Friday, January 11, 2013

தக்காளித் தொக்கு



ஒரு கிலோ தக்காளி பழுத்தது. (சுமார் மீடியம் சைஸ் 15 )

தேவையான அளவு உப்பு 

கடுகு   5 டீஸ்பூன் 

பெருங்காயம் 2 டீஸ்பூன் 

மஞ்சள் பொடி  2 டீஸ்பூன் 

மிளகாய்ப் பொடி  6 ஸ்பூன் 

எண்ணை மூன்று  கப் 

தக்காளியை நன்றாக அலம்பி பொடிப்பொடியாக நறுக்கவும்.எவ்வளவு பொடியாக நறுக்குகிரோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் வேகும்.கேஸ் தட்டுப்பாடுக்கு சிக்கனமாக சமைக்கலாம்.

வாணலியில் எண்ணை வைத்து அதுக் காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் பெருங்காயம்,மஞ்சள் போடி, உப்புப் போட்டு ,மிளகாய்ப் பொடியையும் போட்டு ,கலந்து நறுக்கிய தக்காளியைப் போட்டு, அடிப் பிடிக்காமல் கிளறி விடவும். ஒரு சிறிய தட்டையோ  ,கப்பையோ போட்டால் அடிப் பிடிக்காது.

தொக்கு ஆனப் பதம் பார்க்க கரண்டியில் இருந்து கொட்டாமல் தனித் தனியாக தொக்கு விழணும் .

காற்றுப் புகாதப் பாத்திரத்தில் ஆறினப்  பிறகு எடுத்து வைக்கவும்.
சப்பாத்தி,பூரி, இட்லி, தோசை, அடை தயிர் சாதம் இவற்றிற்குத் தொட்டுக் கொள்ளலாம். 

No comments:

Post a Comment