கட உபநிஷத் - மரணத்திற்கு பின்னால்.
கட உபநிஷத் முதல் பதிவு
கட உபநிஷதம் பதிவு ஆரம்பிக்கும் முன்னால் முழு முதற் கடவுள் விநாயகரை தாழ் பணிந்து, பரம் பொருளின் தத்துவத்தை மனதினில் கொண்டு ,பரம் பொருளை வணங்கி ,நடமாடும் தெய்வமான காஞ்சி மகானின் பாதம் பணிந்து,எல்லாம் வல்ல இறைவனும், உமையை இடப்பாகம் தாங்கியவனும், தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாதவனுமாகிய சிவபெருமானின் அருட்பெரும் கருணையுடன் கூடி, அந்த நிர்குண பர ப்ரஹம ஸ்வரூபத்தை மனதினில் நிறுத்தி, எளிதாக எனக்கு தெரிந்த நடையில் கூடியவரை தமிழ் பேசும் ஆன்மீக அன்பர்கள் புரிந்து கொள்ளக்கூடிய நடையில் இந்த கட உபநிஷத் பதிவுகளை பதிவு செய்ய தொடங்குகின்றேன். மிகவும் உயரிய ஆழமான ஆன்மீக, சித்தாந்த , வேதாந்த கருத்துகளை கொண்டது. இதை படிக்க, புரிந்து கொள்ள பொறுமை மிகவும் தேவை. மற்ற பதிவுகளை, நூல்களை போன்று படித்தால் புரிவது போன்று தோன்றும் ஆனால் மனதினில் பதியாது.உபநிஷதம் என்பது என்னுடைய சொந்த பொக்கிஷம் அல்ல, பல நூல்களின் தொகுப்பே,ஏதாவது தவறு இருப்பின் அடியேனுடையதேயன்றி வேறு யாரோடுடையதும் அல்ல.
உபநிஷத நூல்கள் தெய்வீக ஞானத்தை நம் உள்ளத்தில் புகுந்து தமிழில் வெளிக்கொணர்கின்றன.
கட உபநிஷத் படிப்பதற்கு முன்பு உபநிஷத் என்றால் என்ன, அது எத்தனை வகை படும் மற்றும் அவைகளை பற்றி சிறு துளிகள் என்று எல்லாம் தெரிந்து கொள்வோம்.
“வேத காலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்” என்று நூல்களின் முன்னுரை கூறுகிறது.
பன்னரும் உபநிஷத நூலெங்கள் நூலே
பாரினில் ஏதொரு நூல் இது போலே?
என்று வியந்தார் மகாகவி பாரதி. சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஸ்ரீ அரவிந்தர், ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஷோபன்ஹேர், அறிவியல் அறிஞர் ஜகதீஷ் சந்திர போஸ், ஓஷோ ரஜனீஷ் போன்று பல்வேறுபட்ட சிந்தனையாளர்களும் உபநிஷதங்களின் சிந்தனைச் செறிவு பற்றிக் கூறிச் சென்றிருக்கிறார்கள் என்பதே இதற்குச் சான்று.
“உபநிஷத்” என்ற சொல்லுக்கு அருகில் அமர்தல் என்று பொருள். குருவும் சீடனுமாக அருகமர்ந்து ஞானத் தேடல்களை முன்னெடுத்துச் சென்ற வேத ரிஷிகளின் அனுபூதியில் வெளிப்பட்ட நூல்களே உபநிஷதங்கள். பின்னர் இவை தொகுக்கப் பட்டு ஞான காண்டம் என்று வழங்கும் வேதப் பிரிவாக ஆயின. அடிப்படையில் இவை அற்புதமான கவிதைகள் - பெரும்பாலான உபநிஷதங்களின் நடையும் கவிதை மொழியிலேயே உள்ளது.
வேதாந்த தத்துவ மரபின் அறுதிப் பிரமாணமாக அமைந்த பிரஸ்தானத் திரயம் என்ற மூன்று நூல்களில் உபநிஷதங்களே முதன்மையானவை (மற்ற இரண்டு பகவத்கீதை, பிரம்ம சூத்திரங்கள்). வேதாந்த தத்துவம் முகிழ்ச்சியடைந்த நிலையில் கீதையில் வெளிப்படுவதாகவும், அதன் பரிணாம வளர்ச்சியை (evolution) உபநிஷதங்களின் வாயிலாகவே அறிய முடியும் என்றும் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். உபநிஷதங்களின் மேன்மையைத் தன் ஆழ்ந்த உரைகள் மூலம் வெளிக்கொணர்ந்து, அவற்றை வேதாந்த ஞான மரபின் மூல நூல்களாக்கியவர் சங்கரர். அவரைத் தொடர்ந்து வேதாந்த தேசிகர், மத்வர் உள்ளிட்ட பற்பல வேதாந்த ஆசாரியார்களும் தங்கள் தத்துவப் பிரிவுகளை நிலைநாட்டும் விதமாகப் பல்வேறு உரைகளை எழுதிச் சென்றிருக்கிறார்கள்.
“வேதத் திருவிழியாள், அதில் மிக்க பல் உரையென்னும் கரு மையிட்டாள்”
என்று கலைமகள் துதியில் பாரதி கூறுகிறார். அளவோடு இடும் கண்மை கண்களின் அழகை எடுத்துக்காட்டும், ஆனால் அதிகமாகிவிட்டாலோ கண்களை பயங்கரமாக்கி விடும் அல்லவா? நம் வேதநூல்கள் விஷயத்திலும் இது பொருந்தும் என்று உணர்த்தவே பாரதி இப்படிப் பாடியிருக்கலாம் என்று தோன்றுகிறது!
உபநிஷதங்களுக்கு எழுதப்பட்ட மரபு சார்ந்த உரைகள், பெரும்பாலும் தத்துவச் சிக்கல்களையும், சிடுக்குகளையுமே முன்னிறுத்தி எழுதப் பட்டன. அதனால், பல இடங்களில், இயல்பாகவே பொருள் விளங்கும் மந்திரங்கள் கூட சுற்றி வளைத்து வரும் தர்க்கம் (convoluted logic) மூலம் உரை எழுதுபவரது தர்க்க வலைக்குள் சிக்க வைக்கப் பட்டன. “த்வைதத்திலிருந்து அத்வைதம் வரை எல்லா விதமான படிப்படியான தத்துவங்கள், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் முதலிய யோகங்கள் எல்லாமே உபநிஷதங்களில் இருக்கின்றன. மேலும், இவை அனைத்திற்குள்ளும் இழையோடிக் கொண்டிருக்கும் ஒருமையும் உபநிஷங்களில் இருக்கிறது” என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.
மரபு சார்ந்த உரைகளில் ஒன்றிரண்டைக் கூடப் படித்து ஒப்பு நோக்குவது என்பது எந்தக் கொம்பனையும் அயர வைக்கும் சமாசாரம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் வரும் முழு நேர தர்க்க சாஸ்திரிகளுக்கு வேண்டுமானால் அது சாத்தியமாகலாம். ஆனாலும், எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும், ஆராய வேண்டும் என்ற தளையற்ற ஞானத் தேடலை முன்னெடுத்துச் செல்ல இந்த எல்லா உரைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் முக்கியமான வரலாற்றுத் தேவை இருக்கிறது என்றே கருதுகிறேன்.
பல்வேறு பட்ட பணிகளுக்கிடையிலும் உபநிஷதங்களைக் கற்க முயன்று கொண்டிருக்கும் என் சொந்த அனுபவத்தில் உபநிஷத்துகளின் மையக் கருத்துக்களுக்கு நேராகச் செல்லும் உரைகளே தொடக்கத்தில் பெரிதும் துணை புரிந்தன. ஓரளவு சம்ஸ்கிருத ஞானம் இருந்ததால் பல மந்திரங்களின் பொருளை ஆரம்ப தளத்தில் உணர்ந்து அனுபவிப்பதற்கு எளிய பொழிபெயர்ப்புகளே போதுமானதாக இருந்தன. ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி ப்ரபவானந்தர், சுவாமி கம்பீரானந்தர் முதலியோரது ஆங்கில உரைகள் முதன்முதலாக உபநிஷதம் படிப்பவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டவை.
சுவாமி ஆசுதோஷானந்தரின் எழுதிய தமிழ் உரைகளும் அதே வகையைச் சார்ந்தவை. “தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளாமல் இறைவன் என்ற மாபெரும் சக்தியிடம் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுக்கப் பட்டுள்ளது… இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை” என்று முன்னுரையிலேயே இதைச் சொல்லி விடுகிறார். தமிழில் இதற்கு முன் வெளிவந்த உபநிஷத மொழியாக்கங்கள் பெரும்பாலும் வைதீக தமிழ் நடையிலேயே இருந்தன (“அண்ணா” உரை எழுதி ரா.கி. மடம் வெளியிட்ட பழைய “உபநிஷத் ஸாரம்” நூல்கள் ஒரு உதாரணம்). சம்ஸ்கிருத சொற்பிரயோகம் மட்டுமல்ல, பொருளை விளக்கும் முறையிலும் வைதீக தமிழ் நடை ஒரு குறிப்பிட்ட அமைப்பைப் பின்பற்றும். ஆனால், இந்த நூல்களின் தமிழ் நடை ஒரு சராசரி தமிழ் வாசகனை மனதில் கொண்டிருக்கிறது. பொருள் விளக்கங்களும் தெளிவான, அச்சுறுத்தாத மொழி நடையைப் பின்பற்றுகின்றன.
சுவாமி ஆசுதோஷானந்தரின் ஒவ்வொரு உபநிஷத நூலின் முன்னுரையிலும் உபநிஷதங்கள் பற்றிய பொது அறிமுகம் இணைக்கப் பட்டுள்ளது. அது தவிர, குறிப்பிட்ட உபநிஷதம் பற்றிய சிறப்பு அறிமுகமும் தரப்படுகிறது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் சம்ஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், பொழிப்புரை, திரண்ட பொருள் விளக்கம் என்ற ரீதியில் நூல் அமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு உபநிஷத நூலையும் தனித் தனியாகப் படிப்பதற்கும் இது ஏதுவாகும்.
உபநிஷதங்கள் 108 என்று சம்பிரதாயமாக அறியப்பட்டாலும், வேதாந்த தத்துவத்தில் “முக்கிய உபநிஷதங்கள்” என்று அறியப்படுபவை 10. இவற்றில் 8 உபநிஷதங்கள் இந்த வரிசையில் வெளிவந்துள்ளன.
பிறப்பும் மரணமும் வாழ்வில் இரண்டு புதிர்கள். பிறப்பு நம் வாழ்வில் நடந்துவிட்ட ஒன்று. எதிர்பார்த்துக் காத்திருக்கும் மற்றொரு புதிர், மரணம். மரணம் என்றால் என்ன? அப்போது மனிதனுக்கு என்ன நடக்கிறது? அதன்பின் ஜீவன் எதை அடைகிறது? இந்த மூன்று கேள்விகளுக்கும் ‘ஜீவனின் கதாகதி’ என்ற நூலில் சாஸ்திரங்களை நன்கு அறிந்தவர் எழுதியுள்ளார். கட உபநிஷத்தில் மரணத்தின்போது என்ன நடக்கிறது என்பது பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் முடிவே மரணம் என நாம் அறிந்து, இனி பிறப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதையே சாந்தோக்ய உபநிஷதம் முதலான வேதாந்த நூல்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆன்மா (உயிர்) வாழும் வீடான உடம்பும் உள்ளே உறைகின்ற ஆன்மாவும் (உயிர்) பல உடல்களை அடைகின்றன. ஆனால் உயிரை அலைய விடாமல் தவிர்த்து ஒரே இடத்தில் நிலை நிறுத்த நாம் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக, ‘நானும் பரமாத்மாவும் ஒன்றுதான். நானே பரமாத்மா, பரமாத்மாவே நான்’ என்கிற அனுபவம் வருவதற்காக வேதாந்த நூல்களில் மனதை ஈடுபடுத்த வேண்டும். இந்த நிலை வருவதற்காக மனிதன் வாழ வேண்டிய முறைகளை அனைத்து மதங்களும் கூறியுள்ளன. இறை நெறியை நாம் பற்ற சில அடிப்படைத் தேவைகள்:

1. சிரத்தை
2. சுயமதிப்பு
3. உண்மையை ஏற்றுக் கொள்ளல்
4. துணிச்சல்
5. ஆசை இன்மை
6. தாய், தந்தை, குரு மூலம் ஆசிகள்
7. மன உறுதி
8. நல்லொழுக்கம்
9. புலனடக்கம்
10. மனஒருமைப்பாடு
11. பரபரப்பின்மை
12. பேச்சுக் கட்டுப்பாடு.
இப்படியாக உடல் வேறு ஆன்மா என்கிற தத்துவத்தை குரு மூலமாக தக்க சாதனைகளை மேற்கொண்டு முழு முயற்சியுடன் இதயத்தில் மிளிரும் ஆத்ம ஜோதியை அகக் கண்ணினால் கண்டு ‘பரமாத்ம சொரூபம் நானே. நான்தான் பரமாத்மா’ என்ற உண்மையைப் பெற வேண்டும். இவை ஒரு பிறவியில் பெற முடியாதவை.
‘‘பஹுனாம் ஜன்மனாம்
அந்தே
ஞானவான் மாம் ப்ரத்யதே’’
என்கிற பகவத்கீதையின் வாக்குப்படி பிறப்பு, இறப்பு இரண்டிலிருந்தும் விடுபடும் முக்திப் பேற்றை அடைய வேண்டும். இதற்கு இறையருளும் கைகூட வேண்டும்.
No comments:
Post a Comment