இப்பொழுதெல்லாம்,பூங்காவில் ,கணவன் ,மனைவி, தாத்தா, பாட்டி,ஆயா என்று எல்லோரையும் காணலாம்.
நான் நிறைய முறை என் பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போயிருக்கிறேன். சில அம்மாக்கள் பசங்களை மணல் 'பிட்'டில் விளையாட விட்டு விட்டு அவர்கள் பாட்டுக்கு காதில் செல்போனை வைத்துக் கொண்டு பேசிக்கொண்டே இருப்பார்கள்.
எனக்கு சில சமயம் தோணும், இந்தப் பார்க் விசிட்டினால் குழந்தைகளுக்கு என்ன கிடைக்கிறது? அவர்களுக்கு வீட்டிலிருந்து சுதந்திரம், அம்மாக்களுக்கு வெளியே வந்து சுதந்திரம்.....
பசங்களுக்கு மணலில் விளயாடுவதனால் குஷி, இல்லாவிட்டால் வீட்டிலே எங்கே விளையாட முடியும்?
மற்றப் பசங்களில் சிலருக்கு அம்மா ஆயா கூடவே இருந்து விளையாடவும், மணலில் வீடு, கட்டவும் சொல்லித் தருகிறார்கள்.
ஒரே ஒரு கவலை என்ன வென்றால்,சில சமயம் குழந்தைகள் அங்கேயே யூரின் பாஸ் செய்து விடுகிறார்கள், அந்த ஈர மணலிலே எல்லோரும் விளையாடுகிறார்கள்.இதில் எத்தனை பேர் வீட்டுக்கு சென்றது கை கால்களை அலம்புகிறார்கள்?
அதுவும் சோப்பு போட்டு?
நேத்து இது தான் நடந்தது, நான், என் மருமகள், பேத்தி சகிதம் கோரமங்களா 5 த் ப்ளாக் பார்க்குக்குப் போனோம். அங்கே இரண்டு மூன்று குழந்தைகள் எல்லாமே பெண்கள் ,சிலர் அப்பாவுடன், அம்மாவுடன் வந்திருந்தார்கள்.அதில் வந்த ஒரு அப்பா, காதிலிருந்து போனை எடுக்க வேயில்லை அவனோடப் பெண் என் பேத்தியுடனேயே சுத்தி சுத்தி வந்தது.

நாங்களும் முடிஞ்ச வரை அந்த பெண்ணை சறுக்கு மரத்தில் விளையாட கூப்பிட்டோம், அதுவோ அப்பா பின்னாடியே போய்க்கொண்டிருந்தது .விளையாடவும் இல்லை, விளையாடனும்னு ஆசையும் இருக்கு, ஆனால் அப்பாக்காரன் ஒத்துழைத்தாத்தானே "
அந்த பொண்ணும் ஊஞ்சல் ஆடுகிறவர்கள் முன்னடிப் போய் நிற்கிறது. எங்கேயாவது அடிப் பட்டால் யார் பொறுப்பு?
கடைசிவரைக்கும் அந்தப் பெண் விளையாடவேயில்லை .
இப்படியும் சில அப்பாமார்கள்!
No comments:
Post a Comment