Sunday, March 9, 2014

கடி ஜோக்ஸ் 60

புது மண தம்பதியினர் கோவிலுக்கு செல்கின்றனர். 
மனைவி காலில் முள் குத்தி விடுகிறது. 

"சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை", என்று முள்ளை கோபித்து கொண்டான் கணவன். 

மணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு பின்,

அதே கோவிலுக்கு அதே தம்பதியினர் செல்கின்றனர்.
அதே மாதிரி முள் குத்தி விடுகிறது.

"சனியனே, முள் இருப்பதை பார்த்து வர கூடாதா?", என்று இப்போது மனைவியை கோபித்து கொள்கிறான்.

ஷப்பா! இது என்ன ஜோக்கா எல்லா வீட்டிலும் நடப்பது தானே என்று சலிச்சுக்காதீங்க. இருங்க இருங்க... ஜோக் இன்னும் முடியலை... 

"என்னங்க இது? அப்போ முள்ளை சனியன் என்று சொல்றீங்க. இப்ப என்னை சனியன் என்று சொல்றீங்களே?"

"இதுக்கு பெயர் தான் சனி பெயர்ச்சி..."

,,,,,,,,,,,,,,,,,,,,,,

பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு சுலபமாக அறிவியலை புரியவைக்கலாம், உதாரணமாக...

நியுட்டன் தன்னோட மூன்று விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?

ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..
உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..
"An object continue to moves, unless it's stopped"

நியுட்டன் மாட்டுக்கு தன் கையால் முழுபலத்தையும் சேர்த்து ஒரு கிக் கொடுத்தார். மாடு "ma" என்று கத்தியது...உடனே நியுட்டன் தன் இரண்டாவது விதியை கண்டுபிடித்தார்..

"F = M A"

சில நிமிடம் கழித்து மாடு நியுட்டனை ஒரு உதை உதைத்தது. உடனே நியுட்டன் தன் மூன்றாவது விதியை கண்டு பிடித்தார்..

"Every action has equal and opposite reaction"

............................

நண்பர் யோசனைப்படி மனைவியை மகிழ்விக்க,"இன்னைக்கு சாம்பார் ஸூப்பர் செஞ்ச கைக்கு தங்க வளையல் போடணும்னார்.....ஏய்யா சாம்பார் பக்கத்து வீட்டுஓசி அவளுக்கா வளேயலு?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


ஏன்டா அந்த வீட்ல திருட்டாமே?.24மணி நேர பாதுகாப்பு டூத்பேஸ்ட்ல ப
ல் விளக்கிட்டு கதவப்பூட்டாம தூங்கினா?
.............................

ஒருவர் (காரில் அடிப்பட்டவரிடம்) : நீ அதிர்ஷ்டசாலிப்பா.. அடிப்பட்டாலும் டாக்டர் வீட்டின் முன்னாலேதான் அடிபட்டிருக்கே..

அடிப்பட்டவர் : நாசமாய் போச்சி... அந்த டாக்டரே நான்தான்யா?


................................................................................

முன்னால சீருது மயிலக்காளை
பின்னால பாயுது மச்சக்காளை
அடக்கியாளுது முரட்டுக்காளை முரட்டுக்காளை
நெஞ்சிக்குள் அச்சம்மில்லை யாருக்கும் பயமும்மில்லை
வாராதோ வெற்றி என்னிடம்
விளையாடுங்க உடல் பலமாகுங்க

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மனைவி: ஏங்க நான் பாட ஆரம்பிச்ச உடனே எந்திருச்சு வீட்டு ஜன்னல் ,கதவு எல்லாத்தையும் எதுக்கு இப்படி தொறந்து வைச்சிட்டு வாசல்லை போயி உக்காந்துக்குறீங்க ?
கணவன் :ஆமாடி ,இல்லேன்னா நன் ஏதோ உன்னைப் போட்டு உதைக்கறதா பக்கத்துக்கு வீட்டுக்காரங்க நெனச்சுக்கப் படாதுபாரு அதுக்குதான் !!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


,Exclusively for men....

1. நீங்க போட்டு சாப்பிடுங்கனு ஒரு நாள் வெளியே போயிட்டு வந்து பார்த்தா ......சாப்டுட்டு எல்லா பாத்திரத்தையும் திறந்து போட்டு வைக்க வேண்டியது... எதாவது பாத்திரம் மூடி இருக்கும் அத திறந்து பார்த்தா காலியா இருக்கும்.... 

2. cricket பார்க்கறேன் பேர்வழினு பக்கத்துல chips பாக்கெட், tea சாப்ட்ட டம்ளர், biscuits, இது போதாதுன்னு ஒரு pillow வேற....

3. யாரவது lady கார்லயோ, bikeலயோ over take பண்ணிட்டா அவ்வளவுதான்.....racing போறா மாதிரி வளைஞ்சி, நெளிஞ்சி எப்படியாவது chase பண்ண வேண்டியது......

4. குளிச்சிட்டு வந்துட்டு ஈர டவல அப்படியே கட்டில்ல போடா வேண்டியது...

5.வங்கில எந்த queue சின்னதா இருக்கோ அங்க போய் நிக்க வேண்டியது பார்த்த அது "Senior Citizen" னுக்கானது...

6. பூக்காரி 5 ருபா முழம்ன அத காதில் வாங்காம...... இல்ல இல்ல 10 ரூபா தான் தருவேங்கறது....

Friends...

இப்பவே டண்டணக்கா கேக்குது....

,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“கறுப்பா இருக்கிற பொண்ணுக்குப் 50 பவுன் போடறாங்களாம். ஒரு கால் நொண்டிப் பொண்ணுக்குப் 150 பவுன் போடறாங்களாம். எது வேணும்” ?

“ஹீ.. . ஹீ.. . தரகரே.. .கறுப்புக் கலர்ல நொண்டிப் பொண்ணு பாருங்களேன்”…..

..............................


அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

.......................

அடிபட்ட காய்கறி எது?
வெங்"காயம்"
.

வழிகாட்டும் காய்?
பீட்"ரூட்".

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,

கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது… சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்…

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,” லாரி”ல கரும்பு ஏத்துனா “காசு”!

” கரும்பு”ல லாரிய ஏத்துனா “ஜூசு”!!

இதெல்லாம் படிக்குற நீங்க ஒரு “——-” ஆமாங்க.. அதான்… அதேதான்…

.................................

காற்று வாங்க போனேன்!

போலீஸ்: மேடம், இவர் யாரென்று உங்களுக்குத் தெரிகிறதா? 
மனைவி : இவர் எனது கணவர் தான். இவரை எங்கிருந்து அழைத்து வருகிறீர்கள்..?

போலீஸ்: வீட்டிற்குச் செல்ல வழி தெரியாமல் பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்தார்.
மனைவி (குழப்பத்துடன்) : அப்படியா?

போலீஸ்: ஏன் இவ்வளவு ஆச்சர்யம் காட்டுகிறீர்கள் மேடம்?

மனைவி: இல்லை.. கடந்த 10 வருடங்களாக எனது கணவர் அந்த பூங்காவிற்குச் சென்று தான் நடைபயிற்சி செய்து வருகிறார். இன்று மட்டும் எப்படி வீட்டுப் பாதை மறந்தார் எனத் தெரியவில்லை...

போலீஸ்: பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் மேடம்

காவல்துறை அதிகாரிகள் சென்ற உடன் கணவனை திரும்பி முறைத்தார்.

'என்ன கூத்து இது?'

'ஹி ஹி! வழி தெரியாமல் இல்லை டியர். திரும்பி வீட்டுக்கு நடந்து வர நடந்து வர களைப்பாக இருந்தது. அதான்.....!

.............


.அக்கா வாசல்ல இருந்து படிக்கறா...!
தங்கச்சி தெருவில் இருந்து படிக்கறா..!! 
ஏன் தெரியுமா ..???
*
*
*
*
*
அக்காவுக்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம்
தங்கச்சிக்கு பப்ளிக் எக்ஸாம்

.......................


கணவனை எழுப்பும்போது

1) மனைவி சொல்வது: காலையும் நீயே, மாலையும் நீயே, இரவும் நீயே, பகலும் நீயே, ஒளியும் நீயே, இருளும் நீயே...!

2) மனைவி மனதில் நினைப்பது:
.
.
.
.
.
.
.
.
.
.
விடிஞ்சிருச்சு நாயே..!! எழுந்திரு பேயே..!!!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment