Sunday, March 9, 2014

கடி ஜோக்ஸ் 61

வீட்டு உரிமையாளர் வாடகை கேட்க , குடியிருக்கும் பெண் ( ஒரு மாதிரி) உள்ளே வாங்க என்றார்.....வீ.உ...இல்லம்மா, இம்முறை வாடகய பணமாவே குடுத்துரு
......................

மாணவன்- பெற்றோர்களை விட உயர்ந்த தெய்வம் இந்த உலகில் இல்லை...

ஆசிரியர்- அடடே! இந்த சின்ன வயதில் இவ்வளவு முதிர்ச்சியா? குட், என்ன செய்ய போகிறாய்?

மாணவன் - உடனே கல்யாணம் பண்றேன். குழந்தை பெற்று கொண்டு தெய்வம் ஆகிறேன். 
.....................

பிச்சைக்காரன்:அம்மா, தாயீ பிச்சை போடுங்கம்மா?

எஜமானி:இந்தா பிரியாணி நல்லா சாப்பிடு!

பிச்சைக்காரன்:சாப்பாடு போடவே தயங்குற இந்த காலத்துல பிரியாணியே போடுறீங்களே!உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யறதுனே தெரியலம்மா?

எஜமானி:அதெல்லாம் எதும் வேணாம் பேஸ்புக்ல எனக்கு டெய்லி லைக் ,கமெண்ட் போட்டா போதும்!

கணவன்:(வீட்டுக்குள் இருந்து)எங்கடி டேபிள்ல நான் வாங்கிட்டு வந்து வச்சிருந்த பிரியாணி பொட்டலத்த காணோம்?

........................

என் நண்பர் ராஜா கைல ரெண்டு எலும்பு முறிந்து ஆஸ்பத்ரியிலே அட்மிட் ஆயிருக்கார் .

அட பாவமே நேத்து அவரை ஒரு அழகான இளம் பெண்ணோட தியேட்டர்ல பார்ததேனே ? 

கரெக்ட் அத அவர் பொண்டாட்டியும் பார்த்துட்டா ..
.............................

.நான்: 
ஜோசியரே என்னைப்பற்றி 
ஊரே பேச வேண்டும்,
அதற்கு என்ன வழி..?

ஜோசியர்:
ஊர் பூரா கடன் வாங்கிவிட்டு
ஊரைவிட்டு ஒடிவிடுவதுதான் ....!
(எப்புடீ.....?)

......................

தலைவரே...உங்க மனைவிக்கு ஒரே பிரசவத்துல மூணு குழந்தைகள் 
பிறந்திருக்கு..! 

நான் நம்ப மாட்டேன்....ரீகவுண்டிங் பண்ணச் சொல்லு..!.....
..................

மனைவி : என்னங்க....! இன்னிக்கு அதிர்ஷ்டவசமா எங்கம்மா ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பிச்சாங்க.
மணிக்கூண்டு வழியா சந்தைக்கு அவங்க போயிருக்காங்க. மணிக்கூண்டை அவங்க கடந்த அடுத்த நிமிடமே, அந்தப் பெரிய கடிகாரம் மேலிருந்து தரையில் விழுந்து உடைஞ்சிருக்கு..

கணவன் : எனக்குத் தெரியும், பாழாய்ப்போன அந்த கடிகாரம் எப்பவுமே லேட்டுன்னு...
.................................


ஜாலியான அட்வைஸ் கதை 

டாஸ்மாக் மூடுகிற நேரத்தில், கடைசியாக நாலு பேர் உள்ளே போனார்கள். சற்றுத் தொலைவில் கான்ஸ்டபிள் காத்துக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு கேஸ் பாக்கியிருக்கிறது. குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்க்காக ஒரே ஒருவன் சிக்கிவிட்டால், இன்றைய கோட்டா ஓவர்.

பதினைந்து நிமிடம் கடந்தது. டாஸ்மாக்கில் விளக்குகள் அணைந்தன. முதல் ஆள் வெளியே வந்தான். அப்படி ஒன்றும் ஆட்டமில்லை. கொஞ்சம் ஸ்டெடிதான். அடுத்த ஆள் வாட்டர் பாக்கெட்டை வீசி எறிந்தபடியே உடனே வந்தான். அவனும் பெரிதாகத் தள்ளாடவில்லை. மூன்றாவது ஆளும் நான்காவது ஆளும் ஒன்றாக வெளியே வந்தார்கள். மூன்றாவது ஆளின் கையில் கடைசி பெக். வாசலிலேயே குடித்தான். நான்காவது ஆளுக்கு நிற்கவே முடியவில்லை. அவனை மற்ற அனைவரும் சேர்ந்து தோளில் தாங்கியபடி கார் சீட்டில் உட்கார வைத்தார்கள்.

”மச்சான் பார்த்துடா . . . ஜாக்கிரதையா போயிடுவல்ல”
”ழோ..ழோ..பிழாப்ளம். ழான் பாழத்துழ்கறேன்”, அவனைப் போலவே அவனுடைய குரலும் தள்ளாடியது.

மற்றவர்கள் அவனை விட்டுவிட்டு அவரவர் பைக்கில் தள்ளாடியபடியே ஏறிப் போனார்கள். கடைசி ஆள் இன்னமும் கார் சாவியை துளாவிக் கொண்டிருந்தான்.

”கார் வச்சிருக்கானா? நல்ல வெயிட் பார்ட்டி சிக்கிருச்சி, மீட்டர் போட்டுற வேண்டியதுதான்.” கான்ஸ்டபிள் முகத்தில் புன்னகை.

”மிஸ்டர் காரை விட்டு இறங்கு”
”எழுதுக்கு?”
”நீ குடிச்சிருக்க. குடிச்சிட்டு கார் ஓட்ட உன்னை அனுமதிக்க முடியாது. நல்லா வசமா மாட்டிக்கிட்ட”
”யாழ் சொழ்னது நாழ்ன் குழ்டிச்சிழுக்கேன்னு. நாழ்ன் குழ்டிக்கல”
”மிஸ்டர் நான் நினைச்சா உன் டிரைவிங் லைசென்ஸ்சையே கேன்சல் பண்ணிடுவேன். ஆயிரம் ரூபா குடுத்துட்டா உன்னை விட்டுடறேன். ஓடிப்போயிடு”
”சாழ்ர் . . . நாழ்ன் குழ்டிக்கல”
”டாய் யாருகிட்ட பொய் சொல்ற? ஊதுடா?”

அந்த இளைஞன் ஊதினான். என்ன ஆச்சரியம்? குடி நாற்றத்தை கண்டுபிடிக்கிற மீட்டரில் ஒரு சிறு அசைவு கூட இல்லை.
”டாய் . . . நல்லா ஊதுடா”, இந்த முறை கான்ஸ்டபிள் தனது மூக்காலயே அவன் ஊதியதை மோப்பம் பிடித்தார். துளி கூட சரக்கு நாற்றம் வரவில்லை.
”டேய், உண்மையை சொல்லிடு. கொஞ்சம் கூட வாய் நாறல. எப்படிடா அது?”

”அட அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல சார்”., பேசிக் கொண்டே கார் சாவியை கரெக்டாக செருகினான்.
”தினமும் எல்லாருமே குடிப்போம். ஆனா ஒருத்தர் மட்டும் குடிச்சா மாதிரி நடிப்போம்”
”எதுக்கு?”
”உங்கள மாதிரி ஆளுங்கள ஏமாத்தறதுக்குதான் . . .வரட்டா”, காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டைலாகப் பறந்தான் அவன்.

நீதி:

மது அருந்தாதீர்கள். மது அருந்தாவிட்டால், நீங்கள் உங்களை மட்டுமல்ல, மது அருந்துபவர்களையும் காப்பாற்றலாம்.
..................................

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , ரயிலேறனும் னா, ஃப்ளாட்பார த்துக்கு வந்துதான் ஆகனும் .
இதுதான் வாழ்க்கை .

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !

.........................................

.அப்பா, எனக்கு உடனே ஒரு பைக் வேண்டும். வாங்கி கொடுங்க...'

'டேய்! கடவுள் எதுக்கு நமக்கு இரண்டு காலை கொடுத்து இருக்கார் தெரியுமா ?

'தெரியுமே! ஒன்னு கியர் போட, இன்னொன்னு ப்ரேக் போட..'
..........................................

அப்பா: இன்னிக்கு உனக்கு லீவ் தானே இப்போ என்ன படிக்கிற? 

மகன்: குழந்தை வளர்ப்பது எப்படி? புக் படிக்கிறேன் பா 

அப்பா: நீ சின்ன பையன் தானே நீ ஏன் இந்த புக்கெல்லாம் படிக்கிற? 

மகன்: நீங்க என்ன சரியா வளர்க்குறீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான்!
...................................

நாதாரித்தனம் என்றால் என்ன ..?

1.ஓசி டிவிடி ல படம் பாக்கும்போது பிரிண்ட் சரியில்லனு டென்ஷன் ஆவறது.....

2.ஒரு கூலிங் க்ளாஸ வச்சு பத்து பேர் போட்டோ எடுத்து அப்லோட் பண்றது......

3.ஓசி சோறுன்னா, பெல்ட்ட கிழட்டி, பட்டன ரிலிஸ் பண்ணீட்டு பந்தியில இறங்குறது..

4.காலேஜ்ல அப்ளிகேசன் வாங்கிட்டு கல்யாண பத்திரிக்கைல பேருக்கு பின்னாடி டிகிரி போட்டுகிறது.....

5.ஒரு பொண்ணு விடாம எல்லார்டயும் கடலை போடுறது.....

6.பக்கத்து வீட்டுகாரன் கேபிள் ஒயர்ல ஊக்கு குத்தி ஓசில டிவி பாக்குறது......

7.பொண்ணுங்க ஸ்டேடஸ் மட்டுமே Like பண்றது.......

8.மரத்த வெட்டிட்டு வேர்க்குதுன்னு ஏசிய வாங்கி மாட்டுறது......

9.கரண்ட் கட் ஆனதுக்கு அப்புறம் UPS -ல சார்ஜ் தீருகிற வரைக்கும் படம் பாக்குறது ........

10.காச வாங்கிகிட்டு நடிகுற நடிகனுக்கு பால் அபிஷகம் பண்றது , பேனர் வைக்குறது ,போஸ்டர் அடிக்குறது .......

............................

ஒரு வக்கீல் இறந்து சொர்க்கம் போனாராம்.வாசலிலேயே ஒரு தேவதை தடுத்து நிறுத்தி "நீங்கள் வக்கீலா?" என்றார்.

அவரும் "ஆமாம்"

தேவதை,"இல்லை சொர்க்கத்திற்குள் வக்கீல்களை நாங்கள் அனுமதிப்பதில்லை"

(எப்படியாவது வாதாடி உள்ளே செல்லலாம்னு மனசுல நினைச்சிகிட்டு)

"ஒரு நிமிஷம் நான் நல்லவன் உண்மையிலேயே"

"அப்படியா...சரி எப்படி ஒப்புக்கொள்வது?"

"ஆஹ்... நான் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு பசியில் இருந்த ஒருவருக்கு பத்து ரூபாய் தந்தேன், நேற்று கூட வீடில்லாத ஒருவருக்கு ஐந்து ரூபாய் தந்தேன்,சாவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட ஒரு பிச்சைக்காரனுக்கு இரண்டு ரூபாய் தந்தேன்"

"ஓ சரி ஒரு நிமிடம் இருங்கள் கடவுளிடம் பேசி விட்டு வருகிறேன்"

கொஞ்ச நேரம் கழித்து தேவதை வந்து,"இந்தாருங்கள் உங்கள் 17 ரூபாய் கூட சேர்த்து 3 ரூபாய் ஜஸ்ட் GO TO HELL YOU...!"

..................................

அவள் விகடனில் இருந்தது. . ! (ரசிக்க மட்டுமே)

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . ! 

சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம். . ! மளிகை கடை லிஸ்ட் போல நீண்டன பாயின்ட்ஸ். . !

குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . !

ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி:

*************************************************************

1.''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . !

2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். . !

3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். . !
(நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. . !) அப்புறம். . !

4.ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். . !

5.வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. . ! பட், மிச்சம் ரெண்டு நாள் அவர் சமைக்கணும். . !

6.இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும். . !

7.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். . !சமயத்துல 'வாடா போடா’வையும் ஜாலியா ரசிக்கணும். . !

8.எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக்கொடுக்கணும். . ! ஷாப்பிங் வர்றப்போ அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். . !

9.புதுசா என்ன டிரெஸ் போட்டாலும் உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும்.! 

10.எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப்போயிடணும். . !

11.கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். . ! நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. . ! 

12.முக்கியமான பாயின்ட். . !மாமியார் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும். . !

சவிதா, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி:

************************************************************


No comments:

Post a Comment