Sunday, March 9, 2014

கடி ஜோக்ஸ் 71



-- கோவில் மணிய நாம் அடிச்சா சத்தம் வரும். அந்த மணி நம்மல இடிச்சா இரத்தம் வரும்.

பேன்ட் போட்டு முட்டி போட முடியும். அனால் முட்டி போட்டுக் கொண்டு பேன்ட் போட முடியாது. 

குவாட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்க முடியும்.அனால் குப்புற படுத்துக் கொண்டு குவாட்டர் அடிக்க முடியுமா?

ஆனியன் ரோஸ்ட் ல ஆனியன் இருக்கும். அனால் பேப்பர் ரோஸ்ட்ல பேப்பர் இருக்குமா.

..........................................


 மொக்கை : அங்க நிக்கிற புள்ளையைப் பாருங்க.. பையனா பொண்ணான்னே தெரியலே.. கண்றாவியா ட்ரெஸ் பண்ணியிருக்கு...

அடுத்தவர் : அது பொண்ணு தாங்க..

மொக்கை : எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க..? கிராப் வெட்டியிருக்கு.. பேண்ட் போட்டிருக்கு.. நெத்தியில் பொட்டு இல்லே..

அடுத்தவர் : என் பொண்ணை எனக்குத் தெரியாதா..?

மொக்கை : அடடா.. மன்னிச்சுடுங்க சார்.. நீங்கதான் அந்தப் பொண்ணோட அப்பான்னு தெரியாம தப்பா பேசிட்டேன்.

அடுத்தவர் : நாசமாப் போச்சு.. நான் அந்தப் பொண்ணோட அப்பா இல்லே.. அம்மா..!

........................................................


பொதுவாக டி-ஷர்ட்களில் வெளியாகும் இவ்வாசகங்கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே வருவதால் , என்னாலும், ஷபீரை போன்ற படிக்காத பயல்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை , இவ்வகை வாசகங்கள் பெரும்பாலும் தமிழில் வெளியாகும் அற்புதமான படங்களின் பஞ்ச் வசனங்களை ஒத்தவை , வருங்காலத்தில் வரும் இவ்வகை சட்டைகளில் தமிழில் வாசகங்கள் வெளியானால் எப்படிப்பட்ட வாசகங்களை நம் சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் போட்டுக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம் .

இனி வாசகங்கள் :

முதலில் ஆண்களுக்கான வாசகங்கள் சில :

டாஸ்மாக் எந்த பக்கம் ?

முதலில் நான் ஒரு இந்தியன் அப்புறம்தான் தமிழன்!!

இலவு காத்த கிளி கதை தெரியுமா/

ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி

நான் குடிச்சாதான் நல்லா யோசிப்பேன்

நான் குடிச்சாதான் பிளாக் எழுதுவேன்

பெண்கள தாயா மதிக்கிறவன் - உன்னைத் தவிர

இந்த சட்டை காதலியின் பரிசு - 50 ரூபாதான் 

நானும் தமிழன்தான் தெலுங்கு பிகர பாக்கற வரைக்கும்...

பெண்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை - என் பெயர்

காதலிக்கும் ஆசையில்லை என் கண்கள் உன்னை காணும் வரை

யார் தச்ச சட்டை - எங்க தாத்தா தெச்ச சட்டை


நானும் பொது சொத்துதான் - மகளிர்க்கு மட்டும்??

ஒரு கவிதை சொல்லவா - உன் பெயர்

இந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது .


வாடகைக்கு - என் இதயம் ( மனைவி ஊரிலிருந்து வரும் வரை )

ஐ லவ் சென்னை - அடுத்த வாரம் வரைக்கும்

என்ன சிரிப்பு ராஸ்கல் சின்னபுள்ளதனமா

என்னை கதற கதற ஆதம்டீஸிங் பண்ணலாம்!!

உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

இரவினில் ஆட்டம் - பகலினில் தூக்கம்

இந்த பூனையும் பீர் குடிக்கும்.. நீ வாங்கி தந்தா

வேலை இல்லா இளைஞன் நான்... அப்படியே இருக்க ஆசைப்படறேன்

இது எங்கப்பன் வூட்டு சொத்து

உங்களோட சேர்த்து இத 61,23,32,99 பேர் படிச்சிருக்காங்க

எவ்ளோ அடிச்சாலும் நான் ஸ்டெடி

என் காதலிக்கு மெரினா பீச்ல இடம்தான் வாங்கிதர முடியாது , ஆனா
சுண்டல் வாங்கி தரலாம் .

குருவிக்கும் குசேலனுக்கும் என்ன சம்பந்தம்

பெண்களுக்கான வாசகங்கள் சில :

லூசாப்பா நீ

பின்னால எதுவும் எழுதல.. முன்னால மட்டும்தான்

ஐ எம் ப்ரம் சாவடிச்சான்பட்டி.. வான் ட்டூ நோ மோர்

இன்ச் இன்சா மனுச வாழ்வ புருஞ்சிக்கோ .. எந்த இன்ச்சில் இப்ப இருக்க
நெனச்சிக்கோ

பிஞ்ச செறுப்ப பாக்கணுமா

இலவசம் இலவசம் .. மனசு மட்டும்

நீங்க தனியா வந்துருக்கீங்களா?

அவனா நீ?

நீங்க ஜொள்வடிச்சான் பட்டியா?

குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு - நான் சொந்த காசில் பீரடிப்பதில்லை

தீப்பெட்டி இருக்கா ? - விளக்கேத்தரதுக்குடா

என் போன் நம்பர் வேணுமா ..? உங்க அப்பாவ அனுப்பு

ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் எங்க குடுக்கணும்ணு தெரியுமா?


சில பொதுவானவை :

தமிழ்ல மொத்தம் எத்தனை எழுத்துனு தெரியுமா?

மச்சி நீ கேளேன்

LORD MURUGA IS MY FAVOURITE TAMIL GOD

மனித வெடிகுண்டு . எண் ; 666

அல்வாடா புஜ்ஜி

கம்னாட்டி ( I MEAN COME NAUGHTY)

குரங்குப்படம் ( உங்க படம்தான் பயப்படாதீங்க )

போலீஸ் என் நண்பன்
 
எனக்கு தமிழ் தெரியாது.


-- வார்த்தைகளின் வலிமை
-----------------------

முனிவர் ஒருவர் ஒரு கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பெண் உடல்நலமில்லாத குழந்தை ஒன்று அருகில் இருப்பதாகவும், அதை குணமாக்க உதவுமாறும் வேண்டினாள்.

முனிவரும் அதற்கிணங்கினார். அவரைப்போன்றவரை காண்பது அரிதென்பதால் அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியது.

அந்தப்பெண் உடல்நலமில்லா அந்தக்குழந்தையை கொண்டுவந்தாள். அந்த முனிவரும் அக்குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று பிரார்த்தனை செய்தார்.

"எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் குணமாகாத அந்தக்குழந்தை நீங்கள் பிரார்த்தனை செய்வதால் குணமாகி விடுமா..?" என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் கூச்சலிட்டான்.

"உனக்கு அது குறித்து என்ன தெரியும்..? நீ ஒரு அறிவில்லாத முட்டாள்" என முனிவர் அம்மனிதனுக்கு பதிலுரைத்தார்.

அந்த வார்த்தைகளால் உணர்ச்சி வசப்பட்ட அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது. பலரின் முன்னிலையில் அவமானப்பட்டதாக நினைத்தான். அவனுடைய உடல் சூடாகி முகமெல்லாம் சிவந்தது. அந்த முனிவரை திட்ட அல்லது அடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வந்தான்.

புன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர், " நான் சொன்ன வார்த்தைகளால் நீ கோபமடையவும், சூடாகவும் முடியுமென்றால், நான் கூறும் நல்ல வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த முடியாது என்று நினைக்கிறாய்?" என்று கேட்டார்.

வார்த்தைகளின் வலிமை அந்த மனிதனுக்கு புரிந்தது.

.....................................................

No comments:

Post a Comment