Sunday, January 6, 2013

கடி ஜோக்ஸ் 16



 தண்ணீரைப் பனிக்கட்டியாக்கினால் என்ன மாற்றம் உண்டாகும்?

விலை அதிகமாகும், வேற என்ன?

....................................................................

தந்தை: டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?

மகன்: ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?

.............................................................

 ஆசிரியர்: திருக்குறளை எழுதியவர் யார்?

மாணவன்: எங்கப்பா சார்.

ஆசிரியர்: என்ன உளர்றே, யார் அவர்?

மாணவன்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துல பெயிண்டரா இருக்கார் சார்.

........................................................................

 ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?

வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தறே, பேசாம உன் தங்கச்சியை வரவழைச்சிடு!

.............................................................................

 மச்சான் நீயே சொல்லு, என்னைப்பாத்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?

அந்த பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.

....................................................................................

 அவன்தான் அவங்கவீட்டுல கதவுமாதிரி.

வீட்டுக்குத் தூண்மாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா கதவுமாதிரி.

அவன வீட்ல யார்வேணா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க!

....................................................................

 அந்த கிராமத்துல ஆண்-பெண் எல்லோரும் தினமும் யோகாசனம் பண்ணறாங்களாமே, களவு, குடில்லாம் இல்லாம எல்லோரும் நல்லவங்களா மாறிட்டாங்களாமே? நீ கேள்விப்பட்டியா?

இல்லைங்க, நான் கோவில்பட்டி.

..................................................................


 ஒரு விசேஷத்துக்காக வீட்டில் உறவினர்கள் கூடுகிறார்கள். அப்போது கேள்விப்பட்டது:

கிட்டாமணி எப்போ வரான்?

கலைல எட்டாம்மணிக்கு டாண்னு வந்துட்டான்.

குஞ்சுமணி?

சாயங்காலம் அஞ்சுமணிக்கு வருவான்.

ஆப்த சிநேகிதர்களா ரமணி ரமணின்னு ரெண்டு ரமணி இருக்காங்களே, அவாளும் வராளோன்னோ?

அந்த ரெண்டு ரமணியும் வர ட்ரெய்ன் ரெண்டரைமணிக்கு வருது.

ஏண்டா எடக்காப் பேசறதா நெனப்போ? அப்ப சூடாமணி, ராஜாமணி, பிச்சுமணிலாம்கூட வர்றாளே, அவாளுக்கும் பேருக்கேத்தமாதிரி டைம் சொல்லேன்?

நான் சொல்றது நெஜம்தான். அவாள்ளாம் எற்கனவே வந்தாச்சுண்ணா!

..........................................................................................


எங்க சலூன்கடையில கட்டிங் பண்ணிக்கிட்டா சேவிங் இலவசம்.

இதென்ன பெருசு? எங்க ஃபைனான்ஸ் கம்பெனில சேவிங் பண்ணினா மொட்டையே இலவசம்.


............................................................



 பர்ஸ் தொலைச்ச நேரமே சரியில்லடா.

ஏன்? என்ன ஆச்சு?


பர்ஸ்ல இருந்த என் அட்ரஸை வச்சு திருடன் வீட்டுக்கும்வந்து திருடிட்டுப் போய்ட்டாண்டா!


......................................................................



 மனைவி: ஏங்க, உங்க ஃப்ரெண்டுக்குப் பார்த்திருக்கற பொண்ணு நல்லாவே இல்லையே!
நீங்களாவது சொல்லக்கூடாதா?

கணவன்: நான் ஏன் சொல்லணும்?


மனைவி: நீங்க அவர் ஃப்ரெண்டுதானே?


கனவன்: அவன் மட்டும் எனக்குச் சொன்னானா என்ன?

...........................................................

 நம்ம தமிழ் ஆசிரியருக்கு ரொம்பத்தான் குசும்புடா.


ஏண்டா?


பரீட்சை அறை பிளாக்போர்டுல, ’படையில்லா மன்னர்போலக் கெடுமே விடையில்லா மாணவன் தாள்’னு எழுதி வச்சிருக்கார்டா.

..................................................................


 சார் எங்க கடையில துணி வாங்கினா அது லேசுல கிழியாது.

சும்மா பொய் சொல்லாதீங்க.


பொய் இல்லீங்க, உண்மைதான்.


இப்பகூட அவர் ரெண்டு மீட்டர் கேட்டபோது கிழிச்சித்தானே கொடுத்தீங்க?


.............................................................



 டீச்சர்: நான் முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஏழு.


டீச்சர்: கவனமா கேளு. முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?


சிறுமி: ஏழு.


டீச்சர்: சரி வேறு மாதிரி சொல்றேன். முதல்ல ரெண்டு ஆப்பிள் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு மொத்தம் எவ்வளவு? 


சிறுமி: ஆறு.


டீச்சர்: வெரிகுட். இப்ப மறுபடியும் முயல் கணக்கு பாரு. மொத்தம் எவ்வளவு? 


சிறுமி: ஏழு.


டீச்சர்: எப்படி? 


சிறுமி: எங்கிட்ட வீட்ல ஒரு முயல் இருக்கே!


.................................................................................



மார்த்தாண்டத்துக்கு கடைசி பஸ் எப்ப?

ராத்திரி 11 மணிக்கு.


அதுக்கு முன்னால?


அதுக்கு முன்னால பல்பு இருக்கும்.


..........................................



 என் தம்பி சரியான புத்தகப் புழு டி.

ஏன் எப்பவும் புத்தகமும் கையுமா இருப்பானா?


நீ வேற. அவன் புத்தகத்தை வெச்சுக்கிட்டு என்ன நெளி நெளியறான் தெரியுமா?


....................................................



 இந்த மாணவன்தான் எங்கள் பள்ளியில் நடந்த கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவன்.

எதைப் பற்றி கட்டுரை எழுதினான்?



'தண்ணீரின் பயன்கள்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கான்.


அப்படியா, நல்லது. உங்கப்பா என்ன பண்றாருப்பா?


பால் வியாபாரம்.

..............................................


வாத்தியார்: இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்.

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.


வாத்தியார்: அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே: நீ முட்டாள் என்று உனக்கு எப்படித் தெரியும்?


மாணவன்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார். நீங்க தனியா நிக்கறதைப் பார்க்கப் பாவமா இருந்தது. அதனால்தான் நானும் எழுந்து நின்றேன்.


...............................................



 ஜக்கு: என்ன மக்கு, வேலைக்கு சேர்ந்தியே என்ன கொடுக்கறாங்க?


மக்கு: சம்பளந்தான்.


ஜக்கு: அது சரிடா, என்ன கொடுக்கறாங்க?


மக்கு: பணம்தான்.

......................................


 சென்சஸ் அதிகாரி: உங்ககூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?

மக்கு: இருங்க சார், அம்மாகிட்ட கேட்டுக்கிட்டு வரேன்.


சென்சஸ் அதிகாரி: ?!?!?!


மக்கு: அன்னிக்கு மருத்துவமனையில மொத்தம் இருவது குழந்தைங்க பொறந்தாங்களாம் சார்!

.................................................................................

 டாக்டர்: இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு நாலு தடவை சாப்பிடணும்.


மக்கு: அது எப்படி டாக்டர் முடியும்?


டாக்டர்: ஏன் முடியாது?


மக்கு: ஒரு தடவை முழுங்கின அதே மாத்திரையை அதுக்கப்புறம் எப்படி இன்னொரு முறை முழுங்கமுடியும்?


......................................................................



 முதியோர் இல்லத்துக்கு அந்தப் பெரிய மனுஷன்கிட்ட நன்கொடை கேட்டது தப்பாப் போச்சு.
ஏன்?

அவரோட மாமியாரை நன்கொடையா எடுத்துக்கச் சொல்றார்.


..............................................................


-- 

No comments:

Post a Comment