Sunday, March 9, 2014

கடி ஜோக்ஸ் 65

குருவிற்கு பாடம் சொன்ன குதிரைக்காரன்!

ஒரு குரு இருந்தார்!

முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். 

அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள்.

கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.

குரு வந்த போது யாருமில்லை.

பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்!

அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.

'என்ன செய்யலாம்', என்று அவனையே கேட்டார்.

”ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.”

படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு.

அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.

பிரசங்கம் முடிந்ததும், "எப்படி இருந்தது?", என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.

"ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்”, என்றான்.

................விமான நிலையத்துக்குப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு
பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.

‘ஸார்..! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க! விமானம் திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்….!’

ஒரு பயணி நின்றார்.

பாராசூட் என்ன விலை?

ரெண்டாயிரம் ரூபாய் ஸார்

சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து

குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?

”பணம் வாபஸ் ஸார்”

.............................

இந்திய விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னென்ன...?  
1. கத்ரினாவுக்கு பொடுகு, கத்ரினாவுக்கு தலைமுடி பிரச்சினை, ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது. 

2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

3. உங்கள் தகுதிகளை விட உங்கள் நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது.

4. சமையலறையில் உப்பு இல்லையா, கவலை வேண்டாம். டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம் !

5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நமபர் 1 பிராண்ட்தான், எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள் அனைவராலும் பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!

6. உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தால் நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடை செல்லுங்கள்.

7. ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன்ஒரே காரணம் பெண்களைக் கவர்வதே.

8. கோலா பானங்கள் அனைத்துமே எல்லாவகையான பயங்களையும் போக்கிவிடும். தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும் சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!

9. சூப்பர்ஸ்டார்கள் எல்லாருமே பாவம், ரொம்பவும் ஏழைகள். 10 ரூபாய் கொடுத்து கோலா வாங்க இயலாமல் உயிரையே பணயம் வைக்கவும் தயங்க மாட்டார்கள்.

10. ஷாம்பு விளம்பரங்களில் வரும்ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அவதார் திரைப்பட ஸ்பெஷல் எஃபக்ட்சைவிட அதி உன்னதமானவை.

11. ஷாம்பு அல்லது சோப்பில் இருக்கும் பழப்பொருட்களின்விகிதம், 99% பழச்சாறுகளில் இருக்கும் விகிதத்தைவிட அதிகமானது.

12. அமுல் நிறுவனத்தில் நல்ல பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய திறமைசாலிகளைவிடகார்ட்டூன் வரையும் திறமைசாலிகள் அதிகமாக இருக்கிறார்கள்.

13. சாலைகளின் நிலை மோசமாக இருப்பதைக் குறைகூறம் பெரும்பாலான மக்கள் அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத்த ான் வாகனங்களை வாங்குகிறார்கள்.

14. டயரி மில்க் சில்க்- கை மூஞ்சிமுழுக்க அப்பிக்கொள்ளாமல் சாப்பிடவே முடியாது.

15. மோட்டார் பைக் வாங்குவோர் எவரும் பயணம் செய்வதற்காக அல்ல, பெண்களை பிக் அப் செய்யவே வாங்குகிறார்கள்.

16. எல்லா சோப்புகளுமே 99.9% கிருமிகளைக் கொன்று விடும்.

17. பகார்டி சிடிக்கள் தயாரிக்கிறது, கிங் பிஷர் மினரல்வாட்டர் தயாரிக்கிறது என்றே எல்லாரும் நம்புகிறார்கள்.

18. தாயும் மகளும் பேசிக்கொள்கிறஒர ே நேரம், ஹேர் ஆயில் பற்றிப் பேசும்போதுதான்.

19. எந்தத்துறை வல்லுநராக இருந்தாலும் சரி, அவர் எப்போதும்வெள்ளைக் கோட் அணிந்திருப்பார்.
............................................................................


ஒரு குட்டி கதை:

ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.

அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.
............................நபர் - 1 : நேத்து ராத்திரி என் வீட்டுக்கு ஒரு திருடன் வந்து திருடுறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தான்.

நபர் - 2: ஐயய்யோ! அப்புறம்…?

நபர் - 1 : எல்லா விளக்கையும் போட்டு நானும் அவன் கூடச் சேர்ந்து பணத்தைத் தேடினேன். 

நபர் - 2 : என்னது!

நபர் - 1 : ஆனாலும், கடைசி வரைக்கும் என் வீட்டுக்காரி பணத்தை எங்கே வெச்சிருக்கான்னு எங்களாலே கண்டுபிடிக்கவே முடியலை.

...........................................


காதல் நோய் தாக்கினால்:

1.பன்னி குட்டிய பாத்தா கூட "வாவ்! சோகியூட்!" ன்னு கடுப்பேத்துவாங்க.

2.உள் பனியன , ஜட்டிய கூட அயர்ண் பண்ணி போடுவாங்க ..

3.செங்கல்ல தேச்சி குளிச்சவன் மைசூர்சாண்டல்
தேச்சி குளிப்பான்!

4.கேப்டன் மாதிரி கண்ணெல்லாம் செவந்து போயிருக்கும்!!
தூங்கவே மாட்டானுங்க

5.ஒரு பாக்கெட் சிகரெட்டை, ஒரே நாளுல ஊதி தள்ளுரவங்க, அந்த ஸ்மெல்லே பிடிக்காத மாதிரி, ஆக்ட்
கொடுப்பாங்க..(அம்மணி சொல்லிருச்சாம்)

6.நல்லா இருக்குற தலைய நாலு முறை சீவிக்க
சொல்லும்.

7.இவன் 10அரியர் வச்சுருந்தாலும் , அவ exam போரப்ப "பிரசாதம் எடுத்துக்கோ டியர் கோவிலுக்கு போய்ட்டு வந்தன்" ன்னு நிப்பான்.

8.மெசேஜ்க்காக நிமிசத்துக்கு ஒருமுறை மொபைல
பார்க்கத்தோன்றும்..

9.சரக்கடிக்க லவர்ட பர்மிசன் கேட்டு வெறி ஏத்துவானுங்க.

10.லவ்வரோட இருக்கரப்ப தெருநாய்ய ஏன் சொரி நாய பாத்தாகுட "look very cute yar" ன்னு சொல்லி அவ முகத்த பாப்பான்.

இவனுன்ங்க லவ்'ஸ் தாங்க முடியலடா சாமி!
.............................

வீட்டிலே என் மனைவி எப்போதும் தகராறு செய்கிறாள்.நிம்மதியே இல்லை, ”என்று ஒருவன் நண்பனிடம் புலம்பினான்.

நண்பன் சொன்னான், ”அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எனக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திட்டினால் அடுத்தவள் வீட்டிற்கு போய்விடுவேன். எனக்கு அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.

”இவனும் இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று நினைத்து இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான்.இதை அறிந்த முதல் மனைவி அவனை வீட்டை விட்டு துரத்தி விட்டாள். உடனே இரண்டாவது மனைவியிடம் சென்றான். ஏற்கனவே திருமணம் ஆனதை சொல்லாமல் இவளைக் கல்யாணம் செய்து கொண்டது தெரிந்து இவளும் அவனை வீட்டிற்குள் விடவில்லை.

அவன் இப்போது நடுத்தெருவில்.புலம்பியபடியே அவன் கோவிலுக்குப் போய் அங்கு ஒரு ஓரமாகப் படுத்தான். அப்போது பக்கத்தில் ஒருவன் புலம்பிக் கொண்டிருந்தான். உற்றுப் பார்த்த போதுதான் அவன் இவனுடைய நண்பன்தான் என்று தெரிந்தது.

”என்னடா,நிம்மதியா இருந்த நீயும் இங்கே இருக்காயே?”என்று கேட்க அவன் சொன்னான்,”என்னையும் இரண்டு பேரும் வெளியே அனுப்பி விட்டனர்,”என்றான். ”பின் ஏன் எனக்கு அந்த ஆலோசனை சொன்னாய்?”என்று இவன் கேட்க அவன் சொன்னான்,”நான் அடிக்கடி பிரச்சினை காரணமாக இங்குதான் வந்து படுத்திருப்பேன்.

எனக்கு தனியாகப் படுத்திருக்க பயமாக இருப்பதால் துணைக்கு ஆள் தேடினேன். அப்போதுதான் நீ அகப்பட்டாய்.”
..................................

No comments:

Post a Comment