'ஏம்மா ,நீ பண்றது ஒனக்கே நல்லாஇருக்கா?'
'என்னப்பா சொல்றீங்க?'
'நீயே மாப்பிள்ளையோட அந்தச் சக்களத்திய இங்கேயே ஒன்கூட குடுத்தனம் வைக்கப் போறேன்னு ஒங்கம்மா சொன்னாளே , அது நிஜமா?'
'கசப்பான நிஜம் அப்பா, எனக்கு வேற வழி தெரியலை,தப்பாவும் படலை.'
'புத்தி கெட்டவத்தான் இப்டி தன் தலையில மண்ணை வாரிப் போட்டுப்பா '
'மண்ணும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்ல, நானே தெளிவா, யோசிச்சு எடுத்த முடிவு, இதுக்கு அந்த நாட்டிய செல்வியும், அவள் பொண்ணும் ,உங்கள் மாப்பிள்ளையும் 'எஸ்'னு சொல்லியாச்சு, வர புதன் கிழமை எல்லோரும் ஒண்ணா சேரப் போறோம்'
'எப்டியோ நீ நல்லா இருந்தா சரி,' துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு ஊஞ்சலில் இருந்து இறங்கி செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினார் மாலா வோட அப்பா, கைலாசம்.
மாலா ,மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் , எனக்கு புத்தி கெடலை அப்பா, காலா காலத்தில் நான் பூப்பு எய்தி இருந்தால், இந்தக் முடிவுக்கே வந்திருக்க மாட்டேன் அப்பா, இதை எப்படி நான் வெளியில் சொல்வேன்!' இன்று நான் ஐம்பதில் நடந்துக் கொண்டிருக்கிறேன், ஏன் வாழ்க்கை இனிமேலா விடியப் போகிறது?
No comments:
Post a Comment