Friday, November 30, 2012

கலாட்டக் கதம்பக் குடும்பம் -முன்னுரை

கூட்டுக் குடும்பத்தில் கலாட்டக் கதம்பக்  குடும்பம் எங்கள் குடும்பம்.நாங்கள் குறைந்தது ஒரு டஜன், சில சமயம் அதற்கும் மேலே ! என்ன கண்ணு போடறீங்களா?  நாங்க இருந்த தெருவே மூக்குல விரலை வச்சு மூக்கும், விரலும் வலிச்சதுதான் இன்னும் வலிக் கொறயலே .

" என்னம்மா இத்தனையும் நீங்க ஒண்டியாவேக் கட்டினீங்களா ?"

,"ஆமாம் சுந்தரி", "எதுக்குக் கேக்கறே?"

இல்ல...... ஒங்களுக்கு இடுப்பு வலிக்கலையா?"

"இல்லையே! எனக்கு பூ தொடுக்கரதுன்னா ரொம்பப் பிடிக்கும்.சின்ன வயசிலிருந்தே பழக்கம் .நாங்க அஞ்சு வயசா இருக்கும்போதே கோவிலுக்குப் போயி பூ தொடுத்து தருவோம். கொஞ்சம் கொஞ்சமா பூ தொடுக்கக் கத்துண்டோம்  "

"ஐயோ எப்டிதான் தொடுக்கரீங்களோ ,என்னாலல்லாம் ஒங்களை மாதிரி ஒரேயடியா செய்ய முடியாது'

'எதுவுமேக் கஷ்டம்னு நினச்சா கஷ்டமாத்தான் தெரியும் சுந்தரி,நான்  கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்ததுனால ,இது ஒரு பொருட்டாவே நினைக்கறது இல்ல',
கொஞ்சம் கொஞ்சமா பூ தொடுக்கக் கத்துண்டோம் .......


...........................இது எனக்கும் என்னுடைய வீட்டு வேலைக்காரிக்கும் நடந்த உரையாடல் , வரலக்ஷ்மி விரதத்தை ஒட்டி நான், என்னுடைய பெரியப்பா மகள் மாலினி, வாங்கி வந்த மல்லிப்பூ ( கிலோ 1500 ருபாய் ) எடுத்து தொடுத்துக் கொண்டிருக்கும் போது நடந்தது.

சரி இப்போ, நாங்கள் கூட்டுக் குடும்பத்தில் பண்டிகை விசேஷம் வந்தால் என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்று மனம் விட்டு எழுதப் போகிறேன்.
ரெடியா ?
* * * * *

2 comments:

  1. Wow Manni, What a beautiful way of telling our golden moments in the joint family set up. To add up, the training we got those days without forcing it as a training for house chores, poojas, cooking etc., made a girl to become a complete woman and to take up the so call home maker with ease and expertise. What all the aspects it included-team work, delegation, sharing, harmony, culinary expertise, good health, what not? Is there any university or college give all these aspects without charging single pie? Todays girls, can you challenge us? With all these aspects, we still do not argue and question the elders' advice. We do not talk toungulish and snub the rituals, culture and meaning behind everything-with the single goal of family harmony. Manni, please include idly/dosa grinding, vadam podaradhu, ullakkail mavvu idikeradhu, yendirathil uppma rava udaikerudhu, marudhani arachu ittukiradhu (not mehandi sangeeth?) etc., Amarkalam Manni. Go ahead I also join you at times.

    ReplyDelete
  2. கௌரி, நீ பாகம் ஒண்ணைப் படித்தாயா? நீ எழுதியதெல்லாம் வைத்து எழுதத் தான் போறேன், தேங்க்ஸ் பார் த டிப்ஸ் .

    ReplyDelete