சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன.
அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள்
வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக
நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை யினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி
குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.
1.கால்கள்: சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு
ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து
இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண்
ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.
2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது
எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.
3.வயிறு, குடல்: அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப்
போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.
4.மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக
எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல்
நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.
5.பல்,ஈறுகள்: பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால்
பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.
6.கண்கள்: கண்களில் கட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால்
ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.
7.காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.இவை நுண்
கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை
வேறு.
No comments:
Post a Comment