பிருதையின் மகன்களான‌ யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், அந் த சிறப்பு மிகுந்த இரட்டை வீரர்க ளான‌ நகுலன், சகாதேவனும், தி ரௌபதியைக் கண்டு, காமனின் க ணையால் அடிக்கப்பட்டிருந் தனர்.
தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்க ள், சுபர்ணர்கள், நாகர்கள், அசுரர் கள், சித்தர்கள் கூடியிருக்க, தெய் வீக மலர்கள் தூவி, தெய்வீக நறு மணம் வீச, மேளத்தின் ஓசையும், கணக்கற்ற மனிதக் குலர் களும் ஒலிக்க, புல்லாங்குழலின் அமைதியான இசை எதி ரொலிக்க, வீணை மற்றும் சிறு முரசின் இசை அந்த சுற்று வட்டாரத்தையே நிரப்ப தேவர்களின் ரதம் உள் ளே நுழைவ தற்கு இடமில்லாமல் இருந் தது. பிறகு, கர்ணன், துரி யோதனன், சால்வன், சல்ய ன், அஸ்வத்தாமன், கிரதன், சுனிதன், வக்ரன், கலிங்க மன்னன், பங்கன், பாண்டிய ன் {பாண்டிய மன்னன்}, பௌந்தரன், விதேக மன்ன ன், யவனர்கள் தலை வன், மற்றும் மற்ற மன்னர்களின் மகன்களும் பேரன்களுமான தாமரைக் கண் கொண்ட அந்த அரசுரிமை பெற்ற இளவரசர்கள், ஒருவர் பின் ஒருவராக, அந்த ஒப்பற்ற அழகுடைய மங்கையை அடைய தங்கள் வீரத்தைக் காண்பிக்கத் துவங்கினர். கிரீடங்களாலும், மாலைகளாலும், கை வளையங்களாலும், மற்ற ஆபரணங்க ளாலும், அலங்கரிக்க ப்பட்டு, பெரும் பலத்துடனும், பெரும் வீரத்துடனும் இருந்த அந்த இளவரசர்கள், தங்கள் பலமும் சக்தியும் வெடித்துச் சிதற முயற்சித்தாலும், கற்பனையில் கூட அந்த இயல்புக்கு மிக்க உறுதியுடைய வில்லுக்கு நாணேற்ற முடியவில்லை.
“அந்த மன்னர்களில் சிலர், தங்கள் பலம், கல்வி, நிபுணத்துவம், சக்தி ஆகியவற்றை உபயோகப்படுத்தி தங்கள் உதடுகள் வீங்க அந்த வில்லுக்கு நாணேற்ற முயன்றனர். ஆனால், அப்படிச் செய்த அவர்கள் த ரையில் தூக்கி வீசப்பட்டு, சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தனர். தங்கள் சக்தி வி ரையமாகி யதால், தங்கள் கிரீடங்களும் மாலைகளும் நழுவ, பெரு மூச்சு வாங்கி, இனி தங்களால் அந்த அழகான மங்கை யை வெல்ல முடியாது என்று சாந்த மடைந்தனர். அந்த கடினமா ன வில்லால் தூக்கி விசப்பட்டு, மாலைகளும், கை வளையங்களும் கலைந்து அவர்கள் பெ ரும் துயர் கொண்டனர். அங்கே கூடியிருந்த ஏகா திபதிகள் கிருஷ்ணை என்கிற‌ திரௌபதியை அடையும் நம்பிக்கை இல்லாமல், துக்கத்து டன் இருந் தனர். அந்த ஏகா திபதிகளின் துயரைக் க ண்ட வில்லைச் சுமப்பவ ர்களில் முதன்மையான கர்ணன், அந்த வில்லிருக்கும் இடத் திற்குச் சென்றான். அவ்வில்லை விரைவாகத் தூக்கி, நா ணேற்றி, அந்நாணில் கணை களைப் பொருத்தினான். சூரிய னின் மக னும், சூத குலத்தைச் சேர்ந்தவ னுமான கர்ணன் நெ ருப்பைப் போல அல்லது சோம னைப் போல அல்லது சூரிய னே வந்தது போல, அந்தக் குறி யை அடிக்கத் தீர் மானித்ததை க் கண்ட வில்லாளிகளில் முத ன்மையா னவர்களான பாண்டு வின் மகன்கள், அந்தக் குறி அடிக்கப்பட்டு, தரையில் விழுந்ததாகவே நினைத்தனர். ஆ னால், கர்ணனைக் கண்ட திரௌபதி சத்தமாக, “நான் ஒரு சூதனை எனது தலைவனாக ஏற் றுக் கொள்ள மாட்டேன்.” என்றா ள். இதைக்கேட்ட கர்ணன், எரிச்ச லுடன் சிரித்து, மேல்நோக்கிச் சூரிய னைப் பார்த்து, வட்டமாக வளை க்கப்பட்ட வில்லை ஒரு புறமாகத் தூக்கி ஏறிந்தான். பிற கு பல க்ஷத்திரியர்களும் அந்த சாதனையைக் கைவிட்ட பிறகு, தம கோசனின் மகனான, யமனு க்கு ஒப்பான அந்த சிறப்பு மிகுந் த சேதி நாட்டு மன்னன் சிசு பால ன், வீரத்து டன் உறுதி பூண்டு, அந்த வில் லுக்கு நாணேற்றும் பெருமுயற்சியில், முழங்கா ல் மடிந்து பூமியில் விழுந்தான். பெரும் பலமும் சக்தியும் கொண்ட மன்னன் ஜராசந்தன், அந்த வில்லை அணுகி அங்கே சிறிது நேரம் அசை வற்ற மலைபோல நின்றான். அவ னும் அந்த வில்லால் தூக்கியெறிய ப்பட்டு, மு ழங்கால் மடிந்து தரை யில் விழுந்தான். அப்படி விழுந்த அ வன், விரை வாக எழுந்து அந்த அர ங்கத்தை விட்டு வெளி யேறி தனது நாட்டுக்கு சென்றுவிட்டான். பிறகு மத்ர மன்னனான பெரும் வீரன் சல் யன், பெரும் பலத்தைக் கொண்டு, அந்த வில்லின் நாணை யேற்ற பெரும் முயற்சி செய்து முழங்கால் மடிந்து தரையில் விழுந் தான். கடைசியாக, உயர்ந்த மதிப்பிற்குரி ய பலர் கூடியிருந்த அந்த சபையில், வீரர் களில் முத ன்மையான அனைத்து மன்னர் களும் ஏள னப் பேச்சுக்கு உள்ளானபோது, குந்தியின் மகனான அர்ஜுனன், அந்த வி ல்லில் நா ணேற்ற விரும்பி, அந்த இடத் தில் மலை யைப் போல நின்றான். அந்த வில்லை வலம் வந்து வரம் அருளும் ஈச னனை வணங்கி, மனதில் கிருஷ்ணனையு ம் நினைத்துக் கொண்டு வில்லைக் கை யிலெடுத்து கண் இமைப்பதற்குள் நாணேற்றினான். அங் கே இருந்த ஐந்து கணைகளையும் எடுத்து, குறியை அடித்து, அக்குறியை இயந்திரத் தின் துளை வழியாகத் த ரையில் விழ வைத்தான்.
அர்ஜுனன் அந்த குறியை அடித்ததைக் கண்ட கிருஷ்ணை என்கிற திரௌபதி மிகவும் மகிழ்ச்சியுற்று, வெள்ளுடை அணிந்து, மலர் மாலையுடன் அந்தக் குந்தியின் மகனை அணுகி னாள். செயற்கரிய சாதனை புரிந்து திரௌபதியை வென் று, அரங்கத்தினுள் வெற்றி யுடன் இருந்த அர்ஜுனனை அனைத்து அந்தணர்களும் வாழ்த்தி வணங்கினார்கள். தனக்கு மனைவியானவள் மிக நெருக்கமாகத் தொடர, அவன் வேகமாக அந்த இட த்தைவிட்டுச் சென்றான். -

No comments:

Post a Comment