கண்ணாடி முன் நின்று தான் புடவைக் கட்டிய விதத்தை அப்படியும், இப்படியும் திருப்தி அடையும் வரை நான்கு திசைகளிலும் திரும்பி, திரும்பிப் பார்த்து திருப்தியானப் பிறகு அலுவலகத்தில் கொடுத்த டம்பப் பையை எடுத்துக் கொண்டு ஒரு ஆட்டோப் பிடித்து அலுவலகத்தின் வாசலில் இறங்கினாள் . ஆட்டோவிற்கு பணம் கொடுத்து அனுப்பி ஸ்டைலாக கையில் இருக்கும் வாட்சில் டைம் பார்த்த வண்ணம் அலுவலகத்தின் வாசல் படியில் யோசித்து வலதுக் காலை எடுத்து வைத்தாள் .வைத்தவள் ஆபீஸ் போர்டை உரக்க ஒரு முறைப் படித்தாள் ,'மங்கை ப்யூட்டி கிளினிக் ', மனதில் சொல்லொணாத குஷி, "
கடவுளே நான் இந்தப் பார்லரில் ரிசப்சனிஷ்டாக வேலை சேரும் நேரம் இந்தப் பார்லர் பேரும் புகழும் எடுத்து ஒரு பிரசித்தி பெற்றதாக வரணும்.நானும் இங்கேயே கடைசி வரை வேலையில் இருக்கணும்" அவள் பிரார்த்தனை செய்ததில் ஒரு தவறும் இல்லை.
தன்னையே ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்த்து முன் வைத்த காலை பின் வைக்காமல் படி ஏறினாள் ராஜாவாக இருந்த ரோஜா.

No comments:
Post a Comment