Wednesday, January 16, 2013

கடி ஜோக்ஸ் 17



 கச்சேரிக்குத்தான் கூட்டம் வந்துடுச்சே...பாடகர் ஏன் பாடாமல் உட்கார்ந்து இருக்கிறார்?''


""மெளனராகம் பாடறாராம்!''

......................................................


"சங்கீத வித்வானுக்கு கடன் கொடுத்தது தப்பாப் போச்சே''


""ஏன்...என்னாச்சு?''


""திருப்பிக் கேட்டா ஒரே பஞ்சப்பாட்டு பாடுறார்''

.................................................................


"இப்படி சம்பந்தம் சம்பந்தமேயில்லாமல் பேசிக்கிட்டு போறாரே! யார் இவர்?''


""எங்க சம்பந்தி!''
.....................................................................


""டாக்டர் என் கணவன் எப்போ கண் திறந்து பேசுவார்?''


""பேசுவார்...ஆனா கண் திறந்து பேசமாட்டார். வாயைத் திறந்துதான் பேசுவாரு''

....................................................................................................


""உங்க பேங்க்ல கால்நடைக்கு லோன் கொடுப்பீங்களா?''


""கண்டிப்பா!''


""அப்படின்னா நான் பக்கத்து ஊர்ல இருந்து கால்நடையா 18 கிலோமீட்டர் நடந்த வந்திருக்கேன்; எனக்கு உடனே லோன் கொடுங்க'!:

..............................................................................................


""உங்க ஆஃபீஸ்ல மரம் நடுவிழா கொண்டாடுனீங்களே என்ன மரம் நட்டீங்க?''


""தூங்கு மூஞ்சி மரம்''

....................................................................


""உங்க மனைவிக்குப் பட்டுப்புடவை வாங்கித் தந்தீங்களாமே, காஞ்சிப்பட்டா?ஆரணிப்பட்டா?''


""கடன் பட்டு "

.......................................................................................


""ஆபரேசனுக்கு பின்னாடி கண் நல்லாத் தெரியும்னு டாக்டர் சொன்னார்''


""நல்லாத் தெரியுதுங்களா?''


""பின்னாடி எங்க தெரியுது. இப்பவும் முன்னாடிதான் தெரியுது''

..............................................................................


""பயில்வானுக்கு இரண்டு குழந்தைகளா?''


""ஆமாம். ஆஸ்திக்கு ஒண்ணு, குஸ்திக்கு ஒண்ணு''

......................................


""நீயும் உன் தம்பியும் எப்பவும் ரொட்டி சாப்பிடுறீங்களே''


""நாங்க ரொட்டி சகோதரர்கள்''

.................................................................................


'பேங்க் மேனேஜர்: என்னை ஏன்யா கட்டிப் பிடிக்கிறாய்?'


வந்தவர்: உங்களைப் பிடிச்சா லோன் கிடைக்கும்னு சொன்னாங்க'


...............................................................................................


வேலைக்காரன்: சாவியை என்னிடம் பொறுப்பாக வைத்திருக்கச் சொல்லி குடுத்தீங்களே...


வீட்டுக்காரர்: அதுக்கென்ன?


வேலைக்காரன்: இந்த சாவி எந்த பூட்டுக்கும் சேரலையே...

..........................................................................................


""பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?''


""பொங்கலுக்கு லீவு விடுவாங்க; இட்லிக்கு லீவு விடமாட்டாங்க!''


...................................................................................


""அவர் ஏன் ஒளிந்து ஒளிந்து மாவு அரைக்கிறார்?''


""நைஸா அரைச்சிட்டு வரச் சொன்னாங்களாம் அவரின் மனைவி''


...............................................................................


""டாக்டர், நீங்க எழுதிக்கொடுத்த மருந்தில உடம்பு கொஞ்சங்கூட வத்தல.குண்டாவேதான் இருக்கு''


""அப்படியா? உங்களுக்கு எந்த ஊருன்னு சொன்னீங்க?''


""வத்தல குண்டு''

..................................................................................................


""தலைவருக்கு பொதுஅறிவு கம்மின்னு எப்படிச் சொல்ற?''


""ஃபேஸ்புக் எந்தக் கடையில கிடைக்குமுன்னு கேட்கிறாரு''

.................................................................................................

""ராதாவுக்கு பத்து ரூபாய் கடன் கொடுத்தேன். அதில் ஒரு ரூபாய்  திருப்பித் தந்துவிட்டாள்...ஒன்பது ரூபாய் தரவில்லை. அவளை என்ன சொல்லுவ''


""நயன்'தாரா''

...........................................................................................


""இதுதான் சங்ககாலம்னு எப்படிச் சொல்றீங்க?''


""இந்தக் காலத்திலதான் எல்லாத்துக்கும் சங்கம் வச்சிருக்காங்களே, அதான்''

..............................................................................................

""ஏம்பா! சர்வர் சரக்கு மாஸ்டர் ஸ்பெஷலா என்னப் போட்டிருக்கார்?''


""லீவ் போட்டு இருக்கார் சார்!''
.........................................................

No comments:

Post a Comment