யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும். அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.
''''''''''''''''''''''.
மேனேஜர் : ஏன்யா...ஆபீசுக்கு லேட்டு..
கிளார்க் தானாகீனா : ஹி..ஹி...வர்றப்ப பஸ்லே.. கொஞ்சம் தூங்கிட்டேன் சார்....
மேனேஜர் : ஏன் ஆபீஸ் வரங்காட்டியும் அவசரமா... இங்கே வந்தாலும் அதைத்தான் பண்ணி தொலையுற...
,,,,,,,,,,,,,,,,,,,,
மனைவி:"நேத்திக்கு நான்
வைரத்தோடு கேட்டப்ப
மாட்டேன்னுட்டு இன்னிக்கு ஏன்
வாங்கிண்டு வந்திருக்கீங்க?"
கணவன்:"பொண்டாட்
டி ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித்தராட்டா
,அடுத்த ஜன்மத்திலயும் அவதான்
பொண்டாட்டியா வருவான்னு பெரியவங்க
சொல்லியிருக்காங்களாம்.
அதான் பயந்து போய்
வாங்கிண்டு வந்துட்டேன்",,,
,,,,,,,,,,,,,,,
பல்லு எப்படி விழுந்திச்சு ?'
Patient: அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
,,,,,,,,,,,,
"நீங்கதானே தமிழ்செல்வன்..?"
"ஆமாங்க..?"
"உங்க பேர்லே கணக்கு இருக்கா..?"
"கணக்கு- இல்லைங்க தமிழ்-தான் இருக்கு?"
,,,,,,,,,,,,,,,,,,,,,
மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
..............................
"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?" "ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!
..............................
"என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது.
..............................
பெண் கொசுக்கள் ரத்தம் குடிக்கும்போது வலியை உண்டு பண்ணி தான் குடிக்குமாம், ஆனா ஆண் கொசுக்கள் வலியே தெரியாம நம்ம ரத்தத்தை குடிக்குமாம். கொசுவுல கூட
பொம்பளை கொசு இன்னா இம்சை பண்ணுது.
..............................
Dr : உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!DIL :என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
/"நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே.."
"ஐயையோ! அது பச்சைப் பொய், எனக்கு வருமானமே கிடையாது.. சொத்து மட்டும்தான் சேர்க்கறேன்""டாக்டருக்கு தன்னம்பிக்கை குறைவு போல"
"எதை வச்சி சொல்ற?"
"தினசரி பத்து பக்கத்துக்கு ஆபரேஷன் சக்ஸஸ்னு எழுதிக்கிட்டு வர்றாரே.."'
'''''''''''''''
ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?"
"கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"
..............................
பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க, காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?""எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்.
தமிழ் ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க? மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே" சிரிங்கன்னு, அதான்......,,,,,,,,,,,,,,,,,,,
பொண்ணு எப்படி இருகுனும்ன்னு எதிர் பாக்குறீங்க ....?" "நல்ல லுக் 'கா இருக்கணும் ". "அது சரி . மாப்பிள்ளை எப்படி இருக்கணும்ன்னு எதிர் பார்கிறீங்க ?" "நல்ல குக் 'கா இருக்கணும் ".
,,,,,,,,,,,,,,,,
பள்ளிக்கூடம் படிக்கையில கேட்ட ஜோக் இது... இப்பவும் சுத்திக்கிட்டு இருக்கு...
மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?
இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது
சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க
டாக்டர் – தினமும் மூணு வேளை
நர்ஸ் – நார்மலாத்தான்
பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது
போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது
வேலைக்காரி – பிசு பிசுன்னு
அட்டை – விடாம பெய்யுது
ஆமை- வெளியே தலை காட்டா முடியலை
குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது
தேள் – கொட்டு கொட்டுன்னு
நண்டு – பிடி பிடின்னு'''
'''''''''''''''''''
கல்யாணம் பண்ணிட்டு கணவன் மனைவிக்குள்ள சரியான பரஸ்பரம் இல்லைனா டைவர்ஸ் வாங்கிட்டு பிரிஞ்சிடறாங்க இப்போ
ஆனா இதே அந்த காலத்திலயா இருந்தா எப்படி இருக்கும் சண்டையும் சச்சரவாத்தானே...
ஆளாளுக்கு பழி வாங்கணும்னு கெளம்பி அவங்களே பழியாவாங்க அதத்தா நகைச்சுவையா எழுதியிருந்தாங்க
'நீ இப்படியே நடந்தீன்னா உன்னைய பழிவாங்காம விடமாட்டேன்'
'ஓஹோ அப்படியா அதையும் பார்ப்போம் உன்னாலே(மரியாதை) என்ன பண்ணமுடியும்னு'
'ஏன் முடியாதா? நம்ம வீட்டுக்கு பின்னாடி குளம் இருக்குதில...'
'ஓஹோ அதுல என்னைய தள்ளிவிடுவீங்களா?'
'இல்ல நானே விழுந்திடுவேன்'
'சொல்லாதீங்க... அத செய்யுங்க மொதல்ல'
'எனக்கு நீச்சல் தெரியும் நீந்தி வெளியே வந்திட்டா... அதனால கைய கட்டி விழுந்திடறேன்'
சரின்னு கணவனோட கைய மனைவி கயிற்றில் கட்டிவிடுகிறாள்
குளத்துகிட்ட போன பின்னாடி
'சரி குதிங்க சீக்கிரம் எனக்கு நிறைய வேலை இருக்கு' இது மனைவி.
அதுக்கு கணவன் 'கையத்தா கட்டிவிட்டுட்ட நீயே தள்ளிவிடு' என்றான்
மனைவி அருகில் வர
அப்போ கணவன் 'இருஇரு நீதா நல்ல ஓடுவியே அதனால தூரத்தில இருந்து ஓடிவந்து ஒரு ஒதை விடு' என்றான்.
மனைவியும் தலைய ஆட்டிட்டு போய் ஓடி வந்தாள் வேகமாய் அப்போ கணவன் விலகிக் கொள்ள மனைவி குளத்துக்குள்ள விழுந்தாள் அப்போ மனைவி
'அய்யோ அய்யோ காப்பாத்துங்க காப்பாத்துங்கனு' கதறினாள்.
அதற்கு கணவன்'அதுதா கைய கட்டிட்டியே உன்னைய எப்படி காப்பாத்த முடியும்?' பார்ப்போம் அடு்த்த ஜென்மத்தில'இதை எழுதியவர் கவிமணி மாயூரம் வேதநாயகம்.
''''''''''''''''''''''''''''''
நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.
'''''''''''''''''''''''''''''
பெண் : ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?? ?
கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம்
பெண்: என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..
கஸ்டமர் கேர்: அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்
பெண்: இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார் கஸ்டமர் கேர்: ?
உனக்கு அம்மா பிடிக்குமா இல்ல அப்பா பிடிக்குமா?"
"ரெண்டு பேரையும் சமமா பிடிக்கும் மா"
"நான் கோவிலுக்கு கூப்பிடறேன் அப்பா சினிமாக்கு கூப்பிடறார் .நீ யாரோட போவே?"
"நான் சினிமாக்கு போவேன்"
"சரி இப்ப நான் சினிமாக்கு கூப்பிடறேன் அப்பா கோவிலுக்கு கூப்பிடறார் நீ யாரோட போவே?"
"நான் கோவிலுக்கு போவேன்"
"பார்த்தியா உனக்கு அப்பா தான் அம்மாவை விட பிடிக்கும்"
"இல்ல நான் தான் ஏற்கனவே சினிமாக்கு போய்ட்டு வந்துட்டேனே ""ஙே"
.................
No comments:
Post a Comment