Sunday, March 9, 2014

கடி ஜோக்ஸ் 73

 12. கொலுசு போட்டா சத்தம் வரும். ஆனா, சத்தம் போட்டா கொலுசு வருமா ? 13. பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது. இதுதான் உலகம் 14. T Nagar போனா டீ வாங்கலாம். ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா? 15. என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது . 16. இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு. அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது, பூமில ஸ்ட்ரா போட்டு உறிஞ்சவும் முடியாது. 17. உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது. 18. ஓடுற எலி வாலை புடிச்சா............. நீ கிங்கு. ஆனா......... தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு. 19. நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம். ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது. 20. வண்டி இல்லாமல் டயர் ஓடும். ஆனால்............ டயர் இல்லாமல் வண்டி ஓடுமா? சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங்கா ? 21. என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewind லாம் பண்ண முடியாது. 22. "Tea"க்கும் "Coffee"க்கும் என்ன வித்தியாசம்?........ "Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும். 23. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும், அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
____________________________________________________


பையன்: பாட்டி! நா ஓட்ட

பந்தயத்தில கலந்துக்க
போறேன். ஆசீர்வாதம்
பண்ணுங்க!
பாட்டி:
பார்த்து மெதுவா ஓடுப்பா.
.. வேகமா ஓடி கைய கால
ஒடிச்சிக்காதே!!

.................................

மனைவி : நமக்கு கல்யாணம்
முடிஞ்சி இன்னியோட
பத்து வருசம் ஆகுது?
கணவன் : எனக்கு அதெல்லாம்
மறந்து போச்சு.
மனைவி : இது கூடவா?
கணவன் : ஆமாண்டி, நல்ல
விசயங்களை மட்டும் தான்
நான் ஞாபகம் வச்சிக்குவேன்.

...................

பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்
"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.
"சொல்லுங்க ... தெரிஞ்சிக்கிறேன்"
"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."
"ம்ம்ம்ம்"
"முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ... இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"
"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
"என்ன?"
"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??" 

..................

டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
எந்த பாட்டுக்கு?
ஆஸ்பத்திரிக்கு எப்படி
போகணும்?
நோயோடதான்!

..........................
ஒரு வீட்டில் திருட சென்ற வடிவேலு !....எல்லாம் 
திருடி மூட்டை கட்டும் நேரத்தில் !...அந்த வீட்டின் 
10 வயது பையன் ..எழுந்து விட்டான் !
அதைக் கண்டு பயந்த வடிவேலுவிடம் 
அந்த பையன் 
''மரியாதையா என்னோட ஸ்கூல் பேக்கையும்
மூட்டை கட்டி எடுத்துட்டு போ !.........
இல்லையன்னா....சத்தம் போட்டு எல்லாரையும்
எழுப்பிடுவேன் ''

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு இளைஞன், சாலையில் நடந்து போன அழகான பெண்ணைப் பார்த்தபடி நடந்து போய்க் கொண்டிருந்த சாலையில் படுத்துக் கிடந்த கழுதை மீது இடறி விழுந்து அதன் காலுக்குக் கீழே போய் விழுந்தான்.

இதைப் பார்த்த அந்தப் பெண் அந்த வாலிபனை நெருங்கி, என்ன தம்பி உங்க அண்ணன்கிட்ட ஆசிர்வாதம் வாங்குறியா என்று கேட்டாள். 

அதைக் கேட்ட அவன் சொன்னான்... ஆமா, அண்ணி...!! ...
......................

..ஒருவர்: ''சினிமா நடிகைங்க மார்க்கெட் போனா என்ன செய்வாங்க?''

மற்றவர்: சம்பளத்தை குறைப்பாங்க! இல்லைன்னா சினிமாவில் இருந்து சீரியலுக்கு தாவிடுவாங்க!

ஒருவர்: அதெல்லாம் இல்லை காய்கறி வாங்குவாங்க!...
..........

டாக்டர் : தினமும் காலையில வெறும் வயித்துல அரை மணி நேரம் நடந்தா உங்க வெயிட் குறைஞ்சிடும். 

பேஷண்ட் : யார் வயித்துல டாக்டர் நடக்கணும்? ..
.............................

"இந்த புடவைய பில் போடுங்க ?""

"1500 ரூபாய் மேம்""

"30 % discount போட்டிருக்கே?"

"ஆமாம் ..sorry 1050 ரூபா..

"HDFC crdit card ல இன்னொரு 10 % extra போடுவீங்க இல்ல?"

"ஆமாம் இருங்க கால்குலேட் பண்றேன். 945 ரூபாய்"

"இந்தாங்க போன தடவ நீங்க குடுத்த ரூ 200 gift voucher ...இரண்டு கூப்பன் இருக்கு.இப்ப சொல்லுங்க."".

"இருங்க..ம்ம்..945-400 = 545 ரூபா..."

"Regular Customer purchase points ல இன்னும் எவ்ளோ குறையும்?"

"ம்ம் இருங்க உங்க ஃபோன் நம்பர் தாங்க...பார்துட்டு சொல்றேன்..இன்னும் 250 ரூபா குறையும்...அப்ப 545-250 = 295 ரூபா..pay just Rs 295 /-"

"ம்ம் ... 295 ரூபா புடவைய 1500 க்கு விக்கறீங்க இல்ல?.. இத வாங்கிட்டு போக நான் என்ன லூசா? ..போ..ய்..யா"

.........

மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?

கணவன்: என்னம்மா விஷயம்?

மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்

கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மாவிடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
............................
கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன்,

மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான்.

தூக்குக்கயிறு, விஷம், துப்பாக்கி, கத்தி போன்றவற்றை முன்னே வைத்துவிட்டு எதை வைத்து உயிரைப் போக்கிக் கொள்வது என்று குழப்பத்தில் இருந்தவனைப் பார்த்து,

கடைசி பையன் கேட்டான்:

"அப்பா சாவதற்கே இத்தனை வழி இருக்கும்போது பிழைப்பதற்கு ஒரு வழி இருக்காதா?"
........................

கணவன் : இனி நான் இன்று முதல் ஹோட்டலில் சாப்பிட போறது இல்லை.. என்ன ஆனாலும் நீ சமைக்கற வீடு சாப்பாடு தான் சாப்பிடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..

மனைவி : தினமும் ஹோட்டல் சாப்பாடு தான் விரும்பி சாப்பிடுறீங்க. நான் என்ன சமையல் செய்தாலும் நல்ல இல்லைன்னு .சொல்லுவீங்க. இப்போ என்ன திடீர்னு இப்படி ஒரு முடிவு பண்ணியிருக்கீங்க?
.
.
.
.
.
.
.
கணவன் : அதுவா, டாக்டர் பார்க்க போயிருந்தேன்.. அவரு தான் இனி நான் டயட் சாப்பாடு தான் சாப்பிடனும்.. அதுவும் குறிப்பா உப்பு சப்பு இல்லாம சாப்பிடனும்னு சொன்னாரு.. அதான் இனி உன் தினமும் உன் சமையல் சாப்பிடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..!!   

...................

..படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்..
அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கு..
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு..,
பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயிசாப்பிட்டுட்டு
இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…
MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்..,
MBA : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..
MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு.,ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: இதுக்குதான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..! 


........................................
விமான நிலையத்தில் ஒரு சின்ன சேவை குறைபாடு.

பயணம் செய்பவர் ஒரு டென்ஷன் பார்ட்டி!

அங்கே இருந்த பணியாளரை பிடித்து கன்னா பின்னாவென்று திட்டி தீர்க்கிறார். அவரும் என்னென்னவோ சமாதனம் சொல்லியும் அடங்கவே இல்லை...

தனக்கு தெரிந்த எல்லா மொழிகளிலும் பணியாளரை திட்டி கொண்டு இருக்கையில், விமானத்தில் பயணம் செய்ய அழைப்பு வர வேறு வழி இனறி டென்ஷன் பேர்வழி கிளம்புகிறார். 

அருகே இருந்த ஒரு நண்பர் பணியாளரை பார்த்து பரிதாபமாக, 

"ரொம்ப பேசிட்டாருங்க. உங்களுக்கு கோபமே வரலையா? நல்லா நாலு கேள்வி திருப்பி கேட்க வேண்டியது தானே...?", என்று ஆறுதல் வார்த்தை சொல்ல பணியாளர் சிரிக்கிறார்...

"என்னங்க சிரிக்கிறீங்க?"

"எனக்கு கோபம் வரலை என்று எப்படி சொல்றீங்க...?"

"ரொம்ப அமைதியா இருந்தீங்க. இப்ப கூட சிரிக்கிறீங்களே...?"

"நான் கோபத்தை காட்டும் விதமே தனி..."

"எப்படி...?"
"அவர் போய் கொண்டு இருப்பது ஜப்பானுக்கு! அவரின் லகேஜ் போய் கொண்டு இருப்பது ஆப்பிரிக்காவிற்கு..."

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… 

நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம். 

வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். 

நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்.

,,,,,,,,,,

குரு vs சிஷ்யன் 


ஆசிரமம் ஒன்றில் குருவை தேடி வெளியில் இருந்து கோபமாக ஒரு நபர், "குருவே, உங்களின் சீடன் என்னை அடித்து விட்டான். அதை உங்களிடம் புகார் சொல்ல வந்தேன்", என்று வந்தார். குருவிற்கு ஒன்றும் புரியவில்லை. சீடனை அழைத்து விசாரிக்கிறார். 

"ஏனப்பா! இவரை நீ அடித்தாயா?"

"ஆமாம் குருவே...!"

"ஏன் அடித்தாய்?

"இவன் உங்களை பற்றி தவறாக பேசினான்"

"அப்படி என்ன பேசினான்?"

"இப்ப எல்லாம் நீங்க அர்த்தம் இல்லாமல் பேசறீங்க என்று சொன்னான்..."

ஆஹா! தனக்கு இப்படி ஒரு சீடனா...? 

"அதுக்கா இப்படி போட்டு அடித்தாய்...?"

"பின்னே...? இப்ப எல்லாம் நீங்க அர்த்தம் இல்லாமல் பேசறீங்க என்றால் என்ன அர்த்தம்? இத்தனை நாள் நீங்க அர்த்தமுடன் பேசியதா ஆகி விடாதா?
குரு-????? !!!!! ????


.உங்க குடும்பத்த பத்தி இந்த குரூப்புக்கு சொல்லுங்க ப்ளீஸ்.

இது கூகுல்-ராணி, என் மனைவி, ஒரு கேள்வி கேட்டா, 10 பதில் சொல்லுவாங்க...

இது ஃபேஸ்புக்-குமாரு, என் பையன், எங்க வீட்டு சமாச்சாரங்கல இந்த காலனி பூரா பரப்பி விட்றுவான்....

இது டிவீட்டர்-குமாரி, என் பொண்ணு, இந்த காலனி மொத்தமும் அவள ஃபாலோ பண்ணுது.

என் பேரு ஆர்குட்-ராஜா, என்ன யாரும் இங்க கண்டுக்கிறதே இல்ல....நீங்க நல்லா இருக்கோணும் ச்ச்சாமீஈஈ.......

....................

No comments:

Post a Comment