Friday, January 25, 2013

கண்ணின் மணி, கண்ணின்மணி ............நித்யஸ்ரீக்கு ஓர் கடிதம்

கண்ணின் மணி, கண்ணின்மணி  நித்யஸ்ரீ நிஜம் கேளம்மா. 
கங்கை நதி, வைகை நதி பெண் தானம்மா .....
பெண் நதியென்பது துன்பம் துயரம் தாங்கி வரும்......

நீ பாடிய இந்தப் பாடலை ஒரு முறை நினவு கூர்ந்து கேள். உனக்கே எல்லாம் தெளிவாகத் தெரியும்.

பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை, துன்பமும் இன்பமும் பிறர் தர வாரா.

வாழ்க்கை என்பதே ஒரு பயணம் மாதிரித் தான் ,பயணம் செய்கிறவர்கள் அனைவருமே ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடம் தெரிந்து தான் பயணச் சீட்டு வாங்குகிறோம்.

ஆடி அடங்கும் வாழ்க்கைக்கு ஆறடி நிலம் தான் சொந்தம் அதுவும் சில நாட்களுக்குத் தான். 

கடவுள் ஆட்டிவைக்க ஆடாதவர் யாரில்லை..

எல்லோருக்கும் பயணம் நன்றாக அமைவதும், வாழ்க்கைத் துணை நன்றாக அமைவதுமே இறைவன் கொடுத்த வரம் தான். யார் யாருக்கு எவ்வளவு நாள் தண்ணீர், உப்போ ,அவ்வளவு தான் கிடைக்கும். 

நாம் சாப்பிடும் ஒவ்வொரு தானியமும் நாட்களை குறித்து தான் நம் முன் வைக்கப் படுகிறது.

மனம் சலனப் படும் போது பகவத் கீதையைப் படி.

இந்த உலகத்தில் ஜனிக்கும் ஒவ்வொருவரும் ஒரு காரணத்திற்காகவே பிறப்பிக்கப் படுகிறார்கள்.




உன்னை சங்கீதத்திற்கு அர்ப்பணிக்க பிறவி எடுக்கச் செய்தான் கடவுள். நீ ஜனித் திருக்கும் குடும்பம் சாதாரணக் குடும்பம் அல்ல ,ஒரு சங்கீதப் பரம்பரை அதுவும் மூன்று தலை முறைக்கு! நான்காவது தலை முறையை கொண்டு வருவது உன் பொறுப்பு. திரும்பிப் பார்......

உன் மனம் குழம்பி  இருக்கும் போது, "அன்பிற்குப் பணி செய்ய உனக்கு ஒரு அழைப்பு'"  என்ற வேறு ஒரு மதப் பாடலைப் பாடிய பின்பு  உனக்கு அவை 'கடவுள் எனக்கு  இட்ட கட்டளையாக எண்ணிக்கொண்டேன் ' என்று நீயே ஒரு முறை சொல்லியிருக்கிறாய்! 

முக்கால் வாசி பெற்றோர்களின் திருமணங்களுக்கு முன்பே அவர்களுக்கு வரக்கூடிய மாப்பிள்ளை பிறந்து விடுகிறான். இது ஒரு நிதர்சன உண்மை. விதி வலியது, அது யாரை விட்டது? விதியின் முன்பே நாம் எல்லாம் பகடைக்காய்கள் தானே? நம்மால் வாழ்க்கையின் காய்களை அவனன்றி  நகர்த்த முடியுமா? விடைப் பெற்றுக்கொண்டு போக முடியாதது இறப்பே! இதுவும் ஒரு கசப்பான உண்மை!

மனிதன் பிறக்கும் போதே கையில் டிக்கெட் எடுத்து வருகிறான், உடல் என்று ஒன்று இருந்தாலும் அவன் இந்தப் பூமியை விட்டுப் போகும் போது அவனுடன் அவனுடைய 20 கிராம் ஆன்மா தான் போகிறது!




போகிறவர்கள் போய் விடுவார்கள் ! ...................................

இருக்கும் உன் இரண்டுக் கண்மணிகளுக்காகவாவது நீ நல்லத் தெளிவுடன் வாழவேண்டும்.அவர்கள் முகத்தைப் பார், என்ன' இன்னசென்ட் 'முகங்கள்.அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் இருவருக்கும் இறப்பு என்றாலே தெரியாத பருவம்.  அப்படி இருக்கும் போது  அவர்கள்  இழப்பை பற்றி என்ன அறிவார்கள்?

 லார்ட் டென்னிசனின் ,'ஹோம் தே ப்ராட் த வாறியர் டெட் ' ( Home They Brought Her Warrior Dead, by Lord Alfred Tennyson)என்கின்ற போயம் படி .நீ உன்குழந்தை களுக்காக, உன் கணவரின் நினைவுச் சின்னமாக நினைத்து, அவர்களுக்கு, அப்பா, அம்மா ,ஆசான், என்று எல்லா வேடமும் தரித்து அவர்களை யும் உன்னைப் போல ஒரு கர்நாடக இசைப் பாடகிகளாக ஆக்கப் பிரயத்தனம் செய். உன் மனம் கலங்கும் போதேல்லாம் அவர்களை நினைத்துக் கொள்.
உனக்கு அவர்கள் தான் பூஸ்ட், ஹார்லிக்ஸ் ,காம்ப்ளான் எல்லாம். 





நீ மனம் வருத்தப் படும் போதேல்லாம் ஆண்டவனை நினைத்து, எனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்தாயே, நான் என்ன ஒரு விளையாட்டு பொம்மையான்னு மனம் திறந்து பாடு. 

என்னப் புண்ணியம் செய்தேனோ,சத்குரு நாதா.......இது  நீ உன் முதல் குழந்தைப் பிறப்பதற்கு முன் உன் கணவன் உனக்கு மட்டுமேன்னு வாழ்ந்த ஏழு வருடங்களுக்காகன்னு பாடு. 

நிதி சால சுகமா...... என் புருஷனை என்னிடமிருந்து பறித்தாயே....ன்னு நினைத்து......

எல்லாம் இன்ப மயம் , இது வரை நான் அனுபவித்தது , இனிமேலும் அதேப் போல இருக்கணும்னு .....



ஆண்டவனாக உன்னை கலை உலகத்திற்கு படைத்தது இருக்கிறான். அந்தக் கலையை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதே உன்னுடைய கடமை.

என்னைப் போல சாதாரண மனிதர்கள் கவலையை மறப்பதற்காகவும், மனசை லேசாக ஆக்கிக்கொள்வதர்க்காகவும் இசையை நாடி வருகிறோம், எங்களை மகிழ்விப்பது  உன்னைப் போன்ற பாடகர்கள் தான் .

உன் குரல் வளம் , மைக்கே வேண்டாம் என்கிற அளவுக்கு கணீர் என்றக் குரல், உன் கை அசைவுகள், முகத்தில் வரும் பாவங்கள் , உன்னுடைய சிரித்த முகம் இவை எல்லாம் நாங்கள் திரும்பவும் பெற, நீ மேடைக்கு வரமாட்டாயா?

நீ என்றென்றும் பாடிக் கொண்டு தான் இருக்கணும் என்பது தான் என்னைப் போன்ற ரசிகர்களுடைய விருப்பம் . உன்னுடைய  சொல்லொணாத இழப்பை நாங்கள் முழுமையாக அறிந்தாலும் , உனக்கு வேண்டிய நேரத்தையும் காலத்தையும் நீ எடுத்துக் கொள்.


நீ சொன்ன அதே மோகனம், கல்யாணி ,ஆனந்த பைரவி எல்லாம் பாடி  அந்த அம்பாளே உன்னைப் பாட்டுப் பாட சொன்னதாக நினைத்து பாடு. உனக்கு நிச்சயம் உன் சங்கீதத் துறை பாடகர்களே துணை நிற்பார்கள், உனக்கு கையும் கொடுப்பார்கள், இது நடக்கப் போவது நிச்சயம். 


 மனசு லேசாக ஆனதும். உன் செல்வங்களுக்காகவும், உன்னுடைய மனத் திருப்திக்காகவும்,எங்களுக்காகவும்  நீ பழைய மாதிரி மேடை ஏறிக் கச்சேரி செய்யத் தான் வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் உனக்கு மனோ திடமும், மன வலிமையும் மனச் சாந்தியும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம் .


"ஆடுவோமே, பாட்டுப் பாடுவோமே,

அந்த  நித்யஸ்ரீ திரும்பவும் 
பாட வந்து விட்டாள் என்று"

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


clik on the links to read about her comeback .

http://creative.sulekha.com/the-nightingale-is-back-way-to-go-nithyasree_598184_blog

http://www.thehindu.com/arts/i-thank-everyone-nithyasri/article4389256.ece



4 comments:

  1. It touches the heart! I wish Nithyashree reads this and comes back to us!

    ReplyDelete
  2. Ganthimathi


    Re: கண்ணின் மணி, கண்ணின்மணி ............நித்யஸ்ரீக்கு

    Very touching.

    Hope Nithyashree is able to read this. Her music gives mental peace to lakhs of us across the globe. I am sure the same music will give her peace of mind and help her to over come this difficult period.
    ::::::::::::::::::::::::::

    very nice and touching words.Nithyashre read this na definitely she will get courage to live .

    :::::::::::::::::::::::::::::::

    Raji21

    Re: கண்ணின் மணி, கண்ணின்மணி ............நித்யஸ்ரீக்கு

    nice words...........::::::::


    g3sudha

    very well written...

    :::::::::::::

    swathi14

    Mathangi, nice thread. the wordings are so powerful. I am sure that if Nithyashree reads this, her sorrows will be reduced.

    great thought.

    andal

    :::::::::::::::::::::::
    mlsruthi


    Mathangi Amma

    I got tears in my eyes while reading this...We all have read the news about her husband's death...

    But, I felt bad for her...but never thought to post anywhere..be it fb, orkut or twitter...but when i read your poem..i can feel the pain..

    I pray to God that the Singer should overcome this stage in her life and shine again in the Music World.

    Thank you Amma...
    Warm Regards

    Sruthi

    ReplyDelete



  3. http://creative.sulekha.com/the-nightingale-is-back-way-to-go-nithyasree_598184_blog

    Welcome back, Nightingale Nithyasree!


    "Feb.3, Sunday evening was special at The Music Academy Madras/Chennai. For, it was a special concert to celebrate Sri Thyagaraja as an aradhana. Special by two well known vocalists - S Sowmya and Nityashree Mahadevan. Special because Nityashree came on stage a month after she bore a personal tragedy - losing her husband. And the wonderfulness of this concert was the free spirit, verve and passion with which Nityashree performed this evening. With that trademark smile and expressive eyes." (courtesy: Kutcheri Buzz)

    Sometimes our light goes out but is blown into flame by another human being. Each of us owes deepest thanks to those who have rekindled the light. ~ Albert Schweitzer


    They - Sowmya and Nithyasree - may be competitors alright but the picture above (courtesy: Kutcheri Buzz) clearly shows the basic human warmth and camaraderie between the two singers. Kudos to Sowmya for having shared the stage with Nithyasree yesterday. The first outing when you stage a comeback after a personal tragedy is the most difficult one and a little bit of support at that critical juncture, is of immense help indeed.



    Nithyasree, by bouncing back so soon, has proved that it is all about regenerative capability really because as somebody said "the issue is not simply surviving difficult times, or about emerging stronger, more capable, and wiser than before - it is about having your regenerative capabilities so that you can take advantage of newer opportunities and finally store the capacity to deal with yet another, inevitable downturn that is waiting beyond the bend."

    May Nithyasree go from strength to strength now and may she bless us all with her divine music! Here's wishing her all the very best!

    http://www.youtube.com/watch?v=yFJrnfO9rjE

    ReplyDelete



  4. Nithyasree Thanks thro The hindu



    http://www.thehindu.com/arts/i-thank-everyone-nithyasri/article4389256.ece

    ReplyDelete