Sunday, January 13, 2013

டூ லேட்

பாலாவுக்கு சும்மா இருக்கப் பிடிக்கலை ,சிங்கப்பூரிலிருந்து மூன்று வருடம் கழித்து  வந்திருக்கும் தங்கை ரமாவைப்பார்த்து, "என்னடி எப்படி உன் புருசனுக்கு வறட்சி நிலத்துலப் புல்லு மொளச்சுது ?"

இவளோடத் தங்கையாச்சே! சும்மா இப்டிபதில் சொல்லிடுவாளா?


"ஆமாம், பானையே இல்லாதவ தண்ணிப் பிடிக்கும் போது வறட்சி நிலத்துலப் புல்லு மொளைக்கிறது என்ன கஷ்டமா?


"போறும் அக்காவும் தங்கச்சியும் ஒத்தரை ஒத்தர் பரிகாசம் பண்ணறது'" ."ஏதோ பாலா மருமகனுக்கு தலையில முடி இல்லன்னு வேண்டான்னு சொன்னதுக்குப் போயி என்னடி இப்டி வெட்டி மடியறீங்க?"


"ஆமாம், மூத்தவளை விட்டுக் கொடுப்பயா  நீ? அவ வேண்டான்னு சொல்ல வேத்தானே நா கட்டிகிட்டேன்". சிங்கப்பூர்ல இதெல்லாம் ரொம்ப சகஜம் , ஹேர் ட்ரான்ஸ் ப்ளேன்ட் பண்ணிக்கினாரு , இப்ப நல்ல ஹீரோக் கணக்கா இருக்காரு!"


''ஒன்  புருஷன் எப்படி இருந்தா எனக்கென்னடி?"

 இப்டி பாலா சொன்னாலும் தனக்கு கிடைக்க வேண்டியவன் இப்போ நல்ல ஜம்முனு இருக்காரேன்னு ,வயத்தெரிச்சல் ,அவப் புருசனுக்கு கல்யாணத்தும்  போது நல்ல முடி இருந்துது, ஆனால் இப்ப முன் வழுக்கை வந்து பாக்க சகிக்கல, அதான் கேட்டுப் பாப்போமேன்னு கேட்டாள் ,இருந்தாலும் இவ வாடகைத் தாய் மூலம் பிள்ளை பெத்துக்கப் போறான்னு கூடப் பொறந்த தங்கச்சியே  கிண்டல் அடிக்கறாளேன்னு மன வருத்தம் தான். இவ அவசரப் பட்டுட்டமோன்னு நினைக்கத் தோணி த்து.   டூ லேட் 

No comments:

Post a Comment