Wednesday, November 28, 2012

கடி ஜோக்ஸ் 15




 குரைக்கிற நாய் கடிக்காது.


எப்படிடா அவ்ளோ உறுதியாச் சொல்றே?


ஒரே சமயத்தில அதால ரெண்டு வேலையை செய்யமுடியாது, அதான்.


...........................................................................................


 எங்கப்பா சம்பாதிச்ச துட்டு எல்லாத்தையும் குடியிலே அழிச்சிட்டார்.


அடப்பாவமே, உனக்கு ஒண்ணும் விட்டுவைக்கலையா?


ஒரு சொட்டுகூட வைக்கலை.


...................................


 எனக்கு ஒரு சந்தேகம்டா.


என்னடா, கேளு.


பைக் இருந்தா ஓட்டத்தோணுது, டி.வி. இருந்தா பாக்கத்தோணுது...


இதில் என்ன சந்தேகம்?


ஆனா புக் இருந்தாமட்டும் படிக்கத்தோணலையே!


.........................................................


ஏங்க இப்படியே நான் சமைச்சி சமைச்சி போட்டுக்கிட்டு இருக்கேனே, எனக்கு என்னதான் கிடைக்கப்போகுது சொல்லுங்க.


இப்படியே சமைச்சின்னா கூடிய சீக்கிரம் என்னோட எல்.ஐ.ஸி. பணம் கிடைச்சிடும்.

.............................................................................................

 உன் மனைவி உடம்பைக்குறைக்க குதிரை சவாரி செஞ்சாங்களே, பலன் இருந்ததா?


ஓ இருந்ததே! இருபது கிலோ எடை குறைஞ்சது.


நெஜமாவா?


எடை கொறஞ்சது குதிரைக்குன்னு சொல்லவந்தேன்.

...................................................................


 என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு முயற்சி செய்துபார்த்தாலும் அழுகையே வரமாட்டேங்குது. என்ன செய்யறது?


ஒண்ணும் செய்யவேண்டாம். அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சிக்க. அழுகை தானா வரும்.


.......................................................................................


 அந்த விமன்ஸ் கிரிக்கேட் டீம்ல இருக்காளே ஸ்பின் பௌலர், அவள் பேர் என்ன தெரியுமா?

தெரியாதே?

திருப்புற சுந்தரி. 


அவளைவிட பெட்டரா டாப் ஸ்பின் பௌலிங் போடறவ எதிர்த்த டீம்ல இருக்கா, அவள் பெயர் தெரியுமா உனக்கு?


என்ன?


பால திருப்புற சுந்தரி.


...................................................................................


 என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே கிளினிக்கைத் திறந்து வெச்சிகிட்டு இருக்கீங்க?


தூக்கத்துல நடக்கற வியாதிக்காரன் எவனாவது வருவான்னுதான்.


........................................................................



 கணவன்: என்னது இதூ, தினசரி பேப்பர் விலை ஏறிகிட்டே போகுது?


மனைவி: நீங்தான் எந்தப் பேப்பரும் வாங்கறது இல்லை. அப்புறம் என்ன கவலை?


கணவன்: நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு கஞ்சன். இப்படி விலை ஏறினா பேப்பர் வாங்கறதை நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்.


........................................................................


 என்ன சார் நீங்க இவ்வளவு உரிமையோட எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்களே சாப்பாடு எடுத்துப்போட்டு சாப்பிடறீங்க?


நான் உங்க சொந்தக்காரன் சார்.


எப்படி?


என் வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் தூரத்து சொந்தம்.


............................................................................


 என்ன டாக்டர், அந்த பேஷண்டுக்கு ஆஸ்பத்திரில குடுத்த உடைமுழுக்க ஏதேதோ கம்பெனி விளம்பரமா இருக்கு?

அந்தக் கம்பெனிகள் எல்லாம் சேர்ந்துதான் அவரோட அறுவை சிகிச்சைக்கு ஸ்பான்சர் பண்றாங்க.


சரியாப் போச்சு.

......................................................

 இவங்க ரெண்டும் எனக்குப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள்.


ரொம்ப சந்தோஷம். அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?


.......................................................................



அவனுக்கு ஆனாலும் ரொம்ப கொழுப்புடா?


எப்படி சொல்றே?


உங்க வீட்டுத் திண்ணையில உக்காந்திருக்கறது உங்க பாட்டியாடான்னு கேட்டா, அவங்கதான் எங்க வீட்டு ரிசப்ஷனிஸ்ட்டுங்கறான்!

......................................................


 டேய் மச்சான், தலைக்கு ஷாம்பூபோட்டுக் குளிப்பது நல்லதா, சீயக்காய்போட்டுக் குளிப்பது நல்லதா?


மொதல்ல நீ பாத்ரூமுக்குத் தாழ்ப்பாள்போட்டுக் குளி, அதுதான் எங்களுக்கு நல்லது.


.........................................................................


நீ செய்த குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.


எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்?

..................................................................

அவர் ரொம்ப கலரா இருந்தார். இப்பக் கருப்பாய்ட்டார்.


காக்கா பிடிக்கறதே வேலையாய் இருந்தா இப்படித்தான்.


............................................................................


 ஏங்காணும், நாமெல்லாம் விபூதி இட்டுக்கறச்சே தலயை ஸ்திரமா வெச்சிண்டு விரலலால இழுத்து இட்டுப்போம். உங்க ஷெட்டஹர் என்னடான்னா விரலை ஸ்திரமா வெச்சுண்டு தலை ஆட்டி இட்டுக்கறாரே? ஏன்?


யார் கண்டா? ஆத்துக்காரிக்குத் தலயாட்டியே பழக்கமோ என்னவோ?.


............................................................



 அவ்வளவு பெரிய வண்டியில அடிபட்டும் எப்படிங்க கத்தாம அமைதியா இருந்தீங்க?


அது நடமாடும் நூலக வண்டிங்க. கத்தினா அவராதம் விதிப்பாங்களோன்னு பயந்துட்டேன்.


..............................................................................


 எங்கப்பாக்கு இன்டர்நெட்னா என்னனு தெரியலைடா?


எப்படி சொல்றே?


அது வாங்கினா கொசு கடிக்காம இருக்குமான்னு கேக்கறார்.


..............................................................


 டாக்டர், என்னோட வீட்டுக்காரர் சாகப் பிழைக்க இருக்கார். நான் உங்களைத்தான் நம்பியிருக்கேன்.


எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சும்மா.


.....................................................................


 என்ன கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ரெண்டு பொண்ணுங்க என் பின்னாலேயே அலையறாங்கடா?

அப்படியா, யார்டா அவங்க?


வேற யாரு, என் அம்மாவும் ஆயாவும்தான்!


............................................................................................


 எங்க மாதர் சங்கத்தில எல்லோருக்கும் குழந்தை பிறந்தாச்சு. அதனாலே...

அதனாலே?

பெயரை மதர் சங்கம்னு மாத்திட்டோம்.


..................................................


 தண்ணீரைப் பனிக்கட்டியாக்கினால் என்ன மாற்றம் உண்டாகும்?


விலை அதிகமாகும், வேற என்ன?

....................................................................


தந்தை: டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?


மகன்: ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?


.............................................................


 ஆசிரியர்: திருக்குறளை எழுதியவர் யார்?


மாணவன்: எங்கப்பா சார்.


ஆசிரியர்: என்ன உளர்றே, யார் அவர்?


மாணவன்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துல பெயிண்டரா இருக்கார் சார்.


........................................................................


 ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?


வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தறே, பேசாம உன் தங்கச்சியை வரவழைச்சிடு!


.............................................................................


 மச்சான் நீயே சொல்லு, என்னைப்பாத்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?


அந்த பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.


....................................................................................


 அவன்தான் அவங்கவீட்டுல கதவுமாதிரி.


வீட்டுக்குத் தூண்மாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா கதவுமாதிரி.


அவன வீட்ல யார்வேணா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க!


....................................................................


 அந்த கிராமத்துல ஆண்-பெண் எல்லோரும் தினமும் யோகாசனம் பண்ணறாங்களாமே, களவு, குடில்லாம் இல்லாம எல்லோரும் நல்லவங்களா மாறிட்டாங்களாமே? நீ கேள்விப்பட்டியா?


இல்லைங்க, நான் கோவில்பட்டி.


..................................................................



 ஒரு விசேஷத்துக்காக வீட்டில் உறவினர்கள் கூடுகிறார்கள். அப்போது கேள்விப்பட்டது:


கிட்டாமணி எப்போ வரான்?


கலைல எட்டாம்மணிக்கு டாண்னு வந்துட்டான்.


குஞ்சுமணி?


சாயங்காலம் அஞ்சுமணிக்கு வருவான்.


ஆப்த சிநேகிதர்களா ரமணி ரமணின்னு ரெண்டு ரமணி இருக்காங்களே, அவாளும் வராளோன்னோ?


அந்த ரெண்டு ரமணியும் வர ட்ரெய்ன் ரெண்டரைமணிக்கு வருது.


ஏண்டா எடக்காப் பேசறதா நெனப்போ? அப்ப சூடாமணி, ராஜாமணி, பிச்சுமணிலாம்கூட வர்றாளே, அவாளுக்கும் பேருக்கேத்தமாதிரி டைம் சொல்லேன்?


நான் சொல்றது நெஜம்தான். அவாள்ளாம் எற்கனவே வந்தாச்சுண்ணா!


..........................................................................................

No comments:

Post a Comment